Home » Articles » புயல்களும் விலகி நிற்கும்

 
புயல்களும் விலகி நிற்கும்


தென்னரசு
Author:

வீட்டிற்குள் இருந்து
விதியை நோக்கும்
விந்தை மனிதா
வெளியே வா!

நீ…!

படித்த கணக்கு
பார்த்து பார்த்து
வயது கணக்கை
மறந்து விட்டாய்

தூங்கும் போது
இருள் தெரிகிறதா?
அது…
உன் தூங்கிய வாழ்க்கையின்
நிறத்தை காட்டத்தான்

நவீன யுகத்தில்
ஒரு இளைஞனுக்கு

சுயமரியாதை என்பது
சுயதொழில் தொடங்குவதற்றுதான்!

நண்பனே!

விளக்கை வைத்தா
வாழ்க்கையைத் தேடுவது
வாழ்க்கைக்குள்ளே
விடியலைத் தேடு.

வாலிப தேசத்தின்
வசந்த தென்றலே
நம்பிக்கை நாற்று
சுமந்து வா!

இனியும தூக்கமென்ன?
இதயத்தின் துக்கமென்ன?
புறப்படு
புயல்களும் விலகி நிற்கும்

ந. இளவரசி,
நன்றி; நிர்மலா கல்லுரி இதழ்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment