Home » Articles » அவர்களும் நீயும்

 
அவர்களும் நீயும்


அம்சப்பிரியா
Author:

பொய் பல்லக்கில்
புறப்பட்டுப் போனவர்கள்
அதோ
புதைமணலுக்குள்
புதைந்து போகிறார்கள்…

வார்த்தைகளின்
உலகில்
வழிதவறியவர்கள்
ஆசைகளின்
காடுகளில் தொலைந்தபடியிருக்கிறார்கள்…

கனவுகளின்
பாதங்களில்
நடந்து போனவர்கள்
பாதிப் பயணத்தில்
காயங்களோடு
அழுகிறார்கள்…

அவர்களின்
அலட்சியங்களா
சாதிக்கப்பிறந்த
உன்னைச்
சரண்டைய வைப்பது..?

வீழ்ந்தவர்களின்
பட்டியலில்
உனக்கெதற்குத்
தனி இடம்…?

வாழ்ந்தவர்களின்
வரிசையில்
வரலாறாய்
இருப்போம் வா…?

க. அம்சப்பிரியா, பி.சி.பாளையம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1997

உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி
கவலையை போக்க எட்டு வழிகள்
ஆளுமைத்திறன் மேம்பாடு
நண்பனே!
கவிதை
மனித பலவீனங்கள்
வாசகர் கடிதம்
வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்
அவர்களும் நீயும்
முன்னேற்றப் பாதை
பெற்றோர் கவனத்திற்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனைகள்