Home » Articles » எதற்கு தன்னம்பிக்கை

 
எதற்கு தன்னம்பிக்கை


இராமநாதன் கோ
Author:

உயிர்வாழக் காற்றும் நீரும் அவசியம். நலமுடனும் வளுமடனும் வாழ தன்னம்பிக்கை இன்றியமையாத ஒன்றாகும்.

தன்னம்பிக்கையுள்ள ஒருவரிடன் தெளிவான பேச்சையும் சுறுசுறுப்பான செயலையும் ஆழமான பார்வையும், புன்னகை தவழும் முகத்தையும், பணிவான பழக்கத்தையும் பார்க்கலாம். இவர்களிடம் நோய்கள் எளிதில் நெருங்குவதில்லை. வந்தாலும் விரைவில் குணமாகும்.

தன்னம்பிக்கை இல்லாதவரிடம் விரக்தியான பேச்சும், சோர்வான செயல்களையும், உயிரற்ற பார்வைகளையும், களையற்ற முகமும், அற்ப விஷயங்களுக்கெல்லாம் கோப்ப்பட்டு கொதித்தெழும் சிடுசிடுப்பான பழக்கத்தையும் காணலாம். இவர்களுக்கு நோய்கள் அடிக்கடி வரும். வந்தாலும் எளிதில் குணமாவதில்லை. இவர்கள் தாமும் துன்பப்படுவர் மற்றவர்களுக்கும் தொல்லை கொடுப்பவர்கள்.

மருத்துவ முறையில் ஆராயும்போது நம்பிக்கையின்மை பல நோய்களுக்கு மூல காரணமாகவும் இருக்கிறது. தன்னம்பிக்கை இல்லாத இடத்தில் பயம், கவலை, கோபம், பொறாமை போன்றவைகள் குடியேறிவிடும். அது படிப்படியாக வளர்ந்து ஒரு மனப்பதட்டத்தை (Auxlety) உண்டாக்கும். மேலும் நீடிக்கும்போது உடலிலும் மனதிலும் பல நோய்களாக உருவெடுக்கும். தலைவலி, இரத்தக் கொதிப்பு,மாரடைப்பு, கை கால் நடுக்கம் வயிற்றுப்புண், வயிற்றுப் போக்கு, ஆண்மையின்மை, நரம்புத் தளர்ச்சி, மனப் பதட்டம், சித்த பேதம் போன்றவைகள் உண்டாகும். (இந்நோய்கள் உண்டாக வேறு காரணங்களும் உண்டு)

இக் காரணத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு மருந்துகள் மட்டும் போதாது. அவர்களுடைய மனநிலையை நன்கு அறிந்து, அதை விளக்கிக் கூறி மாற்றினால் தான் நிரந்தரக் குணமுண்டாகும்.

ஆகவே மனதை உடலை செம்மைப்படுத்த – நல்ல நூல்களைப் படித்து, நம்பிக்கையூட்டும் மனிதர்களைச் சந்தித்து, Positive thinking தொடர்ந்து வளர்க்க வேண்டும். அதுவே தன்னம்பிக்கைக்கு வித்தாகும். வளமான வாழ்விற்கு வாழ்த்துக்கள்.

-டாக்டர் ஜி இராமநாதன், 641 045


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1990

சரித்திரம்
அர்த்தமான விடியல்கள்
பெர்ட்ரண்டு ரஸ்ஸல்
எவரஸ்டு உச்சிக்கு
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு!
இனி வரும் காலம்
ஆகஸ்டுகளும் ஜனவரிகளும்
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
வளமான வாழ்க்கைக்குத் திடமான உடல்
தேக்கு மரம் நடுவீர்
இமய உச்சியில்
முன்னேற்றத் தடைகள் மூன்று
உங்கள் வாழ்வில் ஒரு நல்ல திருப்பத்தை உண்டாக்கிட
மலிவாய் எப்போது?
எதற்கு தன்னம்பிக்கை