Home » Articles » ஆளுமைத்திறன் மேம்பாடு

 
ஆளுமைத்திறன் மேம்பாடு


admin
Author:

– டாக்டர் பெரு. மதியழகன்

எழுதிவைத்துப் படித்தல்

எழுதி வைத்துப் படிப்பு சிறந்த பேச்சாகாது. அப்படி எழுதிவைத்துப் படிக்க நேர்ந்தால் அந்தப் பேச்சை மேடை ஏறும் முன்பு ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு மேடையேற வேண்டும். பெரிய அதிகாரிகளாக இருக்கிறவர்களை, மேடையில் பேசிப் பழக்கமில்லை’ என்றாலும் மற்றவர்கள் விடமாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் மற்றவர்கள் தயாரித்துக் கொடுக்கிற பேச்சை மேடையில் வாசித்து விட்டு வருவார்கள்.

அவ்வாறு செய்யும் முன்பு பக்கங்கள் சரியாக அடுக்கப்பட்டிருக்கறதா என்று பேசும் முன்பு ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.பேசிக்கொண்டே இருக்கிறபோது இடையில் ஒரு பக்கம் மாறி வைத்திருந்தால் கருத்துக்களுக்குத் தொடர்பிருக்காது. உரையை கேட்கும் கூட்டத்தினருக்கும் குழப்பம் ஏற்படும். பேச்சாளர் நகைப்புக்கு உள்ளாவார்.

இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் இந்திய பிரதமர் நிறைவு விழா உரையை ஆங்கிலத்தில் படித்தார். அதை ஒரு முதுபெரும் அறிஞர் தமிழில் மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பாளரிடம் கொடுக்கப்பட்டிருந்த பிரதமரின் உரை நகலிலும் வைத்திருந்த பக்கங்கள் சீராக இல்லாமல் முன் பின்னாக மாறி இருந்ததால் அங்கே பிரதமர் பேசுவது ஒன்றாவும் மொழி பெயர்ப்பாளர் தாளில் வேறொன்றாகவும் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

ஆகவே மேடையில் உரையை எழுதிவைத்துப் படிக்கிறவர்கள விழிப்பாக இருக்கவேண்டும். மேலும் சாதாரணமாகப் பார்த்துப் படிப்பதற்கும் பார்க்காமலே பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. பாரத்துப் படிக்க நேர்ந்தாலும் பாராக்காமல் பேசுவது போலவே உரையை உரிய இடத்தில் நிறுத்தி ஏற்ற இறக்கங்களோடு உரிய இடைவெளி கொடுத்துப் படித்தால் கேட்பவர்களுக்குச் சலிப்பு உண்டாகாமல் இருக்கும்.

எட்மண்ட் பர்க் தன்னுடைய பேச்சுக்களை அற்புதமாக எழுதிக்கொண்டு வருவாராம். ஆனால் அதைப் படிக்கும்போது சுவையில்லாமல் படிப்பாராம்.!

சிறந்த கவிதை எழுதவல்ல சில கவிஞர்களின் கவிதைகள் மேடையிலே வெற்றியடைவதில்லை. கூட்டத்தினரடம் வர வேற்பைப்பெறுவதில்லை. ஆனால் அதை அச்சாக்கி படித்துப் பார்த்தால் முதல் தரமான கவிதை அவர்களுடையதாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் மேடையில் விதையைப் படிக்கும் விதம் (Presentation). எனவே எழுதிப்படிப்பதில் கூட முறையோடு செய்ய வேண்டும்.

ஏதோ உதவியாளர் உரையைத் தயாரித்து வைத்தார். அதிகாரி அதைப் படித்தார் – என்று இருந்தால் உரை சுவைக்காது. இத்தகைய அதிகாரி ஒருவர் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு அலுலகம் திருப்பிவந்தவர் உதவியாளரை அழைத்துத நான் 10 மணித்துளிகள் பேசுவதற்குத் தானே எழுதித்தரச் சொன்னேன். ஆனால் அதைப் பேச முடிக்க இருப்பது நிமிடங்கள் ஆனதே என்று கடிந்து கொண்டாராம் உடனே உதவியாளர் அதற்கு மறுப்பாக அய்யா நான் 10 நிமிடத்திற்குத்தானே தயாரித்தேன் என்றாராம். டந்தது என்னவென்றால் உதவியாளர் பேச்சை தட்டச்சு செய்து அதன் அசலையும் அதன் நகலையும் சேர்ந்து வைத்திருந்தாராம். அதிகாரி அதைக் கவனிக்கவில்லை. ஒரே உரையை இரண்டுமுறை படித்து விட்டு வந்ததால் 20 நிமிடம் ஆகியிருக்கிறது. இவ்வாறு படித்தால் கூட்டத்தில் எப்படிப்பட்ட வரவேபு இருக்கும்என்று உங்களுக்கே தெரியும்.

சில அதிகாரிகள் பிறர் தயாரித்து அளிக்கிற குறிப்புகளை வைத்துக்கொண்டு அப்படியே படிக்காமல் அதிலே இருக்கிற கருத்துக்களை தங்கள் சொந்த நடையில், பாணியில் சொல்லுவார்கள். இதுவே சிறந்ததாகும்.

பொதுவாக இப்படி எழுதி படிக்கிற பேச்சு நீண்ட நேரம் இல்லாம் ஒரு சில நிமிடங்களிலேயே முடியும்படியாக இருப்பது. நல்லது.

எப்போது முடிப்பது?

குறிப்பிட்ட கால அளவிற்குள் பேச்சை முடித்துக் கொள்வது சிறந்த பேச்சாளர்க்கு உரிய இலக்கணம். அதே போல கூட்டத்தில் எங்காவது ஒரு மூலையில் சல சலப்பு தோன்றினாலும் விரைந்து பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும். கூட்டத்தைச் சலிப்படையாமல் வைத்துக் கொளவது சிறப்பு. பேச்சை மேலும் தொடராமல் இப்படி முடித்துவிட்டாரே என்று கூடியிருப்போர் நினைக்கும்படி பேச்சை முடிக்க வேண்டும்.
தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1997

தற்கொலை தடுப்பு ஆலோசனை சேவை
முன்னேற்றப் பாதை
கண்ணாடியில் தெரிபவன்
"தன்னம்பிக்கை" மாத இதழும், டாக்டர் இல.செ.கந்தசாமி நினைவு
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
முன்னேற்றச் சிந்தனைகள்
தேவையெல்லாம்…
முயன்றால் வெற்றி நம் கைகளில்
சுவாமி விவேகானந்தர் வாக்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
சிந்தனைக் கருத்துக்கள்
முழு வாழ்க்கை என்பது….