Home » Articles » வெற்றி என்ற சாலையில் பயணம் செய்ய

 
வெற்றி என்ற சாலையில் பயணம் செய்ய


admin
Author:

சிந்தனை – தீர்மானம் – செயல்திட்டம்!

வெற்றி பெற்றவர்கள் நிதானமாக, மலை ஏறுகின்றவர்களைப் போல, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்திருப்பார்கள். அவர்களது ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் உறுதியான தீர்மானமும், கடுமையான உழைப்பும் இருக்கும்.

வெற்றி பெற்றவர்களை ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் ஓர் உண்மை விளங்கும். அவர்களது செயல்களுக்குப் பின்னால் இருக்கின்ற தீர்மானங்கள் ஆர அமர, தீரச் சிந்தித்துப் பார்த்து எடுக்கப்பட்டவை என்பது விளங்கும். அள்ளித் தெளித்த அவசர கோலம் இல்லை என்பது புரியும்.

மனதை ஒரு நிலைப்படுத்தி, ஆவதும் அழிவதும் கணக்கிட்டு தீர்மானம் செய்வதுதான் வெற்றிக்கு ஆதாரம் இதனை அறிந்துகொள்ள எப்படித் தீர்மானம் செய்வதென்ற நுட்பத்தை அறிந்து கொள்வது தேவை.

இருவகைத் தீர்மானங்கள்; ஒரு தொழிலைச் செய்கின்றவர் அன்றாடம் பல தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருக்கின்றது. என்ன தொழில் செய்வது, எங்கே செய்வது, யாரை வேலைக்கமர்த்திக் கொள்வது, எவ்வளவு மூலப்பொருள் வாங்குவது, எப்படி உற்பத்தி செய்வது, எங்கே விற்பது என்பது போன்ற முக்கிய தீர்மானங்களையும் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

மிகப் பெரிய தொழில் நிறுவனங்களில் ஆலோசனை கூறத்தக்க வல்லுநர்கள் இருப்பார்கள். இருந்தாலும் இறுதி முடிவினை நடத்துபவரே எடுக்க வேண்டும். சிறிய, நடுத்தர நிறுவனங்களில் மொத்தப் பொறுப்பும் தொழில்நடத்துபவரின் மீதே விழுகின்றது.

தொழிலில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை இரண்டு வகைகளாகப் பகுக்கலாம். ஒன்று, காலத்தாழ்த்தாது உடனடியாக செய்ய வேண்டிய தீர்மானங்கள்.

இவை அன்றாடப் பணிகளோடு தொடர்புடையதாக இருக்கும். எடுத்துக்காட்டாக மூலப்பொருள் எங்கு, எவ்வளுவு வாங்க வேண்டுமென்பதைத் தீர்மானிப்பதைக் கூறலாம். நாம் உற்பத்தி செய்ய போகும் பொருளின் தேவையை ஒட்டியும் மூலப்பொருளின் விலையை ஒட்டியும் தீர்மானிக்க வேண்டும். அதே போல விற்பனை விலையை அவ்வப்போது தீர்மானிக்க வேண்டியதிருக்கலாம். இவற்றில் எல்லாம் விரைவாக சரியாக முடிவெடுப்பவர்கள் குறுகிய காலத்தில் நிறைய வெற்றி பெறுவார்கள்.

இரண்டாவது, நன்றாக யோசித்து எடுக்க வேண்டிய முடிவுகள் இவை. நாம் அடிக்கடி செய்கின்ற முடிவுகளாக இருக்காது. ஒருமுறை செய்துவிட்டால் அதன் விளைவுகள் நீண்ட காலத்திற்குத் தொடர்வதாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக எந்திரங்கள் வாங்குவது, கிளைகள் தொடங்குவது, புதிய பொருட்கள் உற்பத்தி செய்வது, ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடுவது, முதலீடு செய்வது, கடன் பெறுவது போன்றவற்றைக் கூறலாம். இவற்றைத் தீர்மானிக்க எடுத்துக் கொள்கின்ற கால அவகாசம், மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

தீர்மான வழிமுறைத ஒன்றைப்பற்றிச் சிந்தித்து ஒரு முடிவுக்கு தீர்மானத்திற்கு – வருவதற்கு ஒருவழிமுறை இருக்கின்றது. இது அறிவியல் சார்ந்ததாகும். இதனை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம்.

ஒருவர் முதன் முதலாகதனது உற்பத்திப்பொருளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய விரும்புகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் முதலில் அது தொடர்பான எல்லா விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.

விவரங்களைச் சேகரிக்க இரண்டு முறைகள் உள்ளன. என்று அது தொடர்பான நூற்களைப் பொறுமையாகப் படிப்பதாகவும், படித்து தேவையான குறிப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, அது தொடர்பான அதில் அனுபவம் பெற்ற ஆட்களையும், நிறுவனங்களையும் கண்டு, பேசி விவரங்கள் சேகரிக்கலாம். இப்படி நாம் விவரங்கள் சேகரிக்கின்றவர்கள் தக்கவர்களாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் கூறுவதை நூற்றுக்கு நூறு அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவற்றை நன்கு ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்த்து சரியானவற்றை மட்டுந்தான் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நேர்மைக்கு இவரே நேர்

வேளாண்மை செய்திட்டே வீணாகப் போனவர்கள்
மேலாண்மை எய்திடவே மேவும் – வளரும்நல்
வேளாண்மை திங்களிதழ் வேகமாய்தான் செய்திடுவார்
தாளாண்மை நின்றென்றும் தான்!

கமழ்கின்ற வாழ்வில் கமலமெனும் அம்மை
இமிழ்கடலுள் தேடாது பெற்றார் – தமிழ்பற்று
மிக்கமகள் செல்வி ! மகன் கண்ணன் ! எல்லோரும்
மிக்கபடி வாழ்க மிளர்ந்தது!

நொடிந்திட்டே நோக்காட்டில் நொந்து புலம்பி
விடிந்ததும் விடியாதோர் வாழ்வில் – விடியல்
கடிது கொணரக் கருத்துள்ள நூல்கள்
நெடிது வரைகின்றார் நின்று!

மு.வ.போல் தமிழர் முகமலர ஏற்கும்
உவகை புதினமசெய் உத்தமராம் – நாவரிட
நேர்கின்ற போதெல்லாம் நல்லதையே சொல்லுமிவர்
நேர்மைக் கிவரேதான் நேர்!

உலகமெலாம் சுற்றி உரைசெய்தே, வாழ்வில்
உழல்வோர் உயர்வுள்ளுகின்றார் – உழவர்தம்
இன்னல் களைவதற்கே என்றும் எழுதுமிவர்
இன்புற்று வாழ்க இனிது!

– டாக்டர் பெரு. மதியழகன்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1994

நெஞ்சில் உரமேற்று
எது சாதனை?
புதிய வாய்ப்புக்களை உருவாக்குங்கள்
பேரன்புடையீர்
தன்னம்பிக்கை
நம்பிக்கை
உங்கள் கடிதங்கள்
மூன்று வகையான சோதனைக் கற்களின்
வெற்றி என்ற சாலையில் பயணம் செய்ய
ஆசிரியரின் டைரி குறிப்பு
நற்பண்புகள் என்னும் நீரோடையில்
முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்
நாம் நினைத்த குறிக்ககோளை