Home » Editorial » எண்ணமே வாழ்க்கை

 
எண்ணமே வாழ்க்கை


admin
Author:

நமது சமுதாய முன்னேற்றத்தின் முட்டுக்கட்டையே நம் மனத்தில்தான் இருக்கிறது. யாராவது வந்து நம்தைத் தூக்கிவிட வேண்டும் என்று ஏங்கி நிற்கிறோம். மற்றவர்களை நம்பி எதிர்பார்த்துக் காத்திராமல் என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மிகுந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

இத்தகைய சமுதாயத்தை உருவாக்க முடியாது என்பதல்ல. இதனையே இலட்சியமாகக் கொண்டு இதுவரை யாரும் முயற்சிக்கவில்லை என்பதே உண்மை. ஒரு சிலர் வெவ்வேறு கால கட்டங்களில் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் இறுதிவரை போராட வரவில்லை. பலருக்கு ஒரு குறிப்பிட்ட வெற்றி கிடைத்தவுடன் திசைமாறிச் சென்றுவிட்டனர்.

இந்த முயற்சியைத்தான் இலட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது. தன்னம்பிக்கை மாத இதழ். இதனைத் தனி மனிதர்களாகச் செய்ய முடியாது. தனி இயக்கம் வைத்துப் போராடி நேரத்தை வீணடிக்கவும் விரும்பவில்லை. நமது இலட்சியத்தைப் புரிந்து கொண்டு நமது அளவில், நமது குடும்பம், நாம் சார்ந்துள்ள சமுதாயம், தெரு, ஊர் நம்முடைய நண்பர்கள் ஆகியோரிடையே வழி காட்டியாக நாமே செயல்படுவோம்.

இந்தச் சமுதாயம் எழுச்சி பெற்று எழுந்து நிற்க தன்னம்பிக்கை தளபதிகளாக நீங்கள் மாற வேண்டும். தன்னம்பிக்கை படிப்பவர் ஒவ்வொருத்தர் உள்ளத்தாலும் நாம் எதற்கும் சளைத்தவர் அல்ல. பல கோடி மக்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமை இல்லை. இந்தத் துறையில், இந்தப் பணியில் இதுவரைப் போல் பிறரும் இருக்க வேண்டும் என்று சொல்லிப் பெருமைப்படும் வாழ்க்கை வாழ வேண்டும். அதையே ஒவ்வோரு தன்னம்பிக்கை வாசகர்களிடமும் எதிர்பார்க்கிறோம். நீங்கள் சாதாரண மனிதரா? இல்லை. சாதனை நிகழ்த்தப் போகும் மனிதரா? நீங்களே விடை சொல்லுங்கள்.

– ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1997

சிந்தனைத் துளிகள் – 1
இதுவரை நாம் சாதித்தது என்ன?
தன்னம்பிக்கை ஓர் பப்பா
சேமிப்பு ' தன்னம்பிக்கை ' யை கூட்டும்
வெள்ளாடுகளான நாம் நமக்குள் மோதிக் கொண்டால்… ஒநாய்களுக்கு லாபம்
''முயற்சியுடையார், இகழ்ச்சியடையார் ''
சிந்தனைத் துளிகள்
முன்னேற்றப்பாதை
y2k வைப்பற்றி அறிந்து கொள்ள
எந்த கல்வி மாணவரிடத்தே பண்பாட்டை,
தேவை 'தன்னம்பிக்கை' கல்வி
முயற்சியுடையார்; இகழ்ச்சியடையார்
எண்ணமே வாழ்க்கை
சூழ்நிலைகளும் முறையான மனப்போக்கும்
நினைவாற்றல் மேம்பட மனப்பயிற்சி
தன்னம்பிக்கை + உழைப்பு = வெற்றி
சேவையே வெற்றி
எல்லோரும் உயரலாம்
திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம்