Home » Articles » சிந்தனைக் கருத்துக்கள்

 
சிந்தனைக் கருத்துக்கள்


admin
Author:

நீங்கள் இருக்கும் நிலைமைக்கு முழுக்க முழுக்க நீங்கள்தான் காரணம். நீங்கள் துன்பத்தில் இருந்தால் அதற்கு நீங்கள்தான் காரணம்.

“உலகில் சாதனை புரியும் மக்கள் அவர்களது விடாமுயற்சியினாலும், ஒரே மன நோக்கினாலும், தங்களை அக்காரியங்களுக்காக முழுவதுமாக அர்ப்பணத்துக் கொண்டதினாலும், தங்கள் மன உறுதியினாலும் மட்டுமே பெற்றுள்ளார்கள்”.
அவரவர்களுக்கு அவரவர் தாங்குகின்ற அளவுக்கு துன்பம் இருக்கவே செய்கின்றது. அதனால் எனது துன்பம்தான் பெரிது என்று எண்ணிவிடாதே.

“இவ்வளவு பெரிய செய்யுளா? என்னால் மன்னம் செய்ய முடியும்?’ என்று மலைத்தால், முடியாததுதான். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் நிச்சயமாக அதுமுடியும். தன்னம்பிக்கையின் வலிமையே இதுதான்.

தான் பிறருக்குச் சொல்வதைத் தானே கடைபிடிக்கும் தகுதி யாருக்கு இருக்கின்றதோ அவனே சிறந்த தலைவனாகிறான்.

எங்கே மகிழ்ச்சி ஆரம்பிக்கிறதோ, அங்கே கவலை முடிந்துவிடும்.

உன்மேல் தவறா, என்மேல் தவறா என்று வீண் சர்ச்சையில் இறங்காமல் எது தவறு என்பதை கண்டு பிடித்து அதை மட்டும் திருத்திக் கொள்ள வேண்டும்.

சுயமாக சிந்தனை செய்யாத மனிதன் அடிமை.  அவன் தனக்கு மட்டும் துரோகியல்ல.  மற்றவர்களுக்கும் துரோகியாகிறான்.

அறிவு உணர்வைத்தான் தர முடியும்.  ஆனால் வாழ்வியல் நடைமுறைதான் வெற்றியைத் தர முடியும்.  கொள்கையும் நடைமுறையும் தான் வெற்றியைத் தர முடியும்.  கொள்கையும், நடைமுறையும், சிந்தனையும், செயலும் ஒன்றுபட்டால்தான் காரியங்கள் நிறைவேறும். துன்பம் அகலும் இன்பம் வந்தடையும்.

நூல் நிலையம் இல்லாத வீடு உயிரில்லாத உடம்பு போன்றது.  வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் தேவை.  மனிதன் ஓய்வு நேரங்களில் நூல்களைப் படித்து அறிவைப் பெருக்க வேண்டும். தொழில் செய்து ஓய்ந்திருக்கும் போது அவனது உள்ளத்திற்கு கிளர்ச்சி தரக்கூடியவை நூல்களே.

நமது உடலுக்கு இனிப்பு கேடு விளைவிப்பதைப் போலவும், கசப்பானவை நன்மை விளைவிப்பதைப்போலவும், நாம் வாழ்க்கையில் ( குறிப்பாக இளமையில்) படும் கஷ்டங்கள் நன்மைகளாக மாறுகின்றன.

THERE IS NO SUBSTITUTE FOR HARD WORK



Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1997

தற்கொலை தடுப்பு ஆலோசனை சேவை
முன்னேற்றப் பாதை
கண்ணாடியில் தெரிபவன்
"தன்னம்பிக்கை" மாத இதழும், டாக்டர் இல.செ.கந்தசாமி நினைவு
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
முன்னேற்றச் சிந்தனைகள்
தேவையெல்லாம்…
முயன்றால் வெற்றி நம் கைகளில்
சுவாமி விவேகானந்தர் வாக்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
சிந்தனைக் கருத்துக்கள்
முழு வாழ்க்கை என்பது….