Home » Editorial » சிறப்பிதழ்

 
சிறப்பிதழ்


admin
Author:

இல.செ. கந்தசாமி அவர்கள் இஸ்ரேல் நாட்டில் நடைபெற வேளாமைப் பொருட்காட்சியில் பார்த்த நிகழ்ச்சிகளையும் அந்நாடு அறிவியல் முன்னேற்றத்தில் வேளாண்மையில் முன்னுதாரணத்துடன் விளங்குவதையும் நமது உழவர்பெருமக்களுடன் “தன்னம்பிக்கை” இதழ் மூலம் உரையாடுகிறார்.

-ஆசிரியர் குழு

அன்பார்ந்த உழவர் பெருமக்களுக்கு வணக்கம்,
உங்களை நோக்கி ஒரு விண்ணப்பம்

பயிர் செய்ய விதை வாங்குகிறோம். கூலி ஏர் போட்டு ஓட்டுகிறோம். உரம்,பூச்சி, மருந்து, களை என்று தொடர்நுத அறுவடைவரைக்கும் செலவு செய்கிறோம். இந்த முட்டு வழிச் செலவை ‘இடுமுதல்’ என்கிறோஓம். சரியான நேரத்தில் இந்த முட்டு வழிச் செலவுகைச் செய்தால்தான் நல்ல விளைஞ்ஞல் காணமுடியும்.

இவ்வாறு இடுமுதல்களைப் போட்டு விளைவித்தால் மட்டும் பாதாது. விளைவித்ததற்குச் சரியான விலை கிடைக்க வேண்டும்: விதை, உரம், பூச்சி மருந்துகளுக்கு ஆகும் செலவு குறைய வேண்டும். அவை நியாய விலையில், தேவையான காலத்தில் சிரமமின்றிக் கிடைக்க வேண்டும். பயிர்த் தொழிலுக்கு இன்றியமையாத தண்ணீர், மின்சாரம் போன்றவை தட்டுப்பாட்டின்றிக் கிடைக்க வேண்டும். இவற்றிற்றுக்ம் நாம் இடுமுதல் போட்டாக வேண்டும். விலை போட்டு வாங்குவது பற்றி இங்குக் குறிப்பிடவில்லை. எல்லோருக்கும் எளியமுறையில் கிடைக்க வேண்டும். அதற்குரிய முதலீடு வேறு ஒன்றுமில்லை. ‘ஒறுமைதான்’. ஒற்றுமை என்ற முதலீட்டைப் போட்டால் கிராம மக்கள் வேளாண்மைத் தொழித்துறையில் முழுமையாக வெற்றிபெற்றுவிடலாம்.

காலத்திற்கேற்ற மாற்றம்

முடியாட்சிக் காலத்தில் அரசன் சொன்னது வேதவாக்கு குடியாட்சிகளில் காலத்தில் மக்களின் பிரிதிநிதிகளாக விளங்குகின்ற தலைவர்கள் சொல்வது வேதவாக்கு. மக்களின் கருத்துக்களையே தலைவர்கள் பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் செய்யத் தவறினால் செய்ய வைக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு கிராமத்து மக்களும் ஒற்றுமையாக இருந்து அவர்கள் தேவைகளைப் புலப்படுத்தினால், அவற்றைத் தலைவர்கள் நிறைவு செய்வார்கள். அந்த ஒற்றுமை இன்மையாலேயே பயிரத் தொழில் உயிர்த்தொழில் என்றும் உலகத் தொழில் என்றும் உழவர்களே நாட்டின் முதுகெலும்பு என்றும் புகழப்பட்டாலும், அத் தொழிலைச் செய்கின்ற கிராமத்து மக்கள் பின் தங்கியே இருக்கின்றார்கள்; வறுமையில் வாடுகிறார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் இன்றி, விளை பொருளுக்கு ஏற்ற வருவாய் இன்றி வாழ்கிறார்கள். சொல்லப்போனால் தெரிந்தே ஏமாறுகின்ற வாழ்க்கை உழவர் வாழ்க்கையாக இருக்கிறது. வேறுவழி இன்றித் தொடர்ந்து அத்தொழிலையே செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

ஏன் இந்த நிலை?

இதற்கு அடிப்படையான காரணம் நமக்குள் ஒற்றுமை இல்லாமையே ஆகும். அதனால் அதற்குரிய மூலகாரணங்களை ஆராய வேண்டம். கிராமங்களைப் பொருத்தவரை, அவரவர் வேலைகளை மட்டும் அவரவர் கவனிக்கும் போக்கு அதிகம், கிராமத்து வாழ்க்கை முறையும் அதற்கு ஒரு காரணமாகும். அதனால் பொதுக் காரியங்கள் என்று வந்தால் கூட்டம் கூடுவதேகூடப் பெரிய சிரமம்தான்.அப்படியே கூடினும், அவரவர்க்கு ஒரு கருத்து என்ற நிலைதான். அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது? என்று விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாத தன்மை வேறு; விடாப்பிடியான பிடிவாதம் வேறு.

எதுவானாலும் ஊரில் உள்ள நான்கு பெரியவர்கள் சொல்ல மற்றவர்கள் – இளைஞர்கள் கேட்பது தான் சரியான முறை என்று பழைய கொள்கையில் ஆழமான பற்று உள்ள நிலை ஒரு புறம். நான் சொன்னது தான் நடக்க வேண்டும் இல்லாவிட்டால் எதுவும் நடக்க விடாமல் செய்து விடுவேன் என்ற பிடிவாதமான சிலரின் பிற்போக்குத் தன்மை மறுபுறம். அண்மைக் காலத்தில் அரசியல் கட்சிகளின் தலையீடு- இவை போன்ற இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் பல ஆண்டுகளாக மாரியம்மன் பண்டிகை நடைபெறாமல் போவதற்குக் காரணம் என்ன என்று பாருங்கள். மேலே கூறிய காரணங்கள் தாம் அடிப்படையானதாக இருக்கும்.

எவ்வளவு வேண்டுமானாலும் மாடாய் உழைக்கத் தயாராக இருக்கின்றார்கள் கிராமத்து மக்கள். ஆனால அந்த உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போவதைப் பற்றி அவர்கள்போதிய கவனம் செலுத்துவதில்லை. அதன் காரணத்தைக் கண்டறிந்து அதற்கு வழி காண்பதுமில்லை. அதற்குதான் இந்தச் சிந்தனை.

ஒரு அமைப்பு வேண்டும்

இன்றைய மக்களாட்சி முறையில் எந்தத் தனி மனிதனாலும் ஒரு செயலைச் செய்துவிட முடியாது. அப்படிச் செய்வதற்குரிய இடமும் இல்லை. ஒரு அமைப்பின் கீழிலிருந்துதான் செயல்படவேண்டும். “வாய்மையே வெல்லும்” என்பது பொதுவான உண்மையாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இன்றைய நடைமுறை எண்ணிக்கையே வெல்லும்” என்பதுதான் உண்மை. எந்தப் பகுதியிலிருந்து அதிகம் பேர் கை உயர்த்துகிறார்களோ அதுதான் நடக்கும்.

அதனால் ஊர்தோறும் உழவுத் தொழில் செய்வோர் எல்லாம் ஒன்று பட வேண்டும். ஒரு அமைப்பின் கீழிலிருந்து செயல்படவேண்டும். எதைச் சொன்னாலும் அது அந்த ஊர் மக்களின் பொதுக்குரலாக ஒலிக்கவேண்டும். ஒவ்வொரு ஊரும் அந்த ஊரின் பெயரிலேயே ஒரு நற்பணி மன்றம் அமைத்துக் கொண்டு அந்த ஊருக்கு – அந்த ஊரில் நடைபெறுகின்ற பயிர்த் தொழிலுக்கு எது எது தேவை என்று குரல் கொடுத்தால், பல முறை குரல் கொடுத்துக் கொண்டே இருந்தால் மக்கள் குரலுக்கு மாபெரும் வலிமை உண்டு என்பதை நன்றாக உணர முடியும். இவ்வாறு ஒற்றுமையாக இருந்து பல ஊர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளதை அவ்வப்போது அறிந்தே வருகின்றோம். அவற்றை பார்த்தும் நாம் அதுபடி நடந்து கொள்ளாதது யார் தவறு?அந்த அமைப்பு ஊரின் பொது நன்மை கருதிதாக மட்டுமே இருக்க வேண்டும். அதில் கட்சிகளுக்கும் சாதிகளும் தலை தூக்காத நிலையில் பார்த்து அமைத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் ‘ஊர்நன்மை ஒன்றே’ என்ற ஒத்த கருத்துடையவர்கள் மட்டும் ஒன்று சேர்வதே நலம். எதற்கெடுத்தாலும் குதர்க்கம் பேசுகின்ற நபர்களைக் கட்டாயம் அவ்வமைப்பிலிருந்து தவிர்த்துவிட வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்

இதற்குப் பணச் செலவில்லாத முதலீடு “ஒற்றுமை” என்ற முதலீடு தான். ஊர் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் போதும். தனித்து நின்று செயல்படக் கூடிய வசதி படைத்தவர்கள், இல்லாதவர்கள், தான் தான் பெரியவர் என்ற மனப்பான்மை உள்ளவர்கள் சற்றே ஒதுங்கி நின்று, ஒற்றுமையாகச் செயல் செய்கின்றவர்களுக்கு வழிவிட்டால் கூடப் போதுமானது.நேரமில்லாதவர்கள், அதில் முழுமையாக ஈடுபட முடியாதவர்கள் – ஆலோசனைகள் கூறினால் கூடப் போதுமானது. ஊர் நன்மை பெற வேண்டும். அதை யார் செய்தால் என்ன? அதில் நமக்கும் பங்குதானே.

ஊர்ப் பெயரில் மன்றம்

ஊர்தோறும் அந்தந்த ஊரின் பெயராலேயே “அத்திப்பட்டி” நற்பணி மன்றம்; “ஆத்துப்பள்ளம்” நற்பணி மன்றம் என்று ஒரு அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து, வழி விட்டால் அந்த ஊருக்குக் குடி தண்ணீரா? வரும். மின்சாராமா? வரும். சாலை வசதியா? வரும். வங்கிக் கடனா? கொடுப்பார்கள். ஒற்றுமையாகச் செயல்படுகின்ற ஊர்களில் உரமும் பூச்சி மருந்தும் கூட நியாய விலைக்கு விற்கும் ஓர் அமைப்பை உருவாக்கி விடலாம்.

வேண்டியதெல்லாம் “ஒற்றுமை” என்ற முதலீடுதான். அது ஒன்று மட்டும் உறுதியாக இருந்தால் போதும். ஒவ்வொரு ஊருக்கும் வரவேண்டிய நன்மைகள் எல்லாம் வந்து சேரும். ஒரு அமைப்பை உருவாக்கப் பணம் கேட்டால் கொடுக்கமுடியாமல் போகலாம். ஒற்றுமை உணர்வைக் காட்டலாம் அல்லவா? முடியாவிட்டால் ஒதுங்கி நின்று ஒற்றுமையோடு செயல்படுகின்றவர்களுக்கு வழிவிடலாம் அல்லவா? நீங்கள் இதில் ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள் – உழவுத் தொழில் உயர்வுபெற – உழவர்கள் வளம் பெற உதவுங்கள்.

‘பாரத விவசாயிகள் மன்றம்’
இந்தப் பணிகளைச் செய்ய முன்வருகிறது.

-ஆசிரியர் குழு

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1990

'சரிநிகர் சமானம்'!
கட்டாய ராணுவப் பயிற்சி
எச்சரிக்கை
'நல் திட்டம்'
திறமையை வளர்த்துக் கொள்ள….
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
இஸ்ரேலியா யூதர்கள்
தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்
மார்க்ஃபான் (MARC-FAUN)
சிறப்பிதழ்
சேமித்து வை
கெய்ரோ (CAIRO)
உலக குடிமகன் என்ற வகையில்..
நாற்றுப்பண்ணை
இஸ்ரேலில் இளைஞர்கள்
பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்
நமீபிய விடுதலை!