குழந்தைகள் நலம்

200.00

Description

டாக்டர் க. இராஜேந்திரன் அவர்கள் கோவை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்கான எம்.டி. படிப்பு முடித்தவர். இவர் ஜிப்மர் மருத்துவமனையில் பயிற்சியும், கோவையில் மசானிக் குழந்தைகள் மருத்துவமனையில் உதவி தலைமை மருத்துவ அதிகாரியாக பணி அனுபவமும் பெற்றுள்ளவர்.தற்பொழுது கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையில், குழந்தைகள் மற்றும் சிசுநல சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறவர்.இவர் இந்திய குழந்தைகள் மருத்துவ கழகத்தின் கோயம்புத்தூர் செயலாளராகவும், முப்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறவர். குழந்தைகள் முதுநிலை பட்டப்படிப்பிற்கான துறைத் தலைவராகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக தொழில்முறை பயிற்சி மாணவர்களுக்கு பேராசிரியராகவும் இருந்து வருகிறவர். இந்நூலில் இவர் தாயின் கற்ப காலம் முதல் குழந்தைக்கு 18 வயது ஆகும் வரையில், குறிப்பாக சிசு வளர்ப்பு, உணவு முறைகள், தடுப்பு ஊசி, குழந்தையின் வளர்ச்சி நிலைகள், பொதுவான நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டிய தேவைகள், அவசர உதவி முறைகள் மற்றும் முதல் உதவி போன்ற அவசிய தேவைகள் பற்றி மிக நேர்த்தியாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாற்றுத் திறனாளி குழந்தைகளை வளர்க்கும் முறை குறித்தும், இளம் வயதினரைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவர்களை வளர்க்கும் முறைகளைப் பற்றியும் இந்நூலில் அற்புதமாக விவரித்துள்ளார். “அழகுக் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்தெடுத்து வாழ்வாங்கு வாழ வைக்க இந்நூல் பெற்றோர்களுக்கு பொக்கிஷமே”

Reviews

There are no reviews yet.

Be the first to review “குழந்தைகள் நலம்”

Your email address will not be published. Required fields are marked *