Home » Cover Story » முன்னேற்றப் பாதை

 
முன்னேற்றப் பாதை


இராமநாதன் கோ
Author:

டாக்டர் ஜி. இராமநாதன் என்.டி.

எது சரி – எது தவறு என முடிவெடுப்பது எப்படி?

நமக்கு இதுபோன்ற குழப்பநிலை வரும்போதெல்லாம் மூன்று கேள்விகளை நாமே கேட்டுதெளிவு பெறலாம். எந்த ஒரு எண்ணமும் / செயலும்..

1. நியாயத்தின் அடிப்படையில் சரியா?

2. அந்தச் செயல், சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் தகுந்த பலனளிக்குமா? (அ) யாருடைய நியாய உரிமைகளிலும் பாதிப்பு ஏற்படுத்துமா?

3. அந்த செயல்/ எண்ணம் – வெளியில் தெரியுமானால், அதை சரியானது என ஏற்பார்களா?

போன்ற இந்த மூன்று கேள்விகளுக்கும் ‘சரி’ என பதில் வருமானால் அதை செயல்படுத்தலாம். தவறு என பதில் வருமானால் மறுப்புச் செய்தல் வேண்டும்.

மருத்துவத்தில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் எந்த மருந்தை, எந்த நோய்க்கு கொடுக்கலாம் என்பதுதான். ஒருமிக முக்கிய அம்சம், அந்த மருந்தை எந்த நோய்கெல்லாம் கொடுக்க கூடாது என்பது. அதில் தெளிவில்லையேல் நோய் சிக்கலாகிவிடும். நமது வாழ்க்கையிலும், எதற்கு ‘சரி’ என்பது, எதற்கு மறுப்பு சொவது எனபது முக்கிமாகும். இதைத்தான் ‘மறுப்பு சொல்ல நினைத்தபிறகு ‘சரி’ என சொல்லாதீர்கள். ‘எனச்சொல்வார்கள். (DON’T SAY YES WHEN YOU WANT TO SAY NO) இதுதான் மனஉறுதியின் முக்கிய அம்சமாகும்.

பிறரிடம்மாறுபட்ட கருத்தை எப்படி செயல்படுத்துவது?

நமது முடிவை தெளிவாக தேர்ந்த பிறகு, பிறருடன் ஒத்துபோகிறமுடிவானால், அதை செயல்படுத்துவதில் சிரம்ம் இல்லை. ஆனால் மாறுபடும் போது எப்படி ஏற்க வைப்பது? இதற்குமூன்று முக்கிய அம்சங்களை செயல்படுத்த வேண்டும்?

1) எடுத்துக்கொண்ட முடிவை பிறரின் வற்புறுத்தலுக்கா – எதிர்ப்புக்காக – எந்த நிலையிலும் மாற்றக் கூடாது.

2) மறுப்பு சொல்லும் போது – மறுதரப்பினரின் கண்களை நேருக்குநேர் பார்த்துச் சொல்ல வேண்டும்.

3. தேவைப்பட்டால், குரலை உயர்த்திப் பேச வேண்டும். (மிகவும் மன உறுதி – செயல் தெளிவு – உள்ளவர்கள், புன்னகைத்து கொண்டே அமைதியாக – மற்றவர்களிம் மறுப்பு செய்து காட்டுவார்கள்.)

மறுப்பு சொன்னவுடனே மறுதரப்பில் உள்ளவரின் மன நிலை எப்படி இருக்கும்?

உங்களை சம்மதிக்க வைக்க அவரது எண்ணத்த நிறைவேற்ற கெஞ்சுவார்; கொஞ்சுவார்; மிஞ்சுவார்; மிரட்டுவார்; அழுவார்; புரள்வார்; சவால்விடுவார்; சபிப்பார்; தான் செய்த எல்லா செயல்களுக்கும் நியாயம் கற்பிப்பார்.; தன்னை ஒரு தியாகியாக உங்கள் முன் நிறுத்துவார். உங்களை குற்றவளியாக்க உங்களைப் பற்றி எந்த குறையையும் கூற தயங்கமாட்டார்; ஊரைக் கூட்டுவார்; விமர்சிப்பார். இதுபோன்ற தற்காப்பு ஆயுதங்களை அவரவர் தகுதிக்கேற்ப செய்ய முனைவார்கள். மறுதரப்பிலுள்ளவர் உங்களுக்கு கீழுள்ளவராயின், கெஞ்சுதலோடு நிற்பார்.மேலுள்ளவராயின் மிஞ்சுவார். பொது இடமாக இருந்தால், உங்களிடம் தன் ஆசை பலிக்கவில்லை என்று உணர்ந்தால், ஊரையே கூட்டுவார். உங்களை துரோகியாக தூற்றுவார். இந்த எல்லாச் செயல்களிலும் நீங்கள்மனம் தளராமல் எண்ணத்தில் உறுதியாக செயல்பட்டால்தான் உறுதியானவராக முடியும்.

சிலருக்கு, இப்படி உறுதியாக செயல்படுவதை நினைத்தால், இதெல்லாம் ‘இரக்கமில்லாத பண்பு’ ‘பெருந்தன்மையைக் காட்டாதே!’ ‘விட்டுக்கொடுப்பதுதானே வாழ்க்கை முறை’ என்பது போன்ற எண்ணங்கள் தோன்றலாம். அன்பின் அடிப்படையில் உங்கள் முழு விருப்பத்துடன் ஒரு செயலை செய்தால் நன்று. அதுவே பிறர் வலை வீசும் போதும்- பயமுறுத்தும் போதும் – உரிமைகள் பறிபோகும் நேரத்திலும் மறுப்பு செய்யாமலிருப்பது – பயம் மற்றும் கோழைத் தனத்தின் அடையாளமே.

சில சமயங்களில் பல்வேறு குழப்பங்கள் நம்மை ஆட்டுவிக்கும்,தன்னடக்கமாக இருப்பதாக சொல்லிக் கொண்டு கோழைத்னமாக செயல்படுவோம்; மிகுந்த பணிவுடன் இருப்பதாகச் சொல்லிப் பிறருக்கு அடிமையாகச் செயல்படுவோம். உயர்ந்த குறிக்கோளை ஒரு பேராசை என்று விமர்சிப்போம். இரக்கங்காட்டுவதாகச்சொல்லிக் கொண்டு ஏமாறுவோம். தன்னம்பிக்கையுடன் செயல்படுபவரைப் பார்த்து ஆணவம் கொண்டவர் என்போம். மிகவும் எச்சரிக்கையாக வாழ்வதாக நினைத்து, பயம் கொண்டிருப்போம். தன்மானம் கொண்டவன் என்று சொல்லிக் கொண்டு தேவையில்லாத இடங்களில் உணர்ச்சிவயப்பட்டு கோபத்தில் செயல்படுவோம். இது போன்ற எண்ணற்ற குழப்பமான செயல்கள் நமது தெளிவின்மையின் அடையாளங்கள்தான்.

மறுப்பு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய பிற அம்சங்கள்:

1) முரட்டுத்தனமோ, வன்முறையோ இருத்தல் கூடாது. அதற்கு கோபம், ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது;

2) நியாயமான உரிமைகளுக்காக செயல்படலாம். ஆனால் முற்றிலும் சுயநலத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது. பிறர் உரிமைகளில் தலையிடக்கூடாது.

3) மறுப்பு செய்து முடித்த பிறகு, ‘தவறு செய்துவிட்டோம?’ என்ற குற்றவுணர்வு கூடாது.

4) நமக்கு சம்மானவர்கள் மேலுள்ளவர்களிடம் மறுப்பு சொல்லும் போது அவர்களின் பகைமையை சம்பாத்திஉ விடாமல் “உங்கள் விரப்பத்தை செய்ய இயலாதவனாக இருக்கிறேன்” என்று பணிவான விதத்தில் அவர்கள் ஏற்கும்படியாக சொல்ல வேண்டும்.

5) வலைவீசும் வார்த்தைகளை அடையாளம் காணுதல் அவசியம். (MANIPULATI WORDS)

மன உறுதியும் செயல் தெளிவும் கொண்டவர்களின் பண்புகள்:

1. கண்களைப் பார்த்துப் பேசுதல்.

2. நிமிர்ந்து நடத்தல்.

3. தெளிவாகப் பேசுதல் – அதிலும் சொகளின் இறுதி வார்த்தைகளை தெளிவாக
உச்சரித்தல்.

4. உடைகளை – எடுப்பான முறையில் – பிறரும் கவரும் வண்ணம் அணிதல்.

5. நடை தளர்வில்லாமல்உறுதியாக இருத்தல்.

6. புன்முறுவலுடன் செயல்படுதல்.

7. தயக்கமின்றி பிறரிடம் உதவி கேட்டல்.

8. வெளிப்படையாகப் பேசுதல்.

9. உணர்ச்சிவயப் படாதிருத்தல்.

10. பிறர் கேலி செய்தால், அதைப் பொருட்படுத்தாமை.

11. செயலுக்கு மீறிய பணம்,புகழ், பதவி இவைகளை ஏற்காமை.

12. பல் முன்னிலையில் / மேடையில் பேசுதல்.

13. நேரத்தை முறைப்படுத்தி செயல்படுத்தல்.

14. மேசையை சுத்தமாக வைத்திருத்தல்.

15. தன் செயலுக்கான காரணங்களை, தேவையில்லாத இடங்களில் விளக்கிக் கொண்டிராது, தொடர்ந்து செயல்படுதல்.

இனி உங்கள் மற உறுதிய்யும் செயல் தெளிவையும் மதிப்பீடு செய்வோம். ஒவ்வொரின் செயலும் அவரவர் மனநிலையைப் பொறுத்தே அமையும். பல்வேறு சூழ்நிலைகளில் நீங்கள் எப்படிச் செயல்படுகிறீர்கள் என்பதை ஆராய்ந்தால், மன உறுதியின் அளவை கணக்கிடலாம். அதன் அடிப்படையில் கீழே கேள்இகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்கு ‘ஆம்’ ‘இல்லை’ என்ற பதிலை எழுதுங்கள்.

1) உங்களுக்கு விருப்பமானவர்/ மேலுள்ளவர் உங்களின் சம்மதமின்று, ஒரு செயலைக் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார். ‘அவரே சொல்லிவிட்டார்’ , அதை செய்து விடலாம்’ என நினைப்பீர்களா?

ஆம்/ இல்லை

2) உங்கள் சக நண்பர்கள் உங்களைவிட முன்னேறி வருவதாக நினைக்கும்போது மனச் சோர்வு அடைகிறீர்களா?

ஆம்/ இல்லை

3) மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதில் ஆர்வமுள்ளவரா?

ஆம்/ இல்லை

4) உங்களுக்கு பிடித்தமான பொருளை வாங்குவதற்கு பணமில்லை. தவணை முறை சலுகையில் காசோலை கொடுத்தால் போதும் என அறிவிக்கிறார்கள். இருந்தாலும் வேண்டாம் என வாங்காமல் வருவீர்களா?

ஆம்/ இல்லை.

5) சாலை விபத்து ஒன்றை பார்க்கிறீர்கள். மற்றவர்கள்மற்றும் காவர்துறையினர் இதைப்பார்த்துக்கொள்வார்கள்மக்கேன் வம்பு என உங்கள் வழியில் செல்லுவீர்களா?

ஆம்/ இல்லை

6) புதிய நண்பர் ஒருவருடன் நெருங்கி பழகிக் கொண்டிருக்கும் போது அரைப்பற்றி, கடந்த காலத்தில்தவறான அபிப்பிராயத்த்தை ஒருவர் சொல்கிறார்,தொடர்ந்த பழகுவீர்களா?

ஆம்/ இல்லை

7) விருந்து ஒன்றில் கல்து கொள்கிறீர்கள். உங்கள்மருத்துவர் சில உணவுகளைசாப்பிட தடை வித்திருக்கிறார்கள். உங்கள் உடனிருப்பவர்கள், தங்கள் திருப்திக்காவது சிறிது சாப்பிட வற்புறுத்துகிறீர்கள். அதை சாப்பிடுவீர்கள்?

ஆம்/ இல்லை.

8) உங்கள்முலீட்டில் / தொழிலில் திடீரென பெரு நஷ்டம் ஏற்படுகிறது இனித் தொடர்வது சரில்ல என தொழிலை மாற்ற யோசிப்பீர்களா?

ஆம்/ இல்லை.

9) நீங்கள் நேசிக்கும் ஒருவரின் இறப்புச் செய்தியை தந்தியில் பார்க்கிறீர்கள். குழப்பமடைந்து செய்வதறியாது திகைப்பீர்களா?

ஆம்/ இல்லை.

10) நீங்கள் திட்டமிட்டபடி, செயல்கள் நடைபெறாவிடில், மனதிற்குள் பொருமுகிறீர்களா?

ஆம்/இல்லை

11) மனக்கவலையும் மனப்பதட்டமும் அடிக்கடி வருவதுண்டா?

ஆம்/ இல்லை
12) அடிக்கடி பிறரிடம் கோப்பபடுகிறீர்களா?

ஆம்/ இல்லை

13) காலை முதல் இரவுவரை குழப்பமின்றி அமைதியாக செயல்படுகிறீர்களா?>

ஆம் / இல்லை.

14) உங்கள் செயலுக்காக, பிறரிடம் அடிக்கடி அசடு வழிதல் உண்டா?

ஆம்/ இல்லை

15) ஒரு செயல் தவறு என்றுதெரிந்தாலும், பிறரின் வற்புறுத்தலுக்கா – திருப்திக்கா உடன்படுகிறீர்களா?

ஆம்/ இல்லை

இப்போது சரியான பதிலை கணக்கிடுங்கள்; ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒருமதிப்பெண் கொடுக்கவும்.

1) இல்லை 2) இல்லை 3) ஆம் 4) ஆம் 5) இல்லை 6) ஆம் 7) இல்லை 8) இல்லை 9) இல்லை 10) இல்லை 11) இல்லை 12) இல்லை 13) ஆம் 14) இல்லை 15) இல்லை

மதிப்பெண் 10க்கு மேல் இருந்தால் – நீங்கள் மன உறுதிமிக்கவர். தெளிவான செயல்முறையில் ஈடுபடுகிறவர்.

மதிப்பெண் 6 முதல் 9 வரை இருந்தால் நீங்கள் குழப்பமுள்ளவர் மன உறுதியை, தபயிற்சிகள் மூலம் கடைபிடித்துத வளர்க்க வேண்டும்.

மதிப்பெண் 5 க்கு கீழ் இருந்தால் – மன துறுதி இல்லாதவர். பிறரால் ஆட்டுஇக்கப்படுவீர்கள். வழி தெரியாமல் தனுமாறிக் கொண்டிருக்கிறீர்கள்.

வாழ்க்கையில் நாம முன்னேற வேண்உம்ந அதை நியாயமாகவும் செய்ய வேண்டும்; அதே சமயத்தில் பிறரிடம் ஏமாறாமல் இருப்பது மிகவும் அவசியம். அதற்கு மன உறுதி (ASSERTIVENESS) இருக்க வேண்டும். ஆகவே மன உறுதி பெற்று – தெளிவாக செயல்படுவோம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 1997

உனக்கு நீதான்
ஆளுமைத்திறன் மேம்பாடு
எண்ணங்கள் என்ன செய்யும்?
நாம் நாமாகவே இருப்போம்
புதையல்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுக்க ஜான் ரஸ்கின் கூறும் வழி
முன்னேற்றத்தின் முதல் எதிரி
சிந்தனைத்துளி
"QUALITY OF WORK"
நேதாஜி விருது
குடி குடியைக் கெடுக்கும்?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உழைப்பின் உன்னதம்
முன்னேற்றப் பாதை