Home » Articles » நேரத்தை நிர்வகிப்போம்

 
நேரத்தை நிர்வகிப்போம்


இராமகிருட்டிணன் ஜேசி.டி.எஸ்.ஆர்
Author:

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே அந்தப் பணியைச் செய்ய ஆரம்பியுங்கள்.

ஒரு பணியினைச் செய்ய எவ்வளவு காலம் பிடிக்கும் என்று ஆய்வு செய்த அந்தக் காலத்தை ஒதுக்கி இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்து அதன்படி செயல்படுத்துங்கள்.

தொலைபேசிகள் பெரும் அளவில் நேரத்தை மிச்சப்படுத்தினாலும் சமயத்தில் தொல்லை பேசியாக மாறி காலத்தை வீணடித்துவிடும். டிரங்க்கால் அல்லது எஸ்.டி.டி. மூலம் தொடர்பு கொள்ள நினைத்து பலமணி நேரத்தை வீணடிப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.

கடினமான தீர்க்க முடியாமல் ஒத்தி வைக்கும் பணிகளை விசேச நேரத்தில் செய்தால் திரும்ப விரைவாகச் செய்ய ஏதுவாகும்.

உணவு வேளை வந்துவிட்டது என்று பணியைப் பாதியில் விட்டு விடாதீர்கள் துவக்குவது மீண்டும் முதலிலிருந்து செய்தது போலாகும் குறைவாக அல்லது அளவாகச் சாப்பிடுங்கள். அதிகமாகச்சாப்பிட்டு விட்டால் உணவை ஜீரணிக்கத் தான் அதிக சக்தி செல்லும். அசதியும் வந்துவிடும். பணியில் மூளை ஈடுபடாது.

ஒரு சிறிய பேப்பரில் அவ்வப்பொது நாம் நினைத்து, அன்றாடம் செய்ய வேண்டியது போன்றவற்றைக் குறித்துக் கொண்டால் யோசிப்பதில் நேரம் வீணாகாது. படித்தவர் பெரும்பாலோர் சிறிய டைரி போன்றவற்றில் அன்றாடப் பணிகளைக் குறிப்பில் வைத்துக்கொள்வார்கள்.

ஈடுபாட்டுடன் எதையும் கவனிக்கும் மனோபாவத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் கூறும் கருத்து, பேசும் பேச்சு ஆகியவற்றை எளிதில் புரிந்து அவர்களுடன் மனம் வீட்டுப் பேசி விசயங்களைக் கிரகிக்க இயலும். தவிர நமது நெஞ்சில் பசுமரத்து ஆணிபோல் விவரங்களைப் பதிய வைக்க வேண்டும்.

அன்றாடப் பணிகளை சாதாரணப் போக்கில் செய்யாமல் சீக்கிரம் செய்ய புதிய வழிகளை அறிந்து அந்த வழிகளில் செய்து குறைந்த நேரத்தில் முடித்துக்கொள்ள வேண்டும்.

உடன் முடிக்க வேண்டிய பணி, செய்ய வேண்டிய பணி, செய்ய விரும்பும் பணி நமக்கு அவசியமில்லாமல் மற்றவர்களால் உண்டாக்க் கூடிய பணி என நமது பணிகளை வரிசைப்படுத்தி அதன்படி செய்ய வேண்டும். மேஜையில் எக்கச்சக்கமான கோப்புகளை வைத்துக் கொண்டு எந்தக்கோப்பைப் பார்க்கலாம் என்று யோசித்துக் கொண்டு நேரத்தை விரயமாக்கக்கூடாது.

கடிதத் தொடர்பை செம்மைப்படுத்த வேண்டும். அநாவசியமான வார்த்தை ஜாலங்களை உபயோகிக்காமல் செய்தியைச் சுருக்கமாகத் தெரிவிக்கும் வகையில் எழுதப்படும் கடிதத்தையே அனைவரும் விரும்புவார்கள். நமது காரியமும் கைகூடும்

மற்றவர்கள் பணியில் சுணக்கம் ஏற்படுத்த உங்களிடம் வந்தால் அந்தப் பணியை நீங்கள் செய்ய கூடாது. பிரச்சினையை அலசித் தீர்வு வழங்கி இந்த வழியில் செயல்படுத்துங்கள் என்றுதான் கூறவேண்டும்.

திறந்த மனதுடன் எந்தப் பணியிலும் ஈடுபடவேண்டும். அப்போதுதான் அனைவரிடமும் நன்கு பழகவும் இயலும் நினைக்கும் காரியத்தைக் குறைந்த நேரத்தில் செய்யவும் இயலும்.

பணி செய்யும் செய்யும் நேரத்தில் நேரத்தை நிர்வகிக்கும் மனப் பக்குவத்துடன் செய்யுங்கள்.

கடிதம், பேச்சு இரண்டையும் சுருக்கமாகவும் இனிமையாகவும் வைத்திருங்கள். அப்போதுதான் உங்கள் தொடர்பு பயனுள்ளதாக இருக்கும். குறைந்த காலத்தில் பணிகளைச் செய்து முடிக்கலாம்.

பணியை முடிக்க முடியாமல் அடிக்கடி இடையூறுகள் ஏற்பட்டால் மறைமுகமான ஓர் இடத்தைத் தேர்வு செய்து தேவையான பொருட்களை கொண்டு சென்று மனதை ஒரு நிலைப்படுத்தி பணியில் ஈடுபடுங்கள். பார்வையாளர்கள் தொந்தரவின்றி முழு ஈடுபாட்டுடன் பணியை குறைந்த நேரத்தில் செய்ய இயலும்.

அனைத்துப் பணிகளையும் நாமே தலையில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டுமென்று நினைப்பதும் செய்வதும் தவறு. அவரவர் திறமை, சக்திக்கேற்ப பணிகளைப் பகிர்ந்து சம்பந்தப்பட்டவர்களை செய்யச் சொல்ல வேண்டும். தொடர்ந்து எவ்வாறு செய்கின்றார்கள் என்பதைக் கணக்காணித்து வரவேண்டும்.

தீர்க்கமான முடிவுடன் காரியத்தில் ஈடுபடவேண்டும். பணிகளை ஒத்தி வைக்கும் எண்ணம் காலத்தை விரயமாக்குவதோடு உடல் நலக்கேட்டினையும், ஏன் மாரடைப்பையுமே ஏற்படுத்தும். அதே நேரத்தில் தவறான முடிவெடித்து எதையும் செய்யக்கூடாது.

எந்தப் பணியையும் சரியாகச் செய்ய வேண்டும் என்று எண்ணி காலத்தை விரயமாக்குவதை விட கூடிய மட்டிலும் சரியான அளவிற்கு செய்ய முயற்சித்து செயல்படுவது குறைந்த நேரத்தில் பணியைச் செய்ய ஒரு வாய்ப்பை அளிக்கும்.

புத்துணர்ச்சியுடன் இருக்கும்பொழுது பணியைச் சிறப்பாகவும், குறைந்த நேரத்திலும் செய்யலாம். அதைவிட்டு அவசர அவசரமாகக் காரியங்களை அசதியாக இருக்கும் நேரத்தில் செய்வது நல்லதல்ல.


Share
 

3 Comments

 1. M.J.Syed Abdulrahman says:

  time management sir

  please if it gon not come back Pleasant of mind at once

  thanks

 2. M.J.Syed Abdulrahman says:

  time management sir

  please if it gon not come back Pleasant of mind at once went away

  thanks

 3. சார்,உங்க கருத்து நல்லா இருக்கு நன்றி!

Post a Comment


 

 


March 1990

கங்கை காவிரியை இணைப்போம்
வெளிநாடு பயணம்
பதில் சொல்!
உழைக்க நினைத்துவிடு
ஏன் வீழ்ந்து கிடக்கிறாய்?
இந்தியாவில் உயர் கல்வியின் நிலை
சிறந்த தலைவன் யார்?
உனக்குள் ஒருவன்
நேரத்தை நிர்வகிப்போம்
தன்னம்பிக்கையின் பணி
இளைஞர்களிடையே காதலும் காமும்..
ஓ.. என்றன் நெல்சன் மண்டேலாவே!
இன்னொரு பூ..