Home » Post » கர்ப்ப கால பராமரிப்பு முறைகள்-சிசு பராமரிப்பு

 
கர்ப்ப கால பராமரிப்பு முறைகள்-சிசு பராமரிப்பு


ஆசிரியர் குழு
Author:

குழந்தை பிறப்பு ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தோஷத்தைத் தரும் நல்ல நிகழ்வு. ஒவ்வொரு தாயும் குழந்தை பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். காரணம் சிசுவின் உடல் உறுப்புகள் போதிய வளர்ச்சி அடையாமல் இருப்பதால், முறையான கவனிப்பு குறையும் போது பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

சிசு பராமரிப்பின் முக்கியத்துவம்

சிசு பருவம் என்பது பிறந்த முதல் 28 நாட்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் சிசு பல நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு தாயும் சிசுவை நோயின்றி காக்க சிசு பராமரிப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

அதில் முக்கியமானவை,
• தாய்ப்பால் ஊட்டுதல்
• உடல் வெப்பநிலை பாதுகாத்தல்
• சுத்தம் மற்றும் நோய் தடுப்பு முறைகளைப் பற்றி அறிந்து கொள்வது ஆகும்.

குழந்தை பிறந்த முதல் சில மணிநேரங்களில் கவனிக்கப்பட வேண்டியவை

சிசுவைச் சுத்தம் செய்தல்

சிசு பிறந்தவுடன் சுத்தமான துணியால் இரத்தம் மற்றும் மலம் போன்றவற்றைத் துடைக்கவேண்டும். உடம்பில் ஒட்டியுள்ள வெண்மையான (யங்ழ்ய்ண்ஷ்) பொருளை துடைக்கக் கூடாது. ஏனென்றால் இது தோலுக்குப் பாதுகாப்பைக் கொடுத்து நோய் வராமல் தடுக்கும். மேலும் துடைப்பதால் தோலில் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அடையாள அட்டை

எல்லா சிசுவிற்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட வேண்டும். அந்த அடையாள அட்டையில் தாயின் பெயர், மருத்துவமனை எண், ஆணா? அல்லது பெண்ணா? பிறந்த எடை, குழந்தையின் உள்ளங்கால் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.

சிசுவின் எடை

சிசுவை ஒருமணி நேரத்திற்குள் எடை போட வேண்டும். மின் எடை சாதனமாக இருந்தால் நல்லது.

வைட்டமின் ஓ1 ஊசி

எல்லா சிசுவிற்கும் வைட்டமின் ஓ1 ஊசி போட வேண்டும். நிறை பிரசவமாக இருந்தால் 1 மில்லிலி கிராம் குறை பிரசவமாக இருந்தால் 0.5 மில்லிலி கிராம் போட வேண்டும். இதனால் குழந்தைக்குப் பின்னால் வரக்கூடிய இரத்தப்போக்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
வயிற்றைக் கழுவுதல்

பிறந்த குழந்தையின் வயிற்றைக் கழுவுவது என்பது அவசியமில்லை. சில சமயம், குழந்தை பிறப்பதற்கு முன்னரே மலம் கழித்த தண்ணீரைக் குடித்தால் வாந்தி வராமல் தடுப்பதற்காக வயிற்றைக் கழுவ வேண்டும்.

பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை

குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்கு இதயத்துடிப்பு மற்றும் பிறவிக்குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் மூக்கு வழியாக கத்தீட்டர் (இஹற்ட்ங்ற்ங்ழ்) போடவோ அல்லது மலவாய் மூலம் கத்தீட்டர் போடுவதைத் தடுக்கவேண்டும். குழந்தையின் உடலிலின் வெப்பநிலையை எலக்ட்ரானிக் வெப்பமானி மூலம் கண்டறிய வேண்டும். பாதரச வெப்பமானி மூலம் உடலின் வெப்பநிலையைப் பார்த்தால் மூன்று நிமிடம் பார்க்க வேண்டும். மலக்குடல் வெப்பமானி மூலம் உடலின் வெப்பத்தைப் பார்க்கக் கூடாது.

இரண ஜன்னியிலிருந்து பாதுகாத்தல்

குழந்தையின் தாய் கர்ப்பகாலத்தில் இரணஜன்னிக்கான தடுப்பூசி போடாமல் இருந்தால் குழந்தை பிறந்தவுடன் இரண ஜன்னிக்கான தடுப்பூசி போட வேண்டும். குழந்தையின் தாய் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டாலோ அல்லது தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ குழந்தை பிறந்தவுடன் இரணஜன்னிக்கான தடுப்பூசி போட வேண்டும்.

தாயும் குழந்தையும் ஒன்றாக இருத்தல்

பிறந்த குழந்தையைத் தாயிடமிருந்து பிரிக்கக்கூடாது. குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை சுறுசுறுப்பாகவும், விழித்துக் கொண்டும் இருக்கும். இந்த சமயத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு அதிகரிக்கும்.

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தல்

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். செவிலிலியர்களோ அல்லது மருத்துவமனை ஊழியர்களோ குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்ட உதவி செய்ய வேண்டும்.

குடும்பத்தினருடன் உரையாடுதல்

குழந்தை பிறந்தவுடன் மருத்துவரோ அல்லது செவிலிலியர்களோ குழந்தை பிறந்த நேரம், எடை, இனம் (ஆண்/பெண்), குழந்தையின் உடல்நிலை பற்றி குடும்பத்தினருடன் உரையாட வேண்டும். குழந்தை ஆணா அல்லது பெண்ணா என அறியவும், குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என அறியவும் குழந்தையைப் பிறந்தவுடன் உறவினர்களிடம் காட்ட வேண்டும்.

குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் கவனிக்கப்பட வேண்டியவை:

தொப்புள் கொடி பராமரிப்பு

• தொப்புள் கொடியைச் சுத்தமாகவும், காற்றோட்டம் படும்படியாகவும் வைக்க வேண்டும்.
• 5 முதல் 10 நாட்களுக்குள் தொப்புள்கொடி காய்ந்து விழுந்து விடும்.
• தொப்புள் கொடியை ஈரம் படாமல் பாதுகாக்க வேண்டும்.
• பவுடர், விபூதி, மஞ்சள், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைத் தொப்புள்கொடியில் கண்டிப்பாக வைக்கக் கூடாது.

கண் சுத்தம் செய்தல்

சுத்தமான துணியைத் தண்ணீரில் நனைத்து குழந்தையின் கண்களைத் துடைக்க வேண்டும்.

முழுமையான தாய்ப்பால்

தாய்ப்பாலிலின் முக்கியத்துவம் பற்றியும், அதை எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் கர்ப்ப காலத்தில் இருந்தே தாய்க்கு அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் தாய், குழந்தைக்கு வெற்றிகரமான முறையில் தாய்ப்பால் புகட்ட முடியும்.

மஞ்சள்காமாலையைக் கண்டறிதல்

அனைத்து குழந்தைகளையும் பிறந்த சில நாட்களுக்கு, தினமும் இரண்டு முறை மஞ்சள்காமாலை உள்ளதா என்று பார்க்க வேண்டும். பகல் வெளிச்சத்தில் குழந்தையின் உடல் நிறத்தில் ஏதேனும் மாற்றம் காணப்படுகிறதா என்பதை அறிய வேண்டும்.

தடுப்பூசி

அனைத்து குழந்தைகளுக்கும், பிறந்தவுடன், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்வதற்கு முன் மாநில விதிமுறையின்படி தடுப்பூசி போட வேண்டும். மஞ்சள் காமாலை நோய்க்கானத் தடுப்பூசியைக் குழந்தை பிறந்தவுடன் போடுவதால், தாயிடமிருந்து குழந்தைக்கு மஞ்சள்காமாலை நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

குழந்தையைக் குளிப்பாட்டுதல்

தொற்றுநோயைத் தடுக்கவும், உடலின் வெப்பநிலை குறைவதைத் தவிர்க்கவும் மருத்துவமனையில் வைத்துக் குழந்தையைக் குளிப்பாட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

தூங்கும் முறை

குழந்தைக்கு பால் கொடுத்தபின் நேராக படுக்க வைக்க வேண்டும். குப்புற படுக்கவைப்பதால் எதிர்பாராத இறப்பு (நஐஈந) ஏற்பட வாய்ப்புண்டு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை