Home » Articles » தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள எளிய வழி..

 
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள எளிய வழி..


விஜய்
Author:

“அட, மண்ணில் தெரியுது வானம்”

“சூரிய நடிகரும் சந்திர நடிகையும் பல்லவப் பெயர் கொண்ட ஹோட்டலில் போண்டா சாப்பிட்டார்கள். (Guess what is the alme Master). இது போன்ற நாட்டுக்குத் தேவையான விஷயங்களை அறிந்து கொள்ளாமல், தன் முன்னேற்றம், தன்னம்பிக்கை என்று அலையும் இளைஞர்களே, உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இதோ ஒரு எளிதான வழி.

மாபெரும் திட்டங்கள் வகுப்பது ஒருபுறம் இருக்ககட்டும். தினமும் சில எளிதான இலக்குகளை (Easy Targets) குறித்துக் வைத்துக் கொள்ளுங்கள்.

அன்றையபொழுது சாய்வதற்குமுன் இதைச் செய்து முடித்து விடுவேன் என்ற முனைப்புடன் செயலாற்றுங்கள்.

‘அட! நம்மால் நினைத்ததைச் செய்து முடிக்க முடிகிறதே! என்ற நம்பிக்கை உற்சாக ஊற்று உங்கள் உள்ளத்தில் பீறிட்டு எழுவதை உணர்வீர்கள்.

தினமும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவிர, உங்கள் வாழ்வில் உயர லட்சியத்தை Life Project அடையும் நோக்கில், 10 பணிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை எபடியும் அன்றைய பொழுதிற்குள் செய்து முடிக்க உறுதியுடன் செயல்படுங்கள். இரவு படுக்கும் முன் எவ்வளவு தூரம் நம் பணிகளை முடித்திருக்கிறோம் என்று மதிப்பீடு செய்து பாருங்கள். விகடனின் விமரிசனக் குழு மார்க் போடுவதைப் போல் இது போன்ற தினசரி மதிப்பீடு (Self- assessmet) நீங்கள் உங்கள் நேரான பாதையை விட்டு விலகாமல் உங்களைக் காப்பாற்றும். ஒரே வெட்டில் மரம் வீழ்ந்து விடுவதில்லை.

நீண்ட தூரங்களையும் ஒவ்வொரு மைலாகத்தான் கடக்க வேண்டும். நம் இலட்சிய மாளிகையை அடைய ஒவ்வொரு அடியாகத் தொடர்ந்து, நேரான பாதையில் நடை போடுவோம். சிறு சிறு வெற்றிகளையும் கொண்டாடும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வோம்.

சிந்தனையில் தெளிவும், செயலாற்றுவதில் உறுதியும் இருக்கும் வரை எந்தச் சக்தியாலும் உங்கள் முன்னேற்றத்தைக் தடுக்க முடியாது.

டாக்டர் விஜய்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1991

உலகம் ஒரு குடும்பம் ஆகவேண்டும்
காவிரி வீணாகாமல் தடுக்க அமெரிக்க இந்தியர்கள் யோசனை
திருமணமும் மருத்துவ சோதிடமும்
அமெரிக்காவில் ஒரு தன்னம்பிக்கை
வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள எளிய வழி..
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்