Home » Articles » சேமிப்பு ' தன்னம்பிக்கை ' யை கூட்டும்

 
சேமிப்பு ' தன்னம்பிக்கை ' யை கூட்டும்


சுகி சிவம்
Author:

– சங்கர்

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அழைப்பு மணி அழைக்க, கதவை திறந்தேன். ஒரு வாலிபர் தன்னை ஒரு முகவர் என்று அறிமுகம் செய்து கொண்டார். உள்ளே இருக்கையில் அமரச் சொன்னேன். தான் ஒரு இரண்டு சக்கர வாகன டீலரின் கடையிலிருந்து வருவாதாக சொன்ன அவர். என்னைப் பற்றி விசாரித்தார். பின்பு, எனக்கு விருப்பமிருந்தால், குறைந்த வட்டியில், தவனை முறையில் எனக்கு ஒரு வாகனத்தை தருவதாகவும் கூறினார், நான் லேசான மறுப்பு மொழியை கூறி அனுப்பி வைத்தேன். அதற்கு பின்பு யோசிக்க ஆரம்பித்தேன்.

எப்போதோ அமைக்கப்பட்ட குறைந்த சாலைகளில் இவர்கள் நாளுக்கு நாள் வாகனங்களை அதிகரிக்கிறார்களே, இதனால் விபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதே அதை இவர்கள் யோசித்தார்களா? பெட்ரோல் நம் நாட்டில் இல்லை. அரேபிய நாடுகளிடமிருந்து அன்னிய செலாவனி கொடுத்து முழுவது மாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் இல்லாத பொருளுக்காக நாம் ஏன் அதிக விலை கொடுக்க வேண்டும்? அப்படி என்ன நம் நாட்டில் எல்லோரும் இரண்டு சக்கர வாகனத்தை வாங்கும் நிலையில் இருக்கிறார்கள்? இது போகட்டும். அவர்கள் எனக்கு வேண்டாம் என்றாலும் எனக்கு கடன் கொடுத்துவிட்டு என் தன்னம்பிக்கையை அல்லவா பறிக்க முயலுகிறார்கள். கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?’

ஒருவரின் தன்மானத்தை / தன்னம்பிக்கையை இழக்க மேலே கூறியது உதாரணம் மட்டுமே. இக்கட்டுரையின் நோக்கமே ‘ யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே ‘ என்பதைப்போல தீபாவளிக்கு கடன் வாங்கி செலவு செய்தும், பாடுபட்டு உழைத்த பணத்தை வீண்செலவு செய்தும் எப்படி பலரும் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள் என்று எண்ணியதுதான்.

இது எங்கள் பிரச்சினை இதிலே யாரும் தலையிட முடியாது. என சிலர் வாதிடலாம். ஆனால்,விவரங்களை அறியும் போது நீங்கள் ‘ உலக மகா சிக்கனவாதி ‘ யாக மாறிவிடுவீர்கள். எந்த வருடத்திலும் நடந்திராத, வண்ணம் பல நிறுவனங்களில் ‘ ஆட் குறைப்பு ‘ என்று சமீபத்தில் நடந்துள்ளது. என்ன காரணம் என்பது பலருக்கும் தெரியும். அந்த நிறுவனங்களின் பொருட்களுக்கு தேவையான ‘ ஆர்டர் ‘ இல்லை விற்பனை குறைவு என பல காரணங்கள். இந்த நிலையிலே ‘ போனஸ் ‘ எவ்வளவாகயிருக்கும். இப்படி வரவு குறைந்துவிட்ட போது, செலவை சுருக்கித் தானே ஆக வேண்டும். இரண்டு சக்கர வாகனங்களில் ‘ Mileage ‘ என்பது எப்படி ஒரு மாயையோ, அது போல தீபாவளி தள்ளுபடி என்பதும் மாயையே, மாயைக்கு மயங்கினீர்கள் ஆனால், ‘ தீபாவளி ‘ சென்ற பிறகு ‘ தன்னம்பிக்கை ‘ இழந்து தள்ளாட வேண்டியிருக்கும். இந்த குடும்ப தலைவன் தான். குழந்தைகளின் உணர்வு களை மதிப்பவன் அவர்களை திருப்திப் படுத்த சிறிய அளவிலே ‘ பட்டாசு களை ‘ வாங்கி வெடித்து அவர்களை மகிழ்விப்பேன். மற்ற குழந்தைகள் புதிய ஆடைகளை உடுத்தும்போது நம் குழந்தைகளும் உடுத்த வேண்டாமா? என நீங்கள் கேட்பது தெரிகிறது. அதை தீபாவளி நெருக்கத்திலா சென்று வாங்குவது. வெகு முன்னரே முன்னரே சிறிய அளவில் செலவு செய்து வாங்கிவிடுவேன். ‘ விரலுக்கு தகுந்த வீக்கம் ‘ – தானே நல்லது.

ஒன்றைய ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். ஒரு ஐந்து ஆயிரம் ரூபாயை செலவழிப்பது மிக எளிது. ஆனால் அதை சம்பாதிக்க எவ்வளவு பாடுபட வேண்டியுள்ளது. மேலும், இந்த ஐந்தாயிரத்தில், 4 ஆயிரம் ரூபாய் உங்கள் சேமிப்பாக இருந்தது என்று வைத்து கொள்வோம், உங்களுடைய ‘ நடையே ‘ ராஜ நடையாக இருக்கும்.

முன்னேற்றம் உங்கள் கைகளில்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment