வாஸ்து

160.00

Description

அறிவு உற்பத்தியில் உலக வைப்பகம்             இந்நூல் உலக வங்கியின் செயல்பாடுகளைத் திறனாய்வுக்குட்படுத்துகிறது. மத்தியபிரதேசம் மாநிலத்தில் பணியாற்றும் தலைசிறந்த பொருளாதார வல்லுனரால் எழுதப்பெற்றுள்ள சிந்தனையைத் தூண்டும் நூல் இது.             World Bank என்பது இதுகாறும் உலக வங்கியென நூல்களிலும் பருவ கால இதழ்களிலும் குறிக்கப்பட்டுவந்தது. பல ஆண்டுகளுக்கு முன் Bank என்னும் சொல் அப்படியே எழுதப்பட்டு வந்தது. பின் பங்கியாகி சில காலத்துக்குப் பின் வங்கி என்று தமிழாக்கம் செய்யப்பட்டது. அதன் தூய தமிழ் வடிவமான வைப்பகம் என்ற சொல்லை இம்மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தியுள்ளார். பாராட்டத்தக்கது.             வளர்ச்சி பெற்ற, முன்னேற்றமடைந்த நாடுகள் தவிர பின்தங்கிய முன்னாள் காலனி நாடுகள் பலவற்றின் முன்னேற்றத்திற்கான அறிவையும் ஆலோசனையையும் வழங்கும் அமைப்பாகவும் உலக வைப்பகம் பல நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளது. இவற்றால் பின் தங்கிய நாடுகளுக்கு ஏற்படவிருக்கும் நலன்கள், தீங்குகள் ஆகியவற்றைப் பற்றி ஆயும் நூல் இது. நலன்களைவிடத் தீமைகளே மிகும். மக்கள் துன்ப துயரங்களிலும் வறுமையிலும் அடிமட்டத்துக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள் என்று இந்நூல் எச்சரிக்கிறது.             அறிவாளர்கள் தலையெடுத்து மக்களைப் போராட்டக் களத்தில் ஒன்றிணைக்கும்போது தான் சுரண்டலுக்கு எதிரான புரட்சிகரப் போராட்டம் வெற்றி பெறும் என்று கிராம்சி கூறுவது நினைவு கொள்ளத்தக்கது.             இவ்வாறான அறிவாளர்கள் உருவாக்குவதில், அறிவை விடுதலை செய்வதில், உற்ற படைக்கலனாக இந்நூல் பயன்படப்போவது திண்ணம். குமுக அக்கறை உள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று. ரூ.75 பாவை பப்ளிகேஷன்ஸ்     வாஸ்து (வானியலும், வாழ்விட வடிவமைப்பு விதிகளும்)             நெருக்கடி நிறைந்த இன்றைய நாளில் நிம்மதியைத் தரக்கூடிய இடத்தைத் தேடி மனித மனம் செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனந்தமும், அமைதியும் நிறைந்த அத்தகைய நிம்மதியை அந்தக்கால இருப்பிடங்கள் மனிதனுக்கு தந்தது என்றால் அது மிகையாகாது.             அந்தக்கால இல்லங்களின் வடிவமைப்பில் கடைபிடிக்கப்பட்ட அறிவார்ந்த விதிமுறைகளுக்கும், மனித மனதிற்கும் உள்ள தொடர்பை, மிக எளிதாக இக்காலத்திற்கு ஏற்றபடி தெளிவாக விளக்குகின்றது இப்புத்தகம்.             மனித சமூகத்தின் தொடக்கக்கால இனக்குழுக்கள் இயற்கையோடு கொண்ட உறவின் மூலம் பல பட்டறிவுகளைப் பெற்றன. தொடர்ந்து இயற்கை நிகழ்வுகளின் போக்குகள் மற்றும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வுசெய்து பதிவு செய்யத் தொடங்கினர். அத்தகைய பதிவுகள் பல்லாண்டு காலம், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் பலன் அளிப்பதை மட்டும் வரையறுத்து வைத்தனர். அப்படி அவர்கள் உறைவிடம் குறித்து பதிவு செய்து வைத்துள்ள மறைபொருளை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகின்றது இப்புத்தகம்.             இந்த புத்தகத்தை வாசிக்கக்கூடிய ஒவ்வொருவரும், இதுபோல் ஒரு வாழிடத்தை நாம் வாழும் காலத்தில் கட்டி வாழ்வாங்கு வாழ வேண்டும் என்கின்ற முடிவிற்கு வருவது நிச்சயம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாஸ்து”

Your email address will not be published. Required fields are marked *