Home » Articles » நீங்கள் இறுக்கமான மனிதரா? இணக்கமான மனிதராகுங்கள்!

 
நீங்கள் இறுக்கமான மனிதரா? இணக்கமான மனிதராகுங்கள்!


admin
Author:

எதற்கெடுத்தாலும் அவசரப்படுகிறீர்களா? (hurried) யாரிடத்திலும் சண்டைக்கு போவீர்களா? (aggressive) அடிக்கடி பொறுமை இழந்து விடுவீர்களா? (impatient) சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபம் கொள்வீர்களா? (angered) அப்படி என்றால் நீங்கள் இறுக்கமான மனிதர் என்று பொருள். எந்த நேரத்திலும் உங்கள் இயல்பான இதயத் துடிப்பு பாதிக்கப்படலாம். இறுதி நேரலாம்; எச்சரிக்கையாக இருங்கள் – இந்தப் பண்புகளை மாற முயற்சி செய்யுங்கள்.

இதோ சில வழிமுறைகள்.

முதலில் உங்களைப்பற்றி கணித்துப் பாருங்கள்.

1. உங்கள் வாழ்வின் லட்சியங்களில், நீங்கள் நேரத்தை செலவிடும் முறைகள், உங்கட்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் முக்கிமானவை எவை? என்று வரையறை செய்யுங்கள். இவற்றை அடைவதை விட இவற்றில் எது நமக்குத் தகுதி வாய்ந்தது என்று கண்டறிந்து அதை மட்டும் அடைய முயற்சி செய்யுங்கள்.

2. உங்களுக்கு எத்தனை நண்பர்கள்? எத்தனை அமைப்புகளில் தலைவர் பதவி! உறுப்பினர் பதவி பெற்ற சிறப்புகள் எத்தனை எத்தனை என்ற எணிக்ககையில் பெருமை கொள்ளாதீர்கள்! இவற்றின் தரத்தில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். குறைவாகச் செய்தாலும் குணமாகச் செய்யுங்கள். அகந்தை இன்றிச் செய்யுங்கள்.

3. நான்தான் உயர்ந்தவன், என் சொல்படிதான் எல்லாம் நடக்க வேண்டும் என்று வீட்டிலும் வெளியிலும் வற்புறுத்தாதீர்கள். இதில் வரும் சிறு எதிர்ப்புகள் கூட உங்கள் உடல் நலத்தைப் பாதிக்கும்.

4. எல்லாவற்றிலும் ஒரு முழுமை தன்மை – முழுத் தூய்மையை எதிர்ப்பார்க்காதீர்கள். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களால் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள். மற்றவர்களிடமும் சிற்சில பொறுப்புகளை ஒப்படைத்து விடுங்கள்.

5. உங்களுக்காகச் சிறிது நேரம் ஒதுக்கி ஓய்வு எடுங்கள். ஏதேனும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லுங்கள். அழகிய காட்சிகளைக் கண்டு மகிழுங்கள். நல்ல சிந்தனையைத் தூண்டும் புத்தகம் ஒன்றைப்படியுங்கள். அல்லது வெறுமனே உட்கார்ந்து கொண்டு விண்ணில் நிகழும் விந்தைகளை மாற்றங்களைக் கண்டு மகிழுங்கள்.

அடுத்த இதழில் தொடரும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1990

சிந்திக்க வேண்டுகிறோம்
மூன்றாம் கை
புதியவனாய்ப் புறப்படு..
ஜனன உதிர்தல்கள்…!
ஒரு சாதனயாளரைச் சந்தித்த போது…
அஃறிணை
கற்றுக்கொள்..
ஓ அன்றில் பறவைகளே!
தன்னம்பிக்கை பற்றி உங்களோடு ஒரு சில மணித்துளிகள்..
மன விலங்குகள்
நீங்கள் இறுக்கமான மனிதரா? இணக்கமான மனிதராகுங்கள்!
நதிகளை இணைப்போம் நாட்டைக் காப்போம்
வாழ்வின் முடிவான இலட்சியம்?