“மண்புழு என்னும் உழவன்

70.00

Description

நீங்கள் இணையதளத்தில் மண்புழு என்று தேடினால் உங்களுக்கு கிடைப்பது சுல்தான் இஸ்மாயில் என்ற பெயர் தான். மண்புழுவையும் சுல்தான் இஸ்மாயிலையும் பிரிக்க முடியாது. மண்ணின் உயிராகவும், உரமாகவும் விளங்குவது மண்புழுதான். இன்னும் சொல்லப்போனால் மண்புழுவே உழவன். பசுமைப் புரட்சியின் முதல் பலி மண்புழு தான். ஒரு நிலம் காற்றோட்டமாகவும், நீர்மையுடனும் திகழ்வதற்கு அடிப்படை உயிரினம் மண்புழு தான். இதன் அடிப்படையறியாமல் பசுமைப்புரட்சி என்கிற பெயரில் நிலத்தில் உரங்கள் என்ற பெயரில் நஞ்சான உப்பைத் தூவினர். மண்புழுவின் உடலைச் சற்று எண்ணிப்பாருங்கள். அதன்மேல் இரசாயண உரங்கள் விழுந்தால் என்னவாகும்? ஒட்டுமொத்தமாக மண்புழுக்கள் பசுமைப்புரட்சியினால் அழிந்தன. நிலங்களில் இருந்த புதைவுத் தன்மை முற்றிலும் மறைந்து போயிற்று. டிராக்டர் இந்தியாவில் முதலில் அறிமுகமாகும் போது எல்லா வயல்களிலும் டிராக்டர் மண்ணில் புதைந்து போனது. ஏனெனில் நிலம் அவ்வளவு உயிர்ப்புடனும், சகதித் தன்மையுடனும் இருந்தது. இன்றோ மண்புழு அழிந்து நிலம் கெட்டிப்பட்டுவிட்டது. இன்று லாரிகளே நிலத்தின் மீது செல்கின்றன. பசுமைப் புரட்சியை நாம் எந்த காரணம் கொண்டும் ஆதரிக்க முடியாது. மீண்டும் நம் பாரம்பரிய பழைய இயற்கை விவசாய முறைக்கு திரும்புவதே மாற்று. அதன் முதல்படி மண்புழுவை உயிர்ப்பிப்பது தான். மண்புழுவை உயிர்பிப்பதற்கு நம்மிடம் நீண்ட காலமாக உள்ள செல்வம் சுல்தான் இஸ்மாயில் அவர்கள் தான். அவர்களுடைய மண்புழு புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. உலக அளவில் அவருடைய முக்கியத்துவம் தெரிவதற்கு இப்புத்தகமே காரணம். இப்புத்தகத்தை 2001ல் பூவுலகின் நண்பர்கள் தமிழில் மொழிபெயர்த்து ஓரியண்ட் லாங்மேன் பதிப்பத்தால் வெளியிடப்பட்டது. பின்பு 2008ல் பினாங்கு பயனீட்டாளர் சங்க வெளியீடாக வந்தது. மீண்டும் மண்ணின் சுழற்சியை போல பூவுலகின் நண்பர்கள் இப்புத்தகத்தை வெளியிடுகிறது. இப்புத்தகத்தை மண்ணை நேசிப்பவர்கள் யாரும் மறுக்கமுடியாது. இது புத்தகமல்ல. உங்கள் இதயத்தை காற்றோட்டமாக வைத்திருக்க உதவும் அற்புதமான உயிரினம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review ““மண்புழு என்னும் உழவன்”

Your email address will not be published. Required fields are marked *