Home » Articles » இல.செ.க.வின் சிந்தனைகள்

 
இல.செ.க.வின் சிந்தனைகள்


கந்தசாமி இல.செ
Author:

உங்களால் முடியும்

உங்களால் முடியும் என்று அழுத்தமான தன்னம்பிக்கை கொள்வீர்களானால் அது முடிந்தே தீரும். (You cna do it if you believe you can) நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதை அடைந்தே தீருவீர்கள். உங்களுக்கு வேண்டியது எல்லாம் தன்னம்பிக்கையும் அதற்கேற்ற உழைப்பும்தான். எலி தனக்கு என ஒரு வளை பறித்துக் கொள்கிறது. குருவி தனக்கென ஒரு கூடுகட்டிக் கொள்கிறது. மனிதர்கள் ஆறறிவு படைத்தவர்கள். நமக்கென ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க, நாம் எண்ணிய குறிக்கோளை அடையாவிட்டால் என்ன பயன்? எலிக்கும் குருவிக்கும் தன்னம்பிக்கை இருக்கிறது என்ற் உண்மையையாவது நாம் தெரிந்தகொள்ள வேண்டாமா? புலி வாழ்கின்ற காட்டில்தானே மான்களும் ஓடித் திரிந்து தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்துகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

வாழ்க்கையில் சுகம் துக்கம் எல்லாம் இருந்து கொண்டுதான் இருக்கும். இவற்றைக் கடந்து எதிர்நீச்சல் போட்டு வெற்றிகொள்வதுதான் தன்னம்பிக்கையால் விளைகின்ற சாதனை.

நாமே பிழைக்க வேண்டும் நமக்கே பதவி நிலைக்க வேண்டும். அதுவும் நிரந்தரமாக இருக்க வேண்டுமானால் மக்களின் வறுமையும் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்றெண்ணிய உன்மத்தர்களை ஊழல் மூட்டைப் பூச்சிகளை உருட்டிப் பெரட்டி பறந்தள்ளியுள்ளார்கள்!. இங்கு நிலவும் நீங்காத வறுமைக்கு அரசியல் தலைவர்கள் தான் காரணம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து – மக்கள் நலனை மறந்து மடியேந்தி ரொக்கத்தைத் தேடி அலைந்த வக்கற்ற மாக்களான அரசியல் தலைவர்களை வாக்கு வெடியால் விரட்டியிருக்கிறார்கள். ஒரு ரூபாயுக்குக் கையாட்டுப் போட்டு ஆயிரங் கோடிகளுக்குக் கையூட்டு வாங்கிய செல்வச் சீமாட்டிகள், அத்தனை அபார்ட்மென்ட்களையும் தானே அள்ளி அணைத்துக் கொண்டு குபேர புரியில் குதூகலித்த சகத் தோழிமார்கள். புதிய(போ)பார்வையைப் போர்த்திக் கொண்டு பசுமாடாய்த் திரிந்த கூத்தப்பிரான்கள் முகமூடிகள் கிழிக்கப்பட்டு ஒட்டுமொத்தச் சுயநலங்களின் சுயரூபங்களுக்கு வெளிச்சம் காட்டப்பட்டுள்ளது! பக்கத்து மாநிலங்களில் பத்திரமாகப் பதுங்கியிருக்கும் பினாமிப் புலிகளுக்கு கிலி கண்டிருக்கிறது!

எப்பொழுதும் நீதி தேவன் மயக்கத்திலேயே விழுந்திருக்கமாட்டான்! இப்பொழுது விழித்து… உட்கார்ந்து கொண்டிருக்கிறான்! இதுபோதாது… எழுந்து… நிற்கவேண்டும்…! இல்லையேல் இளைஞர்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டார்கள் பாய்ந்தெழுவார்கள் அசிங்கங்களை அழிக்கும் சிங்கங்களாய்! அவர்கள் வறுமைக் கடலில் எழ்ச்சிப் புயல்…. மையங்கொண்டுள்ளது! தங்கமங்கை மூடிமறைக்கும் வைரச் சுரங்கங்களைத் தகர்க்க எவரும் வெடி வைக்க வேண்டியதில்லை! இளைஞர்கள் வறுமைவானில் இன்னல் மின்னிக் கொண்டிருக்கிறது! அங்கு இரத்தின சபாபதிகளின் ஈரமில்லா இதயங்களில் இடி இறங்கியே தீரும்…! அந்தக் கொள்ளைக்காரன் அலிபாபாவையும், அவனுடன் அள்ளிய நாற்பது திருடர்களையும் அம்பலத்திற்குக் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் அவர்கள் அரசியல் தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும்….

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1996

பதவி
உயர்ந்து விளங்க வேண்டுமா?
உங்கள் முன்னோடிகளைக் கண்டுபிடியுங்கள்
முன்னோடிகளைப் பின்பற்றுவது
ஒரு சாதனையாளரின் சந்திப்பு
அந்தக் குழந்தை
எண்ணங்களும் வாழ்க்கையும்
நற்பண்புகள் என்னும் நீரோடையில்…
முன்னேறு….! முன்னேறு….! முன்னேறு….!!!
இல.செ.க.வின் சிந்தனைகள்