Home » Articles » மனமும், மனித வாழ்வும்

 
மனமும், மனித வாழ்வும்


கலைச்செல்வி டி.எஸ்
Author:

மனம் போல் வாழ்வு, எண்ணம் போல் வாழ்வு என்கிறோம். எண்ணங்கள் நமது உடலை இயக்குகின்றன. உணர்ச்சிகள் நமது உடலை ஆட்சி செய்கின்றன. மனம் பாதித்தால் உடல் உறுப்புக்களின் இயக்கமே பாதிப்புக்குள்ளாகின்றன. ஒரு மனிதன் சத்துக்கள் நிறைந்த உணவைச் சாப்பிட்டாலும், நல்ல உடற்பயிற்சிகள் செய்து வந்தாலும்கூட கோபம், கவலை,, அச்சம், குற்ற உணர்வு, துன்பம் இவைகளுக்கு அடிமையான பின் ஆயுட்காலம் குறுகி அகால மரணம் அடைகிறான்.

மன நிம்மதியும், மகிச்சியும் மனித உடலுக்கு ஏற்ற அரு மருந்து என்று கூறுவதுண்டு. மகிழ்ச்சியுடன் இருக்கும்போது உடல் உறுப்புக்கள் ஒன்று சேர்ந்து இணக்கத்துடன் வேலை செய்கின்றன. அமைதியோடும், மகிழ்ச்சியோடும் இருக்க முயற்சி செய்து பழகிவிட்டால் அந்தப் பழக்கம் நம்மை விட்டு சற்றும் அகலாது. அந்த மன நிறைவே நம்மை நூறு ஆண்டுகள் வாழச் செய்துவிடும். வயது அதிகமான நிலையில் வேலைப் பழுவைக் குறைத்துக்கொண்டு வயதுக் கேற்ப தொழிலோ, பொழுதுபோக்குகளில், ஆன்மீக ஈடுபாடுகளிலோ கவனம் செலுத்துவது நல்லது.

நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த பெரியோர்களைக் கண்டு அவர்கள் உடல் நலத்தைப்பற்றி விசாரித்தபோது அவர்கள் கூறிய விளக்கங்களின் சாராம்சம் இதுதான்.

எதிலும் அளவோடு இருப்பது. வயது ஆக ஆகக் குடும்ப உறவைத் தவிர்த்துக் கொள்வது. உணவில் அளவைக் குறைத்து கொள்வது. ஒரு வேளை உணவு, அதையும் நன்றாக பசித்த பின்பே சாப்பிடுவது, எந்த சிரமத்திலும் மனம் தளராது அமைதியாகக் காலம் கழிப்பது. தடங்கல் இல்லாத ஆழ்ந்த உறக்கம், நாமும் இது போன்ற மேலும் சில நல்ல பழக்கங்களை மேற்கொண்டால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

அதிகாலையில் எழுதல், காலைக் கடன்களைக் குழப்பமில்லாமல் முடித்தல், உடலோம்பல், தேவையான உடல் உழைப்பு, அல்லது எளிய பயிற்சிகளில் ஈடுபடுவது மனதை அலையவிடாது சேவை, தெய்வீக சிந்தனையில் ஈடுபடுதல், உலகோடு ஒத்து வாழ்தல்.

மேலும், எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். அதையும் நன்றாக மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பதன் பொருள் இதுதான்.) மாதம் இருமுறை உண்ணா நோன்பு இருப்பது, நாள் தவறாமல் தலையோடு குளித்தல், மலச்சிக்கலின்றிப் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். மனித ஆரோக்கியத்தின் முதல் எதிரி மலச்சிக்கல்தான். காய்கறி, கீரை இவைகளை வேக வைத்து நீரை வடிக்கவோ எண்ணையில் வதக்கவோ கூடாது. எளிய உணவுகளை இறுதியிலும் முறையாக சாப்பிட வேண்டும்.

உடலுக்கு ஏற்ற உணவைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். (காய்கறி, கீரை, பழம் இவைகள் உடலை பாதுகாக்கும் குணம் கொண்டவை. எண்ணெய்ப் பண்டங்களும், இயற்கைக்கு மாறாகத் தயாரித்த உணவுப் பொருட்களும் நோய்களை உண்டு செய்வன!

அப்படிச் சிறந்த உணவு, வாழ்க்கை முறைகளின் மூலம் நீண்ட காலம் வாழ்ந்து எதை சாதிக்கப்போகின்றோம் என்று நினைக்கின்றீர்களா? சாதிப்பதைக் காட்டிலும் இறக்கும் வரை மற்றவர்களுக்குத் தொல்லை தராத வகையில் இறுதி நாட்களை நிம்மதியாகக் கழிக்கலாம் அல்லவா? பொதுவாக ஒழுக்கமான வாழ்க்கை நடத்துபவர்களை மரணம் அணுக அஞ்சும். நோய் மிரண்டு ஓடும். முதுமை அவர்களை வறுத்தாது. நாமும் ஒழுக்கமாக வாழ முயற்சி செய்வோமாக.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1997

எப்பொருள் யார்யார்க் கேட்பினும்
அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்
அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)
மனமும், மனித வாழ்வும்
வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி?
நண்பர்கள்
உறவு
விடிவு
ஓ…. இளைஞனே..
தொண்டனும் தலைவனும்
ஒரு விழா துவங்குவதற்கு முன்
சாதிச் சோறு
நம்மை பரிகாசிப்பவர்களை…
முன்னேற்றப் பாதை
அதிஷ்டம் (Luck)
உள்ளத்தோடு உள்ளம்