Home » Articles » பிரச்சனையா உங்களுக்கா?

 
பிரச்சனையா உங்களுக்கா?


admin
Author:

நடைமுறையில் சுறுசுறுப்பாகவும் தன்னம்பிக்கையோடும் இருப்பார்கள் மற்றவர்களை விட சற்று உயரே இருப்பார்கள். இவர்களையும் சமயத்தில் சிக்கல்கள் சோம்ப செய்து விடுகிறது. நன்றாக சிந்தித்துப் பாருங்கள் சிக்கல்களுக்கான காரணங்கள் என்ன? சிக்கல்களை வேறுபாடு செய்து பாருங்கள். உறுதியாக அனைவருமே அனைத்து வகை சிக்கல்களையும் என்றேனும் ஒருநாள் சந்தித்திருப்போம். கீழே எழுதிப் பாருங்கள்.

1.

2.

3.

உங்களது இன்றைய சிக்கல்களையும் எழுதி வையுங்கள். அதற்கான அடிப்படைக் காரணங்கள் மூன்று. இதனை சரியாக ஆராய்ந்து கண்டுபிடியுங்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சிக்கல்கள் இருக்கும். இதில் ஆசைகளால் வந்த சிக்கல்களை சேர்க்க வேண்டாம். அவைகளுக்குக் காரணம் சுயநலம், அதக சுயநம். இதை பொருத்தமட்டில் சுயநலத்தை விடுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் விட்டாக வேண்டி சூழ்நிலைக்குத் தள்ளப் படுவீர்கள். சிக்கலுக்கான அடிப்படை மூன்று காரணங்கள். தன் உடல் நலம் குறித்து, பொருளாதாரம் குறித்து, உறவு குறித்து ஏறக்குறைய அனைத்து சிக்கல்களும் இதனுள் அடங்கும். தங்களது சிக்கல்களை இம்மூன்று தலைப்பின் கீழ் எழுதுங்கள். சற்று தெளிவு பெற இயலும். அதன் பின் ஒவ்வொன்றாக கழிக்கத் துவங்குங்கள். முக்கியச் சிக்கல்களை தெளிவாக உணர்வீர்கள்.

உங்கள் சிக்கல்களை நீங்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். உதவியை நாடாதீர். அப்படியே உதவி கிடைத்தாலும் ஒரு முறை, இருமுறை கிடைக்கக்கூடும். அதன் பின் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தான். எதையும் விரைந்து ஆராய்ந்து முடிவெடுங்கள். செயல்படுத்துங்கள். ஒன்றன் பின் ஒன்றாக களைவது உங்கள் சுமையை குறைக்கும் உற்சாகமும் ஊட்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1993

சாதனையாளர்களின் மூன்று குணங்கள்
பிரச்சனையா உங்களுக்கா?
டாக்டர் இல.செ.க. பாதையில்
தன்னம்பிக்கையின் உதயம்
விவேகானந்தரின் அறிவுரைகள்
உங்கள் பக்கம்
சாதனையாளர்களின் 3 குணங்கள்
சிந்தனைகள் மலர்க!
சாதனையாளர்களின் மூன்று குணங்கள்