Home » Articles » உலகம் உன்னில்

 
உலகம் உன்னில்


admin
Author:

நம் சிறு சிறு செயல்களும் உலகைக் காக்கும் ஏதோ ஒரு செயல் அதை இன்றே துவங்குவோம்.

1. பொறுப்பின்றி திறந்து விடப்பட்ட, ஒழுகும் குழாயை அடையுங்கள். ஒவ்வொரு சொட்டும் நாளைய சொத்து.

2. குளிக்க, கழுவ, துவைக்க எதிலும் சிக்கனம் தேவை. குழாயைத் திறந்து விடாதே. குவளையைப் பயன்படுத்து.

3. காய்கறி வெந்தபின், நீரை வீணாக்காதீர். வைட்டமின் சத்தும், தாதுப் பொருட்களும் வீணாகாது சமைக்க மீண்டும். அந்நீரைப் பயன்படுத்துவீர்.

4. கழிப்பிடம் கழுவும் நீர்த்தொட்டி,கொட்டும் நீரைக் குறைப்பீர். இரண்டு செங்கல் உள்ளே போட்டால் கொள்ளவும் குறையும்.

5. வீட்டுத் தோட்டம் செழித்து வளர உணவுக் கழிவுகள், சமையல் நீரும் உர நீராகும் வீணாக்காதீர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment