Home » Editorial » பதவி

 
பதவி


admin
Author:

இன்றைய மக்களாட்சி முறையில் பதவியும் முன்னேற்றத்தின் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகின்றது. பதவியும், தகுதிக்கும் உழைப்புக்கும் ஏற்ற வகையில் இருந்தால்தான் அது நிலைக்கும். மாறாகத் தகுதியும், திறமையும் இல்லாத பலர் உயர்ந்த பதவியில் இருப்பது உண்மையே. இது மக்களாட்சியின் குறைபாடே ஒழிய அறத்தின் குறைபாடு அல்ல. அவர்கள் பதவியில் இருக்கும் போது அவர்களால் ஆதாயம் தேடுகின்றவர்கள் ‘இந்திரன், சந்திரன்’ என்று புகழ்வார்கள். அவர்கள் பதவி முடிந்த பிறகு ‘கிடக்கிறான் அயோக்கியன்’ என்பார்கள். இது அரசியல் பதவிக்கு மட்டுமல்ல; அலுவலகப் பதவிக்கும் பொருந்தும். நம் நாடு முன்னேறாமைக்குக் காரணம் தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் உரிய பதவியில் இருப்பதற்குரிய வாய்ப்பே அமைவதில்லை என்பதுதான். அதற்காக நாம் தீயவழியைத் தேர்ந்து அழிந்துவிடக் கூடாது. நேரியவழியில் செல்வதே நமது குறிக்கோள். அதில் கிடைப்பது எதுவானாலும் அதை ஏற்றுக்கொள்வோம். நாம் அத்தகைய மன நிலையைப் பெறவேண்டும். குறிக்கோள் உடையவர்கள், முன்னேறத்துடிப்பவர்கள் இந்த விதிமுறைகளிலிருந்து சிறிதும் மாறக்கூடாது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1996

பதவி
உயர்ந்து விளங்க வேண்டுமா?
உங்கள் முன்னோடிகளைக் கண்டுபிடியுங்கள்
முன்னோடிகளைப் பின்பற்றுவது
ஒரு சாதனையாளரின் சந்திப்பு
அந்தக் குழந்தை
எண்ணங்களும் வாழ்க்கையும்
நற்பண்புகள் என்னும் நீரோடையில்…
முன்னேறு….! முன்னேறு….! முன்னேறு….!!!
இல.செ.க.வின் சிந்தனைகள்