Home » Articles » காவிரி வீணாகாமல் தடுக்க அமெரிக்க இந்தியர்கள் யோசனை

 
காவிரி வீணாகாமல் தடுக்க அமெரிக்க இந்தியர்கள் யோசனை


admin
Author:

வாஷிங்டன் நவ-19 இந்தியாவில் காவிரி, மகா நதி முதலிய பல நதிகளின் நீர் பயன்டுத்தப்படாமல் வீணே கடலில் சென்று கலப்பதைத் தடுப்பதற்குத் தக்க யோசனைகளைக் கூறுவதற்கு அமெரிக்காவில் வாழும் இந்திய என்ஜியர்கள் முன் வந்துள்ளனர்.

நதிநீர் நிர்வாகம் சரியான வகையில் இல்லாததால்தான் தென்னிந்தியாவில் ஏராளமான அளவுக்கு நதிநீர் வீணாவதாக அவர்கள் குறிப்பிட்டடுள்ளனர். இதனைத் தடுப்பதற்கு நதி நிர்வாகத் திட்டங்கள் வகுத்துக்கொடுப்பதற்கு தயார் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதற்காக அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களில் இதற்காக அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களில் நதி நீர் நிர்வாகத்துறைகளில் பணிபுரியும் இந்திய விஞ்ஞானிகள் எஞ்சினியர்கள் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இக்குழுவின் தலைவர் எம். நாகராஜூ தெரிவித்தார்.

இந்தியாவில் ஓடும் நதிகளின் நீரில் 12 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்டுகிறது. இதர நீர் அனைத்தும் கடலில் கலந்து வீணாகிவிடுகின்றது. இந்த நிலைமை மட்டும் தலைகீழாக மாறினால் இந்தியா உலகின் உணவுக் களஞ்சியமாகத் திகழும் என்று அவர் குறிப்பிட்டார்.

தென்னிந்திய நதிகளின் நீர் நிர்வாகத்திட்டங்களைத் தயாரிப்பதற்காக 7 உறுப்பினர்கள் கொண்ட தொழில் நுட்பக் குழு ஒன்று பல்கலைக் கழகத்தில் செயற்கை அறிவூட்டல் துறையின் தலைவராக சொன்னார். இத்திட்டத்திற்கான தகவல்களைத் திரட்டும் பணியிலும் அவர் உதவுவார் என்றும் நாகராஜூ தெரிவித்தார். மிஷகனைத் தலைமையிடமாகக் கொண்ட கங்கை காவிரி பாகீரதி டிரஸ்ட் என்னும் சேவை அமைப்பின் ஆதரவுடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருபதாக அவர் கூறினார்.

உதயப்பூர் ஏரியை ஆழப்படுத்தும் பணியில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு உதவுவதற்கும் இந்த டிரஸ்ட் முடிவு செய்துள்ளது. இந்த ஏரியானது ஆழப்படுத்தப்பட்டால் சுற்று வட்டாராக் கிராமங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான நீரை அங்கே தேக்கி வைக்க முடியும் என்று நாகராஜூ தெரிவித்தார்.

நன்றி: தினமணி 20-11–90
(மேலும் விவரங்கள் அடுத்த இதழில்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1991

உலகம் ஒரு குடும்பம் ஆகவேண்டும்
காவிரி வீணாகாமல் தடுக்க அமெரிக்க இந்தியர்கள் யோசனை
திருமணமும் மருத்துவ சோதிடமும்
அமெரிக்காவில் ஒரு தன்னம்பிக்கை
வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள எளிய வழி..
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்