Home » Post » வளமூட்டும் சிந்தனைகள்………………..

 
வளமூட்டும் சிந்தனைகள்………………..


இராமநாதன் கோ
Author:

அவருக்கு ஐந்தடி பதினோரு அங்குலம் உயரமிருக்கும். அகன்ற மார்பு. கைகளைப்பிடித்தால் இரும்பைப்போன்ற உறுதி; நடக்கும்போது தரை அதிரும். அறுபத்தைந்து கிலோ எடை கொண்ட குமாராசாமி, ஒரு விளையாட்டு சாம்பியன். நூற்றுக்கணக்கா கிலோ எடைகளை துச்சமாக தூக்குவார்.

மயங்கிய நிலையிலிருந்து அவரை, மூவர் தூக்கி வந்தனர். கோவை அவினாசி ரோட்டில் நடந்த விபத்தில் அடிபட்டு விழுந்திருந்தார். ஒரு லிட்டருக்கு இரத்தம் வெளியேறிதில் மயங்கி விட்டார். நான் பார்க்கும் போது விபத்து நடந்த நேரத்திலிருந்து சுமார் ஒண்ணரை மணி நேரமாகியிருக்கலாம். மயக்கம் தெளியும் நிலையிலிருந்தார். தண்ணீரை முகத்தில் தெளித்ததும் கண் விழித்துக்கொண்டார். குளிந்த நீரைப்பருகிவிட்டு எழுந்து அமர்ந்தார். நடந்த விபத்து பற்றிய விபரங்களைக் கூறினார். “எனக்கு எந்த சிரமும் இப்போது இல்லை!” என்றபடி வீடும் திரும்பினார். அன்று மாலையே தன்னுடைய வேலையையும் தொடர்ந்தார். ஒரு லிட்டர் இரத்தத்தின் இழப்பு, ஒண்ணரை மணி அசதியை மட்டுமே கொடுத்து.

சில மாதங்களுக்குப் பின், அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். சில படிகள் கூட ஏறமுடியவில்லை. கடந்த மூன்று மாதங்களாக இதைப் போன்ற பலவீனத்தினால் செயல்பட இயலாமல், வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே படுத்து விட்டார். என்ன நடந்தது?

சகோதரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாயிற்று. சொத்துக்கள் பங்கு பிரிக்கப்பட்டன. மற்ற மூன்று சகோதரர்களும் இவருக்கு ‘துரோகி’ பட்டம் சூட்டினர். அக்கம்பக்கத்தினரும் அதையே நம்பி அவருடைய காதில் விழும்படி பேசச் செய்தனர். தன்னை யாரும நம்பாமல் இப்படி பேசுகிறார்களே என்ற ஆதங்கங்கள்; அதை அடக்க முடியாத மனக்குமுறல்; அதனால் உறக்க மின்மை போன்றவைகளைத் தொடர்ந்து நடப்பதற்கே பலவீனமானார்.

இதற்குமேலும், “அண்ணன் தம்பிகளை வஞ்சித்தால் நடக்க முடியாத அளவிற்கு வினை வந்துவிட்டது” என வசை மொழிகளும் காதில் விழுந்தன. அதில் மேலும் மனம் கொந்தளித்து அழுது கண்ணீரில் நனைவார்.

ஒண்ணரை மணி நேரத்தில் ஒரு லிட்டர் இரத்த்தின் இழப்பை, பலவீனத்தை சரிக்கட்டிய சக்தி கொண்டவருக்கு உண்டான மூன்று மாத பலவீனம், எத்தனை லிட்டர் இரத்தத்திற்கு சம்மாகும்? சுமார் ஆயிரம் லிட்டர் இரத்தம் இழப்பிற்கு மேலான பலவீனம் எனலாம்.

செய்யாத தவறக்கு அவர் மீது வசை பொழிகிறார்கள் என்பதனால் அவருடைய மனக்குமுறல் நியாயமானதுதான். மனக்குமுறல் அவரை செயல்படாமல் போகுமளவிற்கு பாதித்து அந்தோ பரிதாபன்! இது அவருடைய மனச்சிந்தனைகளின் பாதிப்பு; மனவலிமையின்மையின் விளைவு.

நூற்றில் தொண்ணூறு சதம் மக்கள் இது போன்ற மனக்குமுறல் ஏக்கம், குற்றவுணர்வுகள், உணர்ச்சி வயப்படுதல் ( Emotional), ஏமாற்றம், பரிதாபம் போன்ற உணர்வுகளால் வெவ்வேறு அளவில் பாதிக்கப்படிருக்கிறார்கள். கோபம், ஆத்திரம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களைப்போல இவைகளும் மனிதனைப்பாதிக்கும் முக்கிய அம்சங்களாகும். இதைப் போன்றவைகளை பரிதாபச் சிந்தனைகள் எனலாம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2012

நதிபோல ஓடிக்கொண்டிரு!!
க்யூரியாசிட்டி
எங்கே எனது உளி?
புரிதலும் சூட்டிகையும்
13 வது ஜனாதிபதி
புனித யாத்திரை கயிலயங்கிரி
மாடுகள் இங்கே! தீவனங்கள் எங்கே?
ஸ்மால் இஸ் ப்யூட்டிபுள்
ஒன்றாய் இருக்கிறோம்! நன்றாய் வளர்கிறோம்!!
ஆடையில் கவனம் – அவசியம்தானா?
மர்மமாய் இருக்கும் மனசு
மனமே தெளிவு பெறு
மாறுவேஷம்
கனவுக்குச் செயல் கொடுப்போம்
கற்றுக் கொடுங்கள்…..
யானை கதை
விநாடிகள் தோறும் வாய்ப்புகள்
உள்ளத்தோடு உள்ளம்