Home » Uncategorized » சித்திரைக்கனி-நாதன்

சித்திரைக்கனி-நாதன்

ஆசிரியர் குழு
Author:

          காலந்தோறும் மனிதன் ஏதேனும் ஒருவகையில் மாற்றம் அடைந்தே வருகிறான். ஒரே நேர்க் கோட்டில் நடப்பது போல் இருப்பவனைக் கூடச் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மாற்றி விடுகின்றன. நானே அதற்கு எடுத்துக் காட்டாக இருக்கிறேன். என்னுள் எவ்வளவு மாற்றம் நிகழ்ந்து விட்டது. நான் எப்படி மாறிவிட்டேன்! ஒரு காலத்தில் நான் இலட்சியம் என்று ஏற்றுக் கொண்டவை எல்லாம் – இன்று கேள்விக்குறிகள் ஆகிவிட்டன.
ஒழுக்கம் ஒன்றே எனக்கு மூலதனமாக இருந்தது. என் ஒழுக்கத்தைக் கண்டே என் மாமனார் எனக்கு இவ்வளவு சொத்தையும் கொடுத்து, தன் மகளையும் திருமணம் செய்து வைத்தார். அவர் அப்போது சொன்னது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
‘மாப்பிள்ளை! என்னிடம் இல்லாதது ஒன்று உங்களிடம் இருக்கிறது. அதனால்தான் என்னை விட நீங்கள் உயர்ந்து நிற்கின்றீர்கள்’ என்றார். என்னைச் சந்தித்த பிறகே தன் குற்றங்களை உணரத் தொடங்கினாராம்.
ஒரு மாமனார் தன் மருமகனிடம் மனம்விட்டுப் பேசும் அளவிற்கு என் நடவடிக்கைகளில் நேர்மை இருந்தது, அவர் மறையும் வரை அந்த நேர்மையில் எனக்கு ஒரு பிடிப்பும் இருந்தது. அவர் என்னை உண்மையாகப் பாராட்டும் போதெல்லாம் என்னை மேலும் மேலும் செம்மைப் படுத்திக் கொண்டேன்.
பாராட்டும் ஒருவகையில் மனிதனைச் செம்மைப் படுத்துகிறது என்பது உண்மைதான். ஆனால் உண்மைக்கு மாறாகப் புகழும்போது? அந்தப் பொய்யான புகழ்ச்சியை வெறுத்து ஒதுக்காமல் ஏற்றுக் கொள்ளும்போது? அழிவும் தொடங்கி விடுகின்றது.
இரண்டாயிரமும் இல்லாத எனக்கு இரண்டு லட்சம் வந்தபோது என் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது. அப்போதைக்கு அதுவே போதும் என்று எண்ணியது. ஆனால் அந்தப் போதும் என்ற மனம் நீண்ட காலம் என்னுள் நிலைத்திருக்கவில்லை.
‘இன்னும் இன்னும்’ என்று ஆசை வளர்ந்து கொண்டே போயிற்று. ‘ஆசைக்கு ஓர் அளவில்லை’ என்று பாடிய மகான் எவ்வளவு உணர்ந்து பாடியுள்ளார் என்பதை எண்ணினாலும், என்னுள் வளர்ந்த ஆசை மட்டும் தடைப்படவில்லை.
ஆனால்?
முன்பு என்னையே நான் நேசித்துக் கொண்ட அளவுக்கு இப்போது என்னை நான் நேசித்துக் கொள்ளமுடியவில்லை. தவறு செய்வதற்கும் கூடத் துணிவு வேண்டும் என்பது எனக்கு நன்றாகப் புரிகிறது. கோழைகள் எதற்கும் தகுதி அற்றவர்கள். என்னைப் போல் கிடந்து குழம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
அந்த ஓட்டலின் வெளிப்புறத்தில், ஒரு சிறிய பெட்டிக் கடையில்தான் என் வாழ்க்கை தொடங்கியது. பள்ளி இறுதி வகுப்புக்குப் பிறகு படிக்க முடியாத நிலையில், 60 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்தக் கடையில் வருமானம் மட்டும் ஒரு நாளைக்கு 60 ரூபாய்க்கு மேல் வந்தது என்பதைப் பின்னர்தான் அறிந்து கொண்டேன்.
செய்தித்தாள்கள், சினிமாப் பத்திரிகைகள், வார, மாத இதழ்கள், பீடா, சிகரெட், பழம் இவைகள்தான் வியாபாரப் பொருள்கள்.
சோற்றுக்கே திண்டாடும் இந்த நாட்டில் இத்தகைய பொருள்களை வாங்குபவர்கள் எல்லாம் ஓரளவேனும் வசதி படைத்தவர்களன்றி வேறு யாராக இருக்கமுடியும்?
ஆங்கிலம் படிக்கத் தெரியாதவர்கள்கூட, பத்திரிகையின் அட்டைப் படத்தைப் பார்த்தே வாங்குவதை நான் கண்டிருக்கிறேன். ஒரு முறை அரைகுறை ஆடையுடன் ஒரு நடிகையின் படத்தை அட்டைப்படமாக வெளியிட்டிருந்த ஒரு மாத இதழ் மட்டும் ‘ஏழாயிரம் பிரதிகள்’ விற்பனை ஆயிற்று. முதல் இல்லாத வியாபாரம்; விற்ற பிறகு பணம் கொடுத்தால் போதும்.
மக்களின் கீழ்த்தரமான உணர்ச்சிகளுக்குத் தீனி போட்டுப் பணம் சேர்க்கின்ற பத்திரிகைகள்தான் ‘ஓகோ’ என்று விற்கின்றன. நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்குகின்றவற்றுள் இவற்றிற்கெல்லாம் முதலிடம் உண்டு.
இப்போதுதான் எனக்கு இதைப்பற்றி சிந்தனையே எழுகின்றது; அப்போது கீதை உபதேசம்போல ‘விற்பனை செய்வதே என் கடமை’ எனக் கொண்டிருந்தேன்.
மனிதன் உயர்வதற்கு நாணயம் ஒன்றே போதும் என்பதுதான் என் அனுபவம். திறமை எல்லாம்கூட இரண்டாவதுதான்.
எதில் எவ்வளவு வந்தாலும் அதில் ஒரு பைசாகூட நான் எடுத்தது கிடையாது. அப்படி ஒரு பழக்கமும் எனக்கு இயல்பாகவே அமைந்து இருந்தது. அந்த நாணயம் ஒன்றே என்னை முதலாளிக்குப் பிடித்திருக்கக் காரணமாய் அமைந்தது.
இன்னொரு நிகழ்ச்சியும் நடந்தது. இதே பெட்டிக் கடையில் லாட்டரிச் சீட்டும் விற்கப்பட்டது. ஒருமுறை, விற்காத ஒரு சீட்டிற்கு லட்சம் ரூபாய் விழுந்தது. அந்தச் சீட்டும் என் கையில்தான் இருந்தது.
விற்றுவிட்டதாகச் சொல்லி அதனை எடுத்துக் கொண்டிருந்தாலும் முதலாளிக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. அவரிடமே அந்தச் சீட்டைக் கொடுத்துவிட்டேன்.
ஏன் அவரிடம் கொடுத்தேன்? இன்னமும் எனக்கு விளங்கவில்லை. பொய் சொல்லி அல்லது ஏமாற்றி வாழ்வதில் எனக்கு அப்போது விருப்பமில்லை என்பதைத் தவிர வேறு விளக்கத்தை இன்னும் என்னால் காணமுடியவில்லை.
என் வளர்ச்சிக்கு இந்த நிகழ்ச்சி ஒரு அடித்தளமாகவே அமைந்தது.
அதற்குப் பிறகு அந்தக் கடைக்கு என்னையே முதலாளி ஆக்கி வாடகையை மட்டும் இரண்டு மடங்காகப் பெற்றுக் கொண்டார். எனக்குத் தெரிந்த எல்லாரும் லாட்டரியில் பங்கு கேட்கச் சொன்னார்கள். நான் அதைப்பற்றி ஒரு முறைகூட அவரிடம் பேசியதேயில்லை.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர்களைக் கூடச் சமுதாயம் சும்மா விடுவதில்லை. எதையாவது தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில்தான் அதற்குப் பெரிதும் மகிழ்ச்சி போலும்.
உழைக்காமல் வரும் பொருள் நிலைக்காது என்பது என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.
லாட்டரியில் வந்த செல்வத்தோடு, இருந்ததும் போய், அவர் இப்போது அதே கடையில் ஆள் இல்லாமல் அவராகவே வேலை செய்கிறார். அந்தக் கடையை வாடகைக்கு
எடுத்துக் கொடுத்தே நான்தான். இப்போது என்னைப்
பார்க்கும் போதெல்லாம் அவர் கூனிக் குறுகிப் போய் எழுந்து நிற்கிறார்.
ஒருவேளை லாட்டரியில் வந்த தொகையில் இவனுக்கும் பங்கு கொடுத்து இருக்க வேண்டும் என்று இப்போது நினைக்கிறாரோ?
வேண்டவே வேண்டாம். எனக்கும் பங்கு கொடுத்திருந்தால் ஒருவேளை அந்தப் பங்கின் அளவிற்கு நானும் கெட்டுப் போயிருப்பேனோ என்னவோ?
அந்த ஓட்டலுக்கு வருகிறவர்களுக்கெல்லாம் என் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியதே அந்த லாட்டரிச் சீட்டு விவகாரம்தான்.
என் வாழ்க்கையில் ஐந்தாண்டுகளைத் தொழிலாளி யாகவும் ஐந்தாண்டுகளை முதலாளியாகவும் கழித்தேன்.
அங்கு வந்து சென்றவர்களைக் காணும் போதெல்லாம் இந்த மேட்டுக்குடியினர் மீது எனக்கு வெறுப்பே வளர்ந்தது.
இவர்கள் எல்லாம் உழைக்காமல் – யாரோ சேர்த்து வைத்த சொத்தில் யாரோ சேர்த்துத் தரும் சொத்தில் – சுகம் அனுபவிக்கிறார்களே என்று அடிக்க எண்ணினேன்.
அப்போதுதான் வடிவின் தந்தை ஒரு நாள் எனக்கு அறிமுகம் ஆனார். அவரும் அரைகுறைப் பத்திரிகைகளை வாங்குவதில் ஆர்வம் உள்ளவர். ஒரு நாள் பத்திரிகை வாங்கி அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் ‘சூட்கேஸை’ மறந்து வைத்துவிட்டுச் சென்று விட்டார். நானும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால் அதைக் கவனிக்கவில்லை.
வைத்த இடம் நினைவில்லாமல் எங்கெங்கோ சுற்றி அலைந்துவிட்டுக் கடைசியாக வந்தார். கேட்டுப் பார்ப்போம் என்ற நோக்கத்தோடு கேட்டாராம். ‘உள்ளே இருப்பது எல்லாம் பத்திரமாக இருக்கிறது’ என்று சொல்லிக் கொடுத்தேன். அவர் அந்த சூட்கேஸ் திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லையாம். அவர் எனக்கு எதை எதையோ கொடுக்க முயன்றார். நான் எதையும் வாங்கிக் கொள்ளவில்லை.
இளமை புகழையே பெரிதாக எண்ணுகிறது. முதுமையோ பொருளையே உயிராகப் போற்றுகிறது.
இந்த உதவியை எனக்கு யாரேனும் முன்பே செய்து இருந்தால் ஆர்வமுள்ளபோதே தொகாலந்தோறும் மனிதன் ஏதேனும் ஒருவகையில் மாற்றம் அடைந்தே வருகிறான். ஒரே நேர்க் கோட்டில் நடப்பது போல் இருப்பவனைக் கூடச் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மாற்றி விடுகின்றன. நானே அதற்கு எடுத்துக் காட்டாக இருக்கிறேன். என்னுள் எவ்வளவு மாற்றம் நிகழ்ந்து விட்டது. நான் எப்படி மாறிவிட்டேன்! ஒரு காலத்தில் நான் இலட்சியம் என்று ஏற்றுக் கொண்டவை எல்லாம் – இன்று கேள்விக்குறிகள் ஆகிவிட்டன.

இந்த உதவியை எனக்கு யாரேனும் முன்பே செய்து இருந்தால் ஆர்வமுள்ளபோதே தொடர்ந்து படித்திருப்பேன். அப்போது 24 வயதாகி இருந்தது. என்னுடைய உழைப்பில் வரும் வருமானத்தையே பெரிதாக எண்ணினேன்.
ஆனால் இன்று?
என் மனம் எவ்வளவு மாறி இருக்கிறது? அநீதிகளைக் கண்டு கொதித்த மனம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போய் விட்டதே! என்னுள்ளும் அநீதி புகுந்துவிட்டதாலா?
முதலில் அந்த எம்.எல்.ஏ. எனக்கு எப்படிப் பழக்கமனார் என்பது நினைவில் இல்லை. ஆனால் அவரது சித்தாந்தம் எப்படியோ என்னை ஆட்கொண்டு விட்டது என்பது மட்டும் உண்மை.
‘தனி மனிதனைத்தான் ஏமாற்றக் கூடாது. அரசாங்கத்தை ஏமாற்றுவதில் யாருக்கு என்ன நட்டம்? அதை நீங்கள் செய்யவில்லையானாலும் வேறொருவன் செய்யத்தான் போகிறான். வேறொருவர் ஆதாயம் அடைந்து அந்தப் பணத்தைத் தீய வழிகளில் பயன்படுத்துவதைவிட, நீங்கள் நல்ல காரியவங்களுக்காவது பயன்படுத்தலாமே’ என்றார்.
டர்ந்து படித்திருப்பேன். அப்போது 24 வயதாகி இருந்தது. என்னுடைய உழைப்பில் வரும் வருமானத்தையே பெரிதாக எண்ணினேன்.
ஆனால் இன்று?
என் மனம் எவ்வளவு மாறி இருக்கிறது? அநீதிகளைக் கண்டு கொதித்த மனம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போய் விட்டதே! என்னுள்ளும் அநீதி புகுந்துவிட்டதாலா?
முதலில் அந்த எம்.எல்.ஏ. எனக்கு எப்படிப் பழக்கமனார் என்பது நினைவில் இல்லை. ஆனால் அவரது சித்தாந்தம் எப்படியோ என்னை ஆட்கொண்டு விட்டது என்பது மட்டும் உண்மை.
‘தனி மனிதனைத்தான் ஏமாற்றக் கூடாது. அரசாங்கத்தை ஏமாற்றுவதில் யாருக்கு என்ன நட்டம்? அதை நீங்கள் செய்யவில்லையானாலும் வேறொருவன் செய்யத்தான் போகிறான். வேறொருவர் ஆதாயம் அடைந்து அந்தப் பணத்தைத் தீய வழிகளில் பயன்படுத்துவதைவிட, நீங்கள் நல்ல காரியவங்களுக்காவது பயன்படுத்தலாமே’ என்றார்.

To buy this book click below….

b11buy now

Share
 
No comments

Be the first one to leave a comment.

Post a Comment

September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை