Home » Articles » பேரவைச் செய்தி

 
பேரவைச் செய்தி


admin
Author:

(2.10.94 ஞாயிறு காலை 10 மணிக்கு கோவை திவ்யோதயாவில் இல.செ.க நினைவுச் சிந்தனைப் பேரவையின் 21 ஆவது கூட்டத்தில் அரிமா, S.D. முகமதுயூசப் அவர்கள் ஆற்றிய உரை)

‘யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில், இல.செ.க.வின் பலம் தன்னம்பிக்கையில்’ அதற்காகவே நிறைய கூட்டங்கள் நடத்தினார், இன்றும் மகாத்மாவின் தியாகம், நேருவின் நேர்மை, காமராசரின் உழைப்பு, விவேகானந்தரின் விவேகம், இல.சே.கவின். தன்னம்பிக்கை ஆகியவை நம்மிடையே உள்ளன. ஆனால் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதில்லை. அதை மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு பேரவை எடுத்துக் கூறுவதுடன் முன்னுதாரணமாகவே நடந்துகாட்ட வேண்டும். மனிதனுக்கு இடதுகை, வலதுகை இருப்பது போல மூன்றாவது கை நம்பிக்கை எனக் கொள்ள வேண்டும். தோல்விகளும், பிரச்சினைகளும் தோன்றத் தோன்றத்தான் அவைகளிலிருந்து ஒரு நல்ல அனுபவம் கிடைக்கிறது. அனுபவத்தைக் கொண்டு வெற்றிபெற முடிகிறது.

‘கல்லும் மண்ணும் கூட
கட்டிடமாகிறது
கருவேல முள்ளும் கூட
வேலியாகிறது
சோம்பிக் கிடந்தால்….?
நம் முன்னேற்றம்
முடங்கிப் போகிறது.

நம் முயற்சிகளும், உழைப்பும் இதயத்துடிப்பு போலத் தொடர்ந்து இருக்க வேண்டும். ‘முயற்சியிலே அயற்சியில்லையேல் வளர்ச்சியிலே தளர்ச்சியில்லை’ நம் செயலுக்கும், உழைப்புக்கும் முன்னால் திட்டமிட வேண்டும். அனைவருக்கும் சம்மாக பகிர்ந்தளிக்கப்பட்டது. நேரம்தான். நேரத்தைச் சரியாக நிர்வகிக்க முயல வேண்டும். 60 வருட மானுட வாழ்க்கையில் தூக்கத்தில் 30 வருடமும், படிப்பில் 20 வருடமும் இன்னபிற வாலிப விளையாட்டுக்களில் 5 வருடமும் போக எஞ்சிய சாதனை ஆண்டாக 5 ஆண்டுகள்தான் மிஞ்சும் (அவர் 60 வருடம் உயிரோடிருந்தால்) நம் அறிவாற்றலால் இதை ஓரளவு அதிகரிக்கலாம்.

சாதனையாளர்கள் வரிசையை நோக்கினால் எடிசனின் கடும் உழைப்பு நன்கு விளங்கும் சமீபத்தில் கூட சுதா சந்திரன் என்ற பெண் ஒரு கால் இல்லாத நிலையிலும், செயற்கைக் கால் மூலம் நடனமாடி புகழ் பெற்றார். அவரது தன்னம்பிக்கையும் கடும் உழைப்பும் நமக்கு ஒரு பாடமாகும். நாம் அனைத்திற்கும் பிறரைச் சார்ந்து இருக்கக் கூடாது. வரும் சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்த வேண்டும். சந்தர்ப்பம் அமையவில்லையேன் அதை உருவாக்க முயல வேண்டும். நல்ல நண்பர்களின் தொடர்பையும் எண்ணிக்கையையும் அதிகப் படுத்திக்கொள்ள வேண்டும். கனிவான பேச்சு புன்சிரிப்பு ஆகியவற்றைச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும். உழைத்தால் மட்டும் போதாது நமது முழுக் கவனமும் நாம் எடுத்துக்கொண்ட செயலில் இருக்க வேண்டும். பொதுவாக இரு வகையான மனிதர்களை நாம் சந்திக்கின்றோம். ஒரு சிலர் சோதனைகளால் துவண்டு விடுகின்றனர். ஒரு சிலர் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுகின்றனர். அந்த உறுதியை நாம் பெற வேண்டும்.

உலகம் போட்டியாலானது எனவே விடாமல் நமது செயல்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும் மற்றவர்களைத் தோற்கடிப்பது நமது நோக்கமல்ல, நாம் வெற்றிபெற வேண்டும் அவ்வளவே.

காதல் இளவயதில் இயல்பானது. இளைஞர்கள் அதையே நினைத்து உருகக்கூடாது. காதல் வாழ்க்கையில் ஒரு அம்சம். ஆனால் அதுவே வாழ்க்கையல்ல. 99 தோல்விகள் நம்முடைய கடமையைச் சரிவர செய்யாததால் ஏற்படுகிறது. இது நாம் முதலில் உணரவேண்டும். விலங்க்குகள் தமக்குத் தேவையானதைத் தேடிச் செல்லவேண்டும். மனம் தெளிவடைய முதலில் நம் உடல் நலத்தைப் பேண வேண்டும். முடிவாக பேரவை, திரைப்படம், தெளிவற்ற அரசியல், காதல் இவைகளின் பின்னால் போய்க் கொண்டிருக்கும் எண்ணற்ற இளைஞர்களை மீட்டு நல்வழிப்படுத்த முயலவேண்டும். நம் முயற்சிக்கும்கூட சிறு குழந்தை நடைபயில்வதைச் சான்றாகக் கொள்ளலாம்.

இல.செ.க.வின் இலட்சியப்படி, ந்திகள் இணைப்புக்கு முன்னால் நண்பர்கள் இணைய வேண்டும்.

‘எழுவதற்காகவே தவழ்ந்தோம்
நடப்பதற்காகவே நிமிர்ந்தோம்
வாழ்வதற்காகவே பிறந்தோம்
வாழ்க்கை வாழ்வதற்கே.

எனும் சிந்தனையுடன் விடை பெறுகிறேன்.

கூட்டத்திற்கு பேரவைச் செயலர் திரு. மு.ஊ. சங்கள் தலைமையேற்றார். முடிவில் பொருளாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1994

கருத்துக் குவியல்கள்
பேரவைச் செய்தி
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
ஆசிரியரின் டைரிக் குறிப்பு
உங்கள் நெஞ்சம்
சிந்தனைத் துளி
பிரச்சினையும் தீர்வும்
வாழ்த்துப்பா
முயன்றால் முடியாததும் உண்டோ?
தன்னம்பிக்கை
இல.செ.க.வின் சிந்தனைகள்
எல்லாம் உங்கள் கையில்