வாஸ்கோடகாமா

55.00

Category: Tag:

Description

வாஸ்கோடகாமா மூன்று முறை போர்ச்சுகலில் இருந்து இந்தியாவின் மேற்குக் கரையோரம் உள்ள கள்ளிக்கோட்டைக்கு கடல் வழியாகவே வந்திருக்கிறார். ஆனால் அவர் முதன்முறையாக அந்தக் கடல் வழியைக் கண்டுபிடித்த பயண வரலாறே இந்த நூல். போர்ச்சுகலில் இருந்து கிளம்பி ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையோரமாகவே கீழே இறங்கி செயின்ட் ஹெலனா வழியா ஆப்பிரிக்காவின் கீழ்க்கோடியிலுள்ள நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டு மீண்டும் மேல்நோக்கிச் சென்று திடீரென்று கிழக்கில் திரும்பி கள்ளிக்கோட்டையை அடைந்திருக்கிறார்.     1497ம் வருட காலகட்டத்தை கவனத்தில் கொள்ளும்போது மிகவும் கஷ்டமான கண்டுபிடிப்பு தான் இது. எந்த நேரத்திலும் வழி தவறி மேற்கே போய்விடக்கூடிய அபாயம்; இதன் நடுவில் மாதக் கணக்காக வேற்று முகத்தையே பார்க்காமல், போகும் முடிவும் தெரியாமல் சில மாலுமிகளும், சில கப்பல் பணியாளர்களும் திரும்பத் தன் நாட்டுக்கே போய்விட வேண்டும் என்று கலகம் செய்தது; ஆங்காங்கே கரையில் இறங்கிய இடத்தில் அபாயம், உணவுப் பற்றாக்குறை, குடிநீர் பற்றாக்குறை, புயல் சீற்றத்தின் பயமுறுத்தல் என்று எண்ணிலடங்காத சோதனையைக் கடந்து கள்ளிக்கோட்டையில் கால் வைத்ததே சாதனைதான்.     சினிமாவுக்குச் சற்றும் குறையாத ட்விஸ்ட்டுகள் கொண்ட வாஸ்கோடகாமாவின் பயண அனுபவங்கள் உங்கள் சிந்தனையைச் சிலிர்க்க வைக்கும் என்பது நிச்சயம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாஸ்கோடகாமா”

Your email address will not be published. Required fields are marked *