Home » Uncategorized » வெளிநாடுகளில் சென்று படிக்க உரிய வழிகள்

 
வெளிநாடுகளில் சென்று படிக்க உரிய வழிகள்


admin
Author:

வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பு கிறவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப் பித்து இடமும், கல்வி உதவித் தொகையும் பெறுவது முதல் இறுதியாக பயணம் புறப்பட கடவுச்சீட்டு (Passport) எடுப்பது வரை முந்தைய கட்டுரைகளில் கண்டீர்கள். வெளிநாடு செல்ல மேற்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய செயல் விசா பெறுவது.

விசா

விசா பெறுவது என்றால், எந்த நாட்டிற்குச் செல்ல வேண்டுமோ, அந்த நாட்டில் எவ்வளவு காலம் தங்கி இருக்கப் போகிறோம் என்பதற்கு அந்த நாட்டின் அனுமதியைப் பெறுவது. சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகங்களுக்கு விண்ணப்பித்து விசா பெறலாம். நீங்களே நேரடியாகவோ அல்லது அதற்காக உள்ள முகவர்கள் மூலமோ விசா பெறலாம்.

விண்ணப்பம்

பொதுவாக வேலைக்காக வெளிநாட்டிற்குச் செல்வதாக இருந்தாலும், அங்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருந்தால், விசா பெறுவது எளிதாகிவிடுகிறது. இல்லையெனில் விசா பெறுவது சிரமம்.

படிப்பதற்குச் செல்லுகிறவர்கள், அந்த நாட்டின் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத் துள்ளதற்கான ஆதாரம், உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரம் அல்லது படிக்கத் தேவையான செலவுகளுக்கு தொகை உள்ளதற்கான வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு ஆதாரங்கள், மூன்று புகைப்படங்கள் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து சம்பந்தப்பட்ட நாட்டின் கான்சலேட் ஜெனரல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்விக்கான உதவித்தொகையை பெற தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பின் விசா பெறுவதற்கான கூடுதல் தகுதியாக அது கொள்ளப்படும். அவ்வாறு உதவித்தொகை பெற தேர்வு பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல்களையும் விசா நேர்முகத்தின் போது கொண்டு செல்ல வேண்டும்.

தகவல் மையங்கள்

ஒருவர் அமெரிக்கா செல்வதாக இருந்தால் சென்னையில் உள்ள அமெரிக்கத் தகவல் சேவை மையத்துடன் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். அதேபோல மற்ற நாடுகளுக்குச் செல்ல விரும்புகிறவர்கள் சென்னையில், மும்பையில் மற்றும் தில்லியில் உள்ள அந்த நாட்டு அலுவலங்களுடன் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

குறிப்பாக, அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் படிக்கச் செல்கிறவர்கள், கல்வியாண்டு தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு (90 நாட்கள்) விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு முன்பாக விசாவுக்கு விண்ணப்பிக்கத் தேவை யில்லை.

பொதுவாக, மாணவர்களுக்கான விசா விரைவாக வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட அந்த மாணவர் உண்மையில் படிக்கத்தான் அந்த நாட்டிற்குச் செல்கின்றாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்த விபரங்களை விசா வழங்கும் அதிகாரிகள் அறிந்து கொள்ள விரும்புகின்றனர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கச் செல்லும்போது, விண்ணப்பதாரரிடம் காலாவதியாகாத கடவுச்சீட்டு இருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பே கடவுச்சீட்டு எடுத்து வைத்திருந்தால் அது காலாவதி ஆகாமல் உள்ளதா என்று பார்த்து புதுப்பிக்க வேண்டி இருப்பின் புதுப்பித்து வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பித்த அன்றே விசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விசா வழங்கப் படும். விசா கட்டணங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் அவ்வப்போது மாறுபடும். இதுகுறித்த அறிவிப்பு கள் நாளிதழ்களில் வெளியாகும். அதற்கேற்ப விசாவுக்கான கட்டணத்திற்கு உரிய தொகையை வங்கியில் கேட்புக்காசோலை (Demand Draft) ஆக்கி விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2002

சிந்தனைத்துளி
நிறுவனர் பக்கம்
வழிகாட்ட வருகிறோம்
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே
மனம் விரும்பும் பணம்
மாணவர் பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
இன்றைக்கும் காந்தீயம்
காவிரி: அறுவடை யாருக்கு?
உறவுகள் உணர்வுகள்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
விளம்பர உலகம் !வாய்ப்புகள் அதிகம்!
கேள்வி பதில் பகுதி