எண்ணம்
பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. பாடப் புத்தகங்கள் வாங்க, புதிய உடுப்புக்கள் வாங்க, நன்கொடைகள் வழங்க நிதித் தேவை அதிகரித்துள்ளது.
சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் பொருளாதாரத் துறையில் பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது.
காகிதங்களின் விலையும் கூடிக்கொண்டே போகிறது. ஏற்றுமதிக்கான உற்பத்தி என்ற நிலையில், உள்நாட்டுத் தேவைகளில் பற்றாக்குறை ஏற்பட்டு, விலை கூடுவதற்கு வாய்ப்பாகி விடுகிறது.
எனினும் இல.செ.க.வின் தன்னம்பிக்கை எதிர் நீச்சல் போட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
அரச்சலூர் நண்பர் திரு.தென்னரசு அவர்கள் இதழின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வமுடன் சந்தாதாரர்களைக் சோர்த்துத் தருகிறார். அவரது சேவைக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நண்பர்களின் திருமணத்திற்கு ஓராண்டு சந்தா செலுத்தி மணமக்களுக்குப்
புதிய வழியைக்காட்டி வருகிறார். நண்பர்கள் அவரது வழி காட்டுதலைப் பின்பற்றலாம்.
தொழில், வர்த்தகத்துறையிலுள்ள நண்பர்கள் விளம்பரங்கள் அளித்து ஊக்குவிக்க வேண்டுகிறோம்.
Share

August 1995

















No comments
Be the first one to leave a comment.