Home » Articles » ஆளுமைத்திறன் மேம்பாடு

 
ஆளுமைத்திறன் மேம்பாடு


admin
Author:

நடிப்பு:

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை கையாண்டு பேச்சுக் கலையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பேச்சாளர்களுக்கு ஓரளவுக்கு நடிப்பாற்றலும் தேவை. சொல்லுகின்ற கருத்துக்கேற்ப கைகால்களின் அசைவுகள் மற்றும்முகபாங்கள் பேச்சடன் இயைந்து விளங்க வேண்டும். சினமும் வருத்தமும், நகையும் இளிவரலும் பேச்சாளர் முகத்தில் விளங்கப் பேசுதல் வேண்டும்.

ஒரு சம்பவத்தைச் சொற்பொழிவின் நடுவே நாடகப் படுத்திப் பேசும்போது அதற்கென்று தனியானதோர் சக்தி ஏற்பட்டுவிடுகின்றது. இந்தக் கலையில் கலைஞர், சாலமன்பாப்பையா போன்றவர்கள் வல்லவர்கள்.

ஒரு முறை இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத திண்டாட்டத்தைப் பற்றி பேசியபோது ஒரு நிகழ்ச்சியை நாடகப்படுத்திச் சொன்னேன்.

ஓர் இளைஞன் பி.ஏ. பட்டதாரி. எங்கெங்கோ வேலை தேடினான். அவன் 5றி இறங்காத நிறுவனங்களே இல்லை. எங்கும் வேலை கிடைக்க வில்லை. ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு சர்கஸ்கம்பெனி வந்தது. அதிலாவது ஏதேனும் வேலை கிடைக்குமா என்று அந்த சர்க்கஸ் கம்பெனி முதலாளியைப் பார்த்துக் கேட்டான். அவனும் வேலை காலி இல்லை என்றான். பிறகு இவன் எப்படியாவது ஒரு வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான். அந்த முதலாளி சொன்னான். தம்பி கம்பெனியில் இருந்த குரங்கு ஒன்று நேற்று இறந்துவிட்டது. அந்த வேலையை நீ செய்வதாக இருந்தால் உன்னை சேர்த்துக் கொள்கிறேன் என்றார். சரி என்று அவனும் ஒப்புக்கொடு வேலைக்குச் சேர்ந்தான். குரங்கு செய்யும் வித்தைகளை எல்லாம் கற்றுக்கொண்டு குரங்கு வேசம் போட்டு இவனும் செய்தான்.

ஒரு நாள் சர்கஸ் நடந்து கொண்டிருந்தது. பெருந்திரளாக கூட்டம் கூடியிருந்தது. அரங்கில் உயரத்தில் தொங்கிய ஊஞ்சலில் இருந்து குரங்கு வித்தைகளை செய்யும்போது கைநழுவி கீழே விழுந்து விட்டான். அடி அவ்வளவாகப்படவில்லை. ஆனால் இவன் கீழே விழுவதற்கும் அங்கே கூண்டிலிருந்த சிங்கத்தைத் திறந்து விடுவதற்கும் சரியாக திறந்து விடுவதற்கும் சரியாக இருந்தது. நடுங்கிப் போனான். வயிற்றுப் பசியை போக்கவே வேலை தேடி இங்கு வந்தோம். இன்று சிங்கத்தின் வயிற்றுக்கு இரையாகப்போகிறோம் என்று அஞ்சி நடுங்கினான். பேச நாகூட வரவில்லை. இவன் அஞ்சி நடுங்குவதை சிங்கம் பார்த்து. அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தது. சரி நம் கதை முடிந்தது என்று நினைத்தான். குரங்கு வேடத்தில் இருந்த பட்டதாரி. சிங்கம் மெல்ல வாயைத் திறந்து பேசியது. “ஏ! பி.ஏ., ! பயப்படாதே நான் எம்.ஏ., ” என்றது. இதைச்சொல்லி முடித்ததும், அடுத்து என்ன நிகழுமோ என ஆவலாக கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினரிடையே சிரிப்பு அலை. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எப்படி இருக்கிறது. பாருங்கள், பி.ஏ. படித்தவன் குரங்கு வேடமும், எம்.ஏ. படித்தவன் சிங்கம் வேடமும் போடும் அவலநிலை என்று இந்த கற்பனை நிகழ்ச்சியை நாடகப்படுத்தி சொன்னபோது எனக்கு வெற்றி கிடைத்தது.

பொதுவாக பள்ளி மாணவர்கள். குழந்தைகள் மத்தியில் பேசும்போது கதை சொன்னாலும் அல்லது பாடல்கள் பாடினாலும் அதை விரும்பிக் கேட்பர். அத்தோடு பாடலின் இசை, கருத்து இவற்றுக்கு ஏற்ப நமது அங்க அசைவுகளையும், முக பாவங்களையும் இணைக்கும் போது எதிரில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் பேச்சாளரின் பேச்சோடு ஒன்றி விடுவார்கள்.

சில சம்பவங்களை நாடகப்படுத்திப்பேசுகிற போது பேச்சு தனியானதொருமெருகைப் பெற்று விடுகிறது. ஆனால் நடிப்பு மிதமிஞ்சிவிட்டால் எள்ளி நகையாட ஏதுவாகும் என்பதையும் மறந்து விடக் கூடாது.

இடைவெளி:

சொற்பொழிவாற்றும் போது கேட்போர் உள்ளத்தில் ஆவலைத்தூண்ட பேசிக் கொண்டே இருக்கும் போது உச்சகட்ட காட்சியைச் சொல்லும் முன்பு பேச்சை சற்று நிறுத்தி… பிறகு பேசுகிற உத்தியைத்தான் இடைவெளி என்பர். ஆங்கிலத்தில் பாஸ் ( Pass) என்பர்.

சர்கஸ் கம்பெனியில் பி.ஏ. படித்தவன் குரங்குவேடம் போட்ட கதையை சொல்லிக் கொண்டே வந்து சிங்கம் வாயை திறந்தது என சற்று நிறுத்தி கூட்டத்தை ஒருமுறைப் பார்த்தால் கூட்டம் மெய்மறந்து அடுத்த என்ன நடக்குமோ! அடுத்து என்ன என்று விரைந்து சொல்லமாட்டாரா என எதிர்ப்பார்ப்போடு இருப்பதை பார்க்கலாம். அப்போது சிங்கம் பேசியது! ஏ…பி.ஏ! நீ பயப்படாதே! நான் எம்.ஏ!’ என்றவுடன் கூட்டத்தில் கை யொலி கிளம்பும். எனவே பேச்சில் உரிய இடத்தில் பேச்சை நிறுத்தி தக்க அளவு இடைவெளி கொடுத்து கேட்போர் மனத்தில் ஆவலை தூண்டுவதும் வெற்றிகரமான பேச்சுக்குத் தேவை
– தொடரும்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1997

எப்பொருள் யார்யார்க் கேட்பினும்
அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்
அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)
மனமும், மனித வாழ்வும்
வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி?
நண்பர்கள்
உறவு
விடிவு
ஓ…. இளைஞனே..
தொண்டனும் தலைவனும்
ஒரு விழா துவங்குவதற்கு முன்
சாதிச் சோறு
நம்மை பரிகாசிப்பவர்களை…
முன்னேற்றப் பாதை
அதிஷ்டம் (Luck)
உள்ளத்தோடு உள்ளம்