Home » Articles » சிந்தனைக் களம் – 1

 
சிந்தனைக் களம் – 1


admin
Author:

டாக்டர் இல.செ.க.நினைவுச் சிந்தனைப் பேரவையும் ‘தன்னம்பிக்கை’ மாத இதழும் இணைந்து நடத்திய சிந்தனைக் களம் – 1 நிகழ்ச்சி கடந்த 7.7.96 ஞாயிறன்று கோவை திவ்யோதயா அரங்கில் நடைபெற்றது.

கருத்தரங்கம், பார்வையாளர்கள் கேள்வி – பதில் என இரு பாகங்களாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர், டாக்டர். அருணா இராஜகோபால் அவர்கள் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் டாக்டர். ஜி. இராமநாதன் அவர்கள், இளைஞர் – இலக்குகள் என்ற தலைப்பிலும், வேளாண்பல்கலைக்கழக பேராசிரியர். டாக்டர். ஆர். விஜயராகவன் அவர்கள் இளைஞர்கள் நேற்று-இன்று-நளை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர். பேராசிரியர் கனல் மைந்தன் அவர்கள் ‘கீதாஞ்சலி’ நூல் திறனாய்வு செய்தார். தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டாக்டர். அருணா இராஜகோபால், டாக்டர். ஜி. இராமநாதன், டாக்டர். ஆர். விஜயராகவன், பேராசிரியர் கனல் மைந்தன் ஆகியோர் விளக்கமளித்தனர்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை பாவலர் செந்தமிழ்வாணன் வரவேற்க, முடிவில் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு.க.ச. சங்கர் அவர்கள் நன்றி கூறினார்.

குறுகிய கால இடைவெளியில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தமையால் தன்னம்பிக்கை வாசகர்களுக்கு உரிய காலத்தில் அறிவிக்க இயலவில்லை. அடுத்தடுத்த வரவிருக்கும் சிந்தனைக்களங்களில் நீங்கள் பங்கேற்க ஏதுவாக உரிய காலத்தில் தன்னம்பிக்கையில் வெளியிட ஏற்பாடு செய்கின்றோம்.

– டாக்டர் இல.செ.க. சிந்தனைப் பேரவை. கோவை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1996

அறிவு வேறு அனுபவம் வேறு
பற்களும் பாதுகாப்பும்
இளைஞர்கள் – நேற்று, இன்று, நாளை.
சிந்தனைக் களம் – 1
ஒரு தவறு நேர்ந்துவிட்டால் என்ன செய்யலாம்.
உங்கள் நெஞ்சம்
பாராட்டுகிறோம்
தண்ணீரும் தத்துவமும்
இலட்சியம் வாழ்க்கையின் திறவுகோல்
உடல் மட்டுமே ஊனம்
பொறாமை என்னும் பொல்லாக்குணம்.
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனைகள்
தன்னம்பிக்கை பெற….