Home » Articles » அமெரிக்கர்கள் புத்தசாலிகள்

 
அமெரிக்கர்கள் புத்தசாலிகள்


admin
Author:

ஒருவர் தன் சேமிப்பு கணக்கிலிருந்து ( Savings Bank A/c) பணத்தை எடுக்க வங்கிக்கு செல்கிறார் என வைத்து கொள்வோம். முதலில் பணம் பெறுவதற்கான ரசீதை எழுதி Pass Book – கையும் அதற்கான இடத்தில் காண்பித்து அங்கிருந்து டோக்கனைப் பெற வேண்டும். பிறகு, பணம் கொடுக்கும் – இடத்தில் ( Cash Counter ) இருந்து அவருடைய டோக்கன் நெம்பரை கூப்பிடும் வரை காத்து கிடக்க வேண்டும். இப்படி காத்து கிடக்கும் நேரத்திற்கு வரைமுறை இல்லை. சில சமயங்களில் சுமார் ஒரு மணி ( one hour ) நேரம் வரை காத்து தவம் கிடந்தவர்கள் உண்டு. இதனால், ஒரு வாடிக்கையாளர் தான் பாடுபட்டு உண்டாக்கிய தன் சொந்த பணத்தை பெறுவதற்கு இவ்வளவு நேரம் காக்க வைக்க வங்கி அலுவலர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்ற வாடிக்கையாளர்களின் மனக் கசப்பை பல வங்கிகள் மெத்தனத் தோடு ( Superiority Complex ) உதாசீனப் படுத்தியபோது, அமெரிக்கர்கள் இதை எப்படியோ தெரிந்து கொண்டார்கள். கண்டுபிடித்தார்கள் ஒரு இயந்திரத்தை, அதன் பெயர் ATM ( Automatic Teller machine / Any Time money ) இயந்திரம். அந்த இயந்திரத்தின் காப்புரிமையையும் பதிவு செய்து விட்டார்கள். அதாவது 24 மணி நேர சேவை, தேநீருக்கும், சாப்பாட்டிற்கும் அது இடை வேளை கேட்பதில்லை. வேலை நிறுத்தம் செய்வதில்லை. நாம் செய்ய வேண்டிய தெல்லாம் அந்த இயந்திரத்திற்குரிய கார்டினை அதனுள் செலுத்தினால் சில நொடிகளில் நம்முடைய பண இருப்பை திரையில் காட்டும். பிறகு நமக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று நாம் உரிய நெம்பர்களை அழுத்த வேண்டும். உதாரணமாக ரூ, 10,000 (பாத்தியிரம்) என்றும் எந்தெந்த படிகளில் (denomination) என்று பதிவு செய்ய அடுத்த நிமிடமே நாம் விரும்பிய வண்ணம் பணம் அதற்குறிய இடத்திலே விழும். ஆக இந்த இயந்திரத்தின் முலம் பெற 3 நிமிடங்கள் போதும், இதைவிட முக்கியமான விசயம் என்ன வென்றால், இந்த இயந்திரம் வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. இதனால் வளரும் நாடுகளில் இந்த இயந்திரத்திற்கு ஏகப்பட்ட கிராக்கி.

அமெரிக்கர்கள் இந்ந ATM இயந்திரங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கு நமது வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.மாறாக இந்த இயந்திரத்தை விட எங்கள் மனித ஆற்றல் பெரியது. எனவே அதைவிட சிறந்த மனிதாபிமான சேவையை எங்களால் தர முடியும் தங்களின் பண்பட்ட சேவையால் தன்னம்பிக்கையுடன் ATM இயந்திரத்தை புறமுதுகு காட்டும்படி விரட்ட அல்லவா வேண்டும். ஏன் மனித ஆற்றலால் இது முடியாத காரியமா? இதற்குத் தேவை தன்னம்பிக்கை. வேலை நிறுத்தத்தால் யாருக்கு லாபம்?

இப்போது கூறுங்கள். யார் புத்திசாலிகள்?


Share
 

1 Comment

  1. ganesh says:

    சூப்பர் அருமையான சவுக்கடி இந்த இத்து போன வங்கி தொழிலாளர்கள்

Post a Comment


 

 


September 1997

சுதந்திர பொன்விழா ஆண்டு ; நினைவுகள்.
பணம் எப்படிச் செலவு செய்ய வேண்டும்…?
Promise only what you van deliver, then deliver more than your
கவிதை பிரியர்களுக்கும் ஆங்கிலம் பயில்பவர்களுக்கும்
கோபத்தை வெல்லுங்கள்
நட்பு என்றால்………..
மனக்கதவு
அமெரிக்கர்கள் புத்தசாலிகள்
கல்விமீது கண் வைப்போம்
உங்கள் சிந்தனைக்கு
பத்துக் கட்டளைகள்
சிந்தனைத் துளிகள்
சாதனை அத்தியாயத்தை எழுது
எண்ணமே வாழ்க்கை
பொது மக்களின் பார்வையில் அரசியல்
மரம் நடும் நிகழ்ச்சி
'' செய்வன திருந்தச் செய் ''
அன்னைக்கு அஞ்சலி
ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்
' உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் '
தன்னம்பிக்கை இதழ் நடத்தும்