Home » Post » எடை குறைப்பு -ஒல்லியும் குண்டும்

 
எடை குறைப்பு -ஒல்லியும் குண்டும்


ஆசிரியர் குழு
Author:

என் இனிய நண்பர்களே!, ஒல்லி உடம்பு காரர்களுக்கும், குண்டு உடம்பு காரர்களுக்கும் இரு வேறு பிரச்சனைகள். ஒல்லிக்காரருக்கு குண்டாக வேண்டும், குண்டுகாரருக்கு ஒல்லியாக வேண்டும். இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு மிகவும் சுலபமானது. குண்டுக்காரர், ஒல்லிக்காரரின் நல்ல செயல்களை எல்லாம் செய்ய வேண்டும். ஒல்லிக்காரர், குண்டுக்காரரின் வேண்டாத செயல்களை செய்யாமல் இருந்தால் போதும். அப்படியானால் ஒல்லிக்காரரின் வேண்டிய செயல்களும், குண்டுக்காரரின் வேண்டாத செயல்களும் என்ன என்ன என்று தெரிந்துகொண்டால் இருவித நபர்களுமே சுகமாக வாழலாம் அல்லவா?. ஆகவே நண்பர்களே!, இந்த இரண்டு தன்மையாளர்களையும் புரிந்து கொள்ள முதலில் முயற்சிப்போம்.
கேள்வி ஒல்லித் தன்மையாளர் குண்டுத் தன்மையாளர்
ஏன் இப்படி? ஒல்லித் தன்மையாளர்
மண்ணீரல் திறன் சிறப்பாக இருப்பதால், உணவில் இருக்கும் நல்லதை எடுத்துக் கொண்டு அல்லதை அப்பொழுதே நீக்கிவிடுவதால் கழிவுகள் தேங்குவது இல்லை. உடல் குண்டாவதில்லை நல்லது குறைவாக இருப்பதால் ஒல்லியாக இருக்கிறார்.
குண்டுத் தன்மையாளர்
மண்ணீரல் திறன் குறைவாக இருப்பதால், நல்லது கெட்டது தரம் பிரிக்கப்படாமல், அப்படியே கல்லீரல் செரிமாணத்திற்கு அனுப்பப்பட்டு, அல்லதும் செரித்து எடுத்துக் சேமிக்கப் படுவதால் உடல் குண்டாகிறது. அல்லது தேங்குவதால் குண்டாக இருக்கிறார்.
என்ன தெரியும்? ஒல்லித் தன்மையாளர்
மண்ணீரலானது அல்லதை அப்பொழுதே தள்ளிவிடுவதால் (வாந்தி அல்லது பேதி மூலம்), பிரச்சனை உடனடியாக புரிவதால், இவரால் எது உடலுக்கு நல்லது எது கெட்டது என்று தெரிந்து கொள்ள முடியும்.
குண்டுத் தன்மையாளர்
இவருக்கு மண்ணீரல் உதவியாக இல்லாததால் எல்லாவற்றையும் உடலுக்குள் எடுத்துக் கொண்டபின்தான் பிரச்சனையே தெரிய வரும், ஆகையால் நல்லது எது கெட்டது எது என்று இவருக்குப் புரிவதில்லை.
என்ன செய்ய வேண்டும்? ஒல்லித் தன்மையாளர்
குண்டுகாரர் வாய் கட்டாது ருசிக்கு சாப்பிடுவதைப் பார்த்து தானும் சாப்பிட்டக் கூடாது, தான் உணர்ந்த அல்லதை விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டால், ஒல்லித் தன்மை போய், சராசரி உடல் அளவைப் பெறுவார்.
குண்டுத் தன்மையாளர்
ஒல்லிக்காரருக்குத் தெரிந்த அல்லதை விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டால், குண்டுத் தன்மை போய், சராசரி உடல் அளவைப் பெறுவார். சரி அன்பர்களே!, இவர்கள் இருவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய நல்லது எது அல்லது எது என்று பார்ப்போமா?.
தீர்வுகள் ஒல்லி தன்மையாளர்
துவர்ப்பு, கசப்பு மற்றும் உவர்ப்பு
குண்டுத் தன்மையாளர்
துவர்ப்பு, காரம் மற்றும் கசப்பு
தீர்வுகள் ஒல்லி தன்மையாளர்
இனிப்பு, காரம் மற்றும் புளிப்பு
குண்டுத் தன்மையாளர்
உவர்ப்பு, இனிப்பு மற்றும் புளிப்பு
ஒல்லியோ, குண்டோ இருவரும் மத்தியமான உடல் அமைப்பைப் பெற, கெட்டக் கொழுப்பு உணவுகளையும் தயிரையும் தவிர்த்தால் பலன் கிடைக்கும். ஓல்லியானவர் தயிரைத் தவிர்த்தால், உடலின் கணச்சூடு தனிந்து செரிமாண நொதிகள் நன்கு வேலை செய்து உணவுச் செரிமாணம் (Digestion) மற்றும் சத்து கிரகிப்பு (Assimilation) சிறப்பாக நிகழ்ந்து, ஒல்லி உடல் சதைப் பற்றோடு விளங்க வழி கிடைக்கும். செய்துதான் பாருங்களேன். குண்டானவர், தயிரை விட்டால், கழிவுகள் நொதித்து, புளித்து, உடல் மேலும் குண்டாகாமல் தவிர்த்து உடல் மெலிய வாய்ப்பு கூடும்.
வெகுளித்தனத்தில் சிறந்து விளங்கும் குண்டு நண்பர்களே! உங்கள் உணவுத் தேர்வை ஒல்லிக்காரர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். அறிவுச் சூட்டிகையில் சிறந்து விளங்கும் ஒல்லிக்காரர்களே! குண்டுக்காரர்களைப் பார்த்துக் கண்டதையும் சாப்பிட வேண்டாம். ஒல்லியானவர்களே! குண்டு நபர்களை உணர்வுபூர்வமாக நேசித்து, அறிவுபூர்வமாக வழிகாட்டுங்கள். குண்டானவர்களே! ஒல்லியாளர்களை அறிவுபூர்வமாக அனுகி, உணர்வுபூர்வமாக நன்றி கூறுங்கள். இதனால், இருவரும் நட்பாகவும், நல்ல ஆரோக்கியமாகவும் வாழலாம்.
ஒல்லியானவரின் நல்லதை எடுப்போம்! குண்டானவரின் அல்லதை விடுவோம்!

 

3 Comments

  1. R.Siva subramaniyan says:

    nice

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை