Home » Editorial » "மனசே சரியில்லை"

 
"மனசே சரியில்லை"


கந்தசாமி இல.செ
Author:

“மனசே சரியில்லை” என்ற சொற்கள் பலமுறை நம் காதில் விழுந்துள்ளதை நாம் அறிவோம். இதே வார்த்தைகளை நாமும் பலமுறை கூறியிருக்கிறோம். நம் நண்பர்கள், நம்மைச் சார்ந்தவர்கள் நம்மிடம் சொல்லக் கேட்டிருக்கிறோம். எங்கேயாவது போய் வந்தாலாவது ஒரு மாறுதல் – மன அமைதி கிட்டாதா? என்று நம் நண்பர்களை அழைத்தும் சென்று இருக்கிறோம்.

சிலர், நம்மிலும் அனுபவம் வாய்ந்தவர்களை அணுகி அமைதியின்மைக்குத் தீர்வுகாண முயன்று இருக்கின்றோம். இன்னும், சிலர், நல்ல நூல்களைப் படித்து இழந்த அமைதியை மீண்டும கொண்டுவர முயற்சித்து இருக்கின்றோம். வேறு சிலர் தனிமையை நாடி அமைதியைக் காண முயல்கிறோம்.

ஆக ஏதேனும் ஒரு காரணத்தால், சில பல சமயங்களில் பெலும்பான்மையோர் அமைதியை இழந்து தவிக்கிறோம். இதற்கு எல்லாம் அடிப்படையானக் காரணம் என்ன? நுணுகி ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நம் அமைதி கெடுவதற்கு முதற்காரணம் நாமேதான். மற்ற காரணங்கள் எல்லாம் அடுத்து அடுத்து இடம் பெறுபவதான். இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் இந்த உண்மையை ஒத்துக் கொண்டால் பிறகு இழந்த அமைதியை மீண்டும் பெற்றுவிட முடியும்.

நம் முன்னோர்கள் சொன்ன ஒரு கருத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். “நன்மையும் தீமையும் பிறர்தர வருதில்லை, அவற்றை நாமேதான் உண்டாக்கி கொள்கிறோம்” என்பதுதான் அந்தக் கருத்து.

அமைதியாக இருந்த வீடுகளில் ஒரு உறவினர் வருகையால், ஒரு வேண்டாத விருந்தாளி வருகையால் அமைதி இழந்து விடுவதும் உண்டு.

டாக்டர் மு. வ. எழுதிய ‘கள்ளோ காவியமோ’ என்ற நாவலில் தன் நண்பரோடு வருகின்றார் கணவர். காதலித்து மணந்து கொண்ட குடும்பம் அது. சற்றே உடல் நலக்குறைவு காரணமாக கணவர் நண்பரோடு வந்தது தெரியாமல் ‘எடுத்து வைத்து இருக்கிறேன் போட்டுச் சாப்பிடுங்கள்” என்று படுக்கையிலிருந்தவாறே சொல்கிறாள் மனைவி “தன் நண்பன் தன் காதல் வாழ்வைப் பற்றி என்ன நினைப்பான்” என்று ஆராயாது எடுத்து முடிவில், அமைதியான குடும்பத்தில் பெரும் புயல் வீசி, கணவன் மனைவி பிரிந்து – இறுதியில் குடும்பமே பாழ்பட்டுப் போய்விடுகிறது. இப்படிப் பல குடும்பங்களை, பல நிகழ்ச்சிகளை நாம் கண்டிருக்கிறோம்.

ஆக உணர்ச்சி வசப்பட்டால் கூட அமைதி போய்விடுகிறது. அதுவே வாழ்வில் பெருந்துன்பத்திற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

‘மன அமைதி’ என்பது கிடைத்தற்கரிய பெருஞ்செல்வம், ஒருவர் மன அமைதியோடு இருக்கிறார் என்றால் அவர்தான் மிகப் பெரிய செல்வம் என்பது பொருள். மன அமைதியை யார் நிலைபடுத்திக் கொள்கிறார்களோ, வளர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். மன அமைதியை யார் இழந்து விடுகிறார்களோ அவர்கள் தங்கள் வாழ்வில் தோல்வி அடைந்து விடுகிறார்கள்.

ஒருவர் மன அமைதியோடு இருக்கிறார் என்பதைத் தோற்றத்தை வைத்து அறிய முடியாது. ஆனால் அவரது சொல்லும் செயலும் அவர் மன அமைதி உடையவரா இல்லையா என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும்.


Share
 

8 Comments

  1. malik says:

    வெரி குட்

  2. Theenathayalan.T says:

    supper sir

  3. wani says:

    தன் மூச்சை கூட ஒரு சில நிமிடங்கள் நிறுத்தி விடலாம். ஆனால் இந்த மனசை மட்டும் ஒரு இடத்தில் நிறுத்தி விட முடியாது. மனதை கட்டு படுத்துவபவனே இந்த மகா உலகத்தை கண்ணால் காண முடியும்.

  4. jayakumar says:

    மனதை கட்டு
    மடந்தையை வெளி ஏற்று

Post a Comment


 

 


October 1991

சிந்தனைகள்
மன உறுதி.. மன உறுதி.. மன உறுதி…
மன அமைதி… மன உறுதி…
"மனசே சரியில்லை"