கல்வி
பூக்கும் இன்னாள் பொன்னாள் ஆக
சித்திரைப் பெண்ணின்
தளிர்ச்சிரிப்பில் குளிர்வோம்.
கதிரவனின் ஒளிக்கதிரில்
புத்தாண்டு புலர்ந்தின்று
தமிழ்த்தாயின் தாள் பணிந்து
புத்தாண்டைத் துவக்கிவிட்டோம்
சித்திரைப் பெண்ணின்
நல்வரவால்
சிந்தித்துச் செயல்படத்
தொடங்கிடுவோம்
சிற்பி கையின்
சிற்றுளி போல்
சிந்தனைச் சித்திரம்
செதுக்கிடும் .
கவிதைத் தென்றல்
கனியும் இவ்வேளையில்
கல்வித் துறையினைக்
கனிவுடன் ஆய்வோம்.
கண்ணில் ஆடும் கவிதைகள்
குழந்தைகள்
காற்றில் ஆடும் சருகாய்
இன்றைய கல்வி முறையால்
தள்ளாடுதே!
ஏன் இத்துனை பாரங்கள்
என்ற கேள்வி எழுந்தது.
என் நெஞ்சிலே
ஏற்றம் மிக்க கல்வி
இன்று ஏமாற்று விந்தையாய்
போனது ஏன்?
பாரம் சுமக்கவோ குழந்தைகள்!
பாடம் கற்கவல்லவா
பள்ளிச் சாலைகள்!
இளமை மிகுந்த நாட்களை
இனிமை மிக்க நாட்களாக
ஆக்குவோம்
விண்ணில் மிதக்கும்
வண்ணத்துப் பூச்சியாய்
மண்ணில் தவழும்
கண் மணிக் குழந்தைகளின்
மெல்லிய உள்ளங்கள்
கல்விக் கல்லால்
கொல்லப்படுவதேன்?
இல்லையோ வேறுவழி?
புதிய கல்வி முறை
செழித்தோங்கட்டும்
புதிய சிந்தனைச் சிற்பிகளை
உருவாக்கட்டும்.
Share

August 1995

















No comments
Be the first one to leave a comment.