Home » Cover Story » தன்னம்பிக்கை + உழைப்பு = வெற்றி

 
தன்னம்பிக்கை + உழைப்பு = வெற்றி


மனியன்
Author:

சிறிய வியாபாரங்களில் (Small scale business) சில குறிப்பிட்ட நபர்களே வெற்றி பெறுகிறார்கள்.

வெற்றி பெறாதவர்கள் கூறுவதோ ஆயிரம் காரணங்கள் : நேரம் சரியில்லை. முதல் கடையின் அமைப்பு சரியில்லை வரை.

ஆனால், வெற்றி பெற்றவர்கள் கூறுவதோ சில விஷயங்கள், ஆம்! தம்மால் முடிந்த செயல்களை முதன்மைப்படுத்துகிறார்கள்.

அவர்களின் வெற்றி ரகசியத்தை அறிய, கோவையில் உள்ள ஒருவரை கண்ட பேட்டியின் சாரம்;

தன்னம்பிக்கை : இந்த அடுக்கு மாடி (Shopping Complex) கட்டிடத்தில் பல கடைகள் இருந்தும், வாடிக்கையாளர்கள் உங்கள் கடைக்கு அதிக அளவில் வருகிறார்களே! ஏன்?

மனியன் : 1 எந்த வியாபாரமாயிருந்தாலும், முதலில் வாடிக்கையாளர்களுக்கு நமது வாடிக்கையாளர்களுக்கு நமது கடையில் மரியாதை அளிக்க வேண்டும். உதாரணமாக, ஒன்று, ஹலோ! என்ன வேண்டும்? என்று கேட்பது. இங்கு ‘வாருங்கள், என்ன பொருள் வேண்டுமா? என பணிவுடன் கேட்பது. அதில் இரண்தாவதாக குறிப்பிட்ட பணிவு வார்த்தைகளால், வாடிக்கையாளர்கள் மரியாதைப்படுத்தப்படுகிறார்கள்.

2. அடுத்ததாக, நம் வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், அதை வீட்டோடு விட்டு விட்டு, கடையில் இருக்கும்போது பணிவான முகம் தேவை. மாறாக, நான் எப்போதும், இறுக்கமான முகத்துடன் இருந்ததில்லை.

3. ‘ Quick Service ‘ வாடிக்கையாளர்களின் நேரத்தை நான் மதிக்கிறேன்.

4. ‘சுத்தம் சோறு போடும்’ என்ற பழமொழியை நான் மதிக்கிறேன், என் கடை எப்போதும் சுத்தமாக இருக்கும்.

‘ தன்னம்பிக்கை ‘ : தமிழர்கள் என்றாலே சுத்ததமில்லாதவர்கள் என முகம் களிக்கும் கேரள மாநிலத்தவர்களையும், தாங்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக பெற்றிருக்கிறீர்களா? எப்படி சாத்தியமாகிறது?

மணியன் : நான் எப்போதும், எனது முகத்தில் சோகத்தில் கோடுகளை படர விட்டதில்லை. எப்போதும் ” Clean shaved ” ஆக இருப்பேன். அதிக ”sales” ஆக வேண்டும் என்பதற்காக ஆடம் பரமான, பகட்டான உடையை அணிந்ததில்லை. வாடிக்கையாளர்களில், வசதி படைத்தவர்கள் பலர் வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் நான் அவர்களைவிட உயர்ந்தவன் என காட்டிக் கொள்ளமாட்டேன். அதனால் கிழிந்த உடைகளை உடுக்க மாட்டேன். ” Be simple and humble ” என்பதை நான் கடைப் பிடிப்பதால் வீண் பேச்சுக்களை தவிர்த்து தன்னம்பிக்கையுடன் செயல்படுவது கேரள மாநிலத்தவரை கவர்வது ஆச்சரியம் இல்லை.

தன்னம்பிக்கை
: ஒரு நிரந்தர வாடிக்கையாளரும், அறிமுகமில்லாத புதிய வாடிக்கையாளரும், அறிமுகமில்லாத புதிய வாடிக்கையாளரும் உங்கள் கடைக்கு ஒரே நேரத்தில் வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். உங்கள் சேவையில் யாருக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?

மணியன்: வாடிக்கையாளர்களின் சேவையில் பாகுபாடு கூடாது. ஆனால் நிரந்தர வாடிக்கையாளர்கள் என்பவர்கள் நமக்கு ‘ உறவினர்கள் ‘ போல. எனவே ‘சார்! ஒரு நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள் ‘ என கூறி விட்டு. புதிய வாடிக்கையாளருக்கு என்ன தேவை என வினவும் போது வாடிக்கையாளாரின் உறவு (Customer relation ) மேலும் வலுடைகிறது. எனது ‘ மனித நேயத்தை ‘ இங்கு உபயோகிப்பேன்.

தன்னம்பிக்கை : உங்களது பொருட்களின் ‘தரத்தை’ ( Quality ) பற்றி………?

மணியன் : நான் இங்கு வைத்துள்ள பொருட்களில் பெரும்பாலானாவற்றை நானே உபயோகித்து அவற்றின் தரத்தை உணர்ந்துள்ளேன். பிற விலையுயர்ந்த பொருட்களின் தரத்தைப் பற்றி அதை வாங்கிச் செல்லும் நிரந்தர வாடிக்கையாளர்களிடமிருந்து ( Customer feed back ) தெரிந்து கொள்வேன். வாடிக்கையாளர்கள் விரும்பாத பொருட்களுக்கு என் கடையில் இடமில்லை.

தன்னம்பிக்கை : தாங்கள், சிறிய வியாபாரத்தில் ஈடுபடவிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு கூற விரும்புவது?

மணியன் : சோம்பல், சந்தேகம், பயம், அவநம்பிக்கை இவற்றை முதலில் தூக்கி எறிய வேண்டும். நான் தினம் ‘தன்னம்பிக்கை’ யுடன் கடையை திறக்கிறேன். என்னால், இன்று திறம்பட உழைக்க முடியும், பல புதிய வாடிக்கையாளர்களை பெற முடியும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறேன். இரவு கடையை மூடும் பொழுது வியாபாரம் திருப்திகரம் என்று மகிழ்ச்சி வீட்டிற்கு செல்கிறேன். இதற்கு நான், எனது நேரம், ஜாதகம் என்று சாக்கு சொல்ல விரும்பவில்லை. அதனால், எனக்கு ‘இறை நம்பிக்கை ‘ இல்லை என்று அர்த்தமில்லை. ஆண்டவனால் நமக்கு கடலைத் தான் தரமுடியுமே தவிர, நாம் கடவுளை பிரார்த்தித்தால், நம் கையிலே கடலிருந்து மீன் தாவி ஓடி வந்து விழுந்துவிடாது. நாம் தான் மீனைப்பிடிக்க வேண்டும். அதற்கு தேவை, நம்பிக்கை, உழைப்பு.

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1997

சிந்தனைத் துளிகள் – 1
இதுவரை நாம் சாதித்தது என்ன?
தன்னம்பிக்கை ஓர் பப்பா
சேமிப்பு ' தன்னம்பிக்கை ' யை கூட்டும்
வெள்ளாடுகளான நாம் நமக்குள் மோதிக் கொண்டால்… ஒநாய்களுக்கு லாபம்
''முயற்சியுடையார், இகழ்ச்சியடையார் ''
சிந்தனைத் துளிகள்
முன்னேற்றப்பாதை
y2k வைப்பற்றி அறிந்து கொள்ள
எந்த கல்வி மாணவரிடத்தே பண்பாட்டை,
தேவை 'தன்னம்பிக்கை' கல்வி
முயற்சியுடையார்; இகழ்ச்சியடையார்
எண்ணமே வாழ்க்கை
சூழ்நிலைகளும் முறையான மனப்போக்கும்
நினைவாற்றல் மேம்பட மனப்பயிற்சி
தன்னம்பிக்கை + உழைப்பு = வெற்றி
சேவையே வெற்றி
எல்லோரும் உயரலாம்
திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம்