Home » Articles » வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்

 
வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்


admin
Author:

பலகோடி மக்களைப் பார்க்கிறோம். சிலர் மட்டும் எப்படி வெற்றி மேல் வெற்றி அடைகிறார்கள்? அவர்கள் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மனங்கலங்காமல் எப்படிச் செயல்படுகிறார்கள்?

காவலர் வேலைக்குச் செல்வதென்றால் அதற்குத் தேவையான படிப்பு, உயரம், எடை போன்ற தகுதிகளை அடிப்படையாக வைத்திருக்கிறார்கள். ஒரு மேலதிகாரியாக வேண்டுமன்றால், குறிப்பிட்ட கால அனுபவங்கள், வேலையில் திறமையை வெளிப்படுத்திய நடைமுறைகள் போன்றவற்றை வைத்து நிர்ணயிக்கிறார்கள்.

வெற்றியாளர்கள் எல்லாத்துறகளிலம் உள்ளார்கதள். வாழ்க்கையில் நாம் அவ்வப்போது வெற்றியாளர்களைச் சந்திக்கிறோம். கடந்த காத்தில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருக்கிறோம்.

வெற்றியாளராக உருவாக தேவையான அடிப்படைப் பண்புகளை சுருக்கமாக, தெளிவாக இங்கு காண்போம். இந்தப் பண்புகளில் 10 அம்சங்களும் அவசியம் தேவை. ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலோ அல்லது குறைவிட்டாலோ அவரின் வெற்றியைப் பெருமளவு பாதிக்கும்.

வெற்றியாளராக விரும்புபவர்கள் கீழ்க்கண்ட கோடிட்ட பண்புகளை சிறு தாளில் நான்கு பிரதிகளாக எழுதி, ஒன்று எல்லா நேரமும் சட்டைப் பையில் வைத்திருக்கலாம். இரண்டாவது தினமும் முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி வைக்கலாம். மூன்றாவது தலை வைத்துப் படுக்குமிடத்தில் ஒட்டலாம். நான்காவு வேலை செய்யும் மேஜை மீது அல்லது எது அதிகம் கண்ணில்படுமோ அதன் மீது ஒட்டி வைக்கலாம்.

எறும்பு ஊற பாறையும் தேயும்.

தொடர்ந்து பார்க்கப் பார்க்க பழகப் பழக எந்த ஆற்றலும் அவருக்குச் சொந்தமாகி விடும். அவைகள்:

உறுதியான தன்னம்பிக்கை:

எடுத்த காரியத்தை முடிக்கும் மன உறுதி. செயலின் போது வரும் பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கி விடாமல் செயலாறும் திறமை வேண்டும்.

2. திட்டமிட்ட குறிக்கோள்:

எதை அடைய வேண்டும் என்ற தெளிவான எண்ணம்; எவ்வளவு காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கால நிர்ணயம், எப்படி அதை அடைவது என்ற வழிமுறைகள் இவைகளைப் பற்றிய தெளிந்த அறிவு தேவை.

3. ஆர்வம்:

எரிமலை போன்று கொழுந்து விட்டெறியும் உற்சாகத்துடன் செயலாற்றும் மனப்பான்மை வேண்டும்.

4. தலைமைப் பண்பு:

தன்னைச் சேர்ந்தவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுதுதல்: அவர்களைச் சரியாக வழி நடத்துதல் வேண்டும். அப்போதுதான் மற்றவர்களின் ஒத்துழைப்பையும் நம்பிக்கையையும் பெற்று தலைவனாக முடியும்.

5. சுயக்கட்டுப்பாடு:

நல்ல பழக்க வழக்கங்கள்: நெறிமுறைகளில் தவறாமை; உணர்ச்சி வயப்படாமல் செயல் புரியும் மனோபாவம் அவசியம்.

6. பொலிவான தோற்றம்:

புன்முறுவலுடன் கூடிய முகம், இனிய சொற்கள், உற்சாகமான பார்வை, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உடையணிதல் ஆகியவை முக்கியம்.

7. கவனம் சிதறாத மனப்பான்மை:

செய்யுத் தொழிலில் சொந்த விருப்பு வெறுப்பகளை ஒதுக்கி வைத்து, முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்த வேண்டும்.

8. ஒத்துழைப்பு:

தனி மனிதன் சாதனையாளராக, தாம் பிறருடன் ஒத்துழைத்து மற்றவர்களையும் தம்முடைய செயல்களுக்கு ஒத்துழைக்க செய்தல் மிக அவசியம்.

9. பொறுமை:

எதிர்ப்புகளைத் தாங்கும் சகிப்புத் தன்மை, சோதனைகளின் போதும் தொடர்ந்து செயலாற்றும் விடா முயற்சி தேவை.

10. பணத்தை சேமிக்கும் பழக்கம்:

ஆயிரங்கள் முதல் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவராயினும், தன் வருமானத்தில் குறைந்த பட்சம் 10 சதம் முதல் 20 சதம் வரையாவது சேமிக்க வேண்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1997

உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி
கவலையை போக்க எட்டு வழிகள்
ஆளுமைத்திறன் மேம்பாடு
நண்பனே!
கவிதை
மனித பலவீனங்கள்
வாசகர் கடிதம்
வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்
அவர்களும் நீயும்
முன்னேற்றப் பாதை
பெற்றோர் கவனத்திற்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனைகள்