Home » Articles » முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்

 
முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்


கந்தசாமி இல.செ
Author:

– ஆசிரியர் இல.செ.கந்தசாமி

ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு அவர்கள் தேர்ந்தெடுப்பது ஒரு முடிந்த முடிவாக இருத்தல் வேண்டும். அந்த முடிவில் முன்னேறி நிற்பதற்கு அவர்கள் இடைவிடாது முயற்சி செய்தல் வேண்டும். அவ்வாறே அவர்கள் அரும்பாடுபட்டு உழைத்திடவும் வேண்டும். தீமானமான முடிவு இடைவிடாத பெருமுயற்சி, கடின உழைப்பு ஆகிய இம்மூன்றையும் போற்றிக் கொண்டு, ஒவ்வொருவரும் இந்த மண்ணில் முன்னேற்றங்கண்டு வாழ்தல் வேண்டும். சாதனையாளர்களாகத் தம்மை மேம்படுத்திக்கொண்டு சிறத்தல் வேண்டும். இது இந்த நூல் காட்டும் நோக்கம்.

புறம் பெருமை பேசும் ஒருவர் பின்னோக்கிச் செல்வோராவார். அவ்வாறே அவர் நிகழ்காலத்திலும் வாழ்வோராகார். நிகழ்கால நோக்கற்ற அவர் தன்னம்பிக்கை இழந்தவராகிறார். இதனைக் கொண்டு அவருக்கு எதிர்கால நோக்கும், முன்னேற்றமும் இல்லை என்ற அளவை நெறி முறையில் விளக்கப்படுகிறது.

இந்நூல் காட்டும் சிறந்த கருத்துக்களம் ஒன்று நாவடக்கம். சாதனை படைக்க நாவடக்கம் வேண்டும். வறுமையில் வாட்டங்கண்ட ஒருவர் வளம் சிறந்த வாழ்க்கையைக் காண்பது சாதனை.

நம் கருத்தைப் பிறர் ஏற்குமாறு சொல்லும் திறமை கொண்ட நூலாசிரியர் பாராட்டத்தக்க முத்திரைக்கருத்துக்கள் பலவற்றை முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் என்னும் நூலில் பதிந்திருத்தலைக் காணலாம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1994

நெஞ்சில் உரமேற்று
எது சாதனை?
புதிய வாய்ப்புக்களை உருவாக்குங்கள்
பேரன்புடையீர்
தன்னம்பிக்கை
நம்பிக்கை
உங்கள் கடிதங்கள்
மூன்று வகையான சோதனைக் கற்களின்
வெற்றி என்ற சாலையில் பயணம் செய்ய
ஆசிரியரின் டைரி குறிப்பு
நற்பண்புகள் என்னும் நீரோடையில்
முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்
நாம் நினைத்த குறிக்ககோளை