பள்ளி முதல் கல்லூரி வரை

50.00

Category: Tag:

Description

பள்ளி முதல் கல்லூரி வரை… ஒவ்வொரு குழந்தையின் முக்கியமான காலகட்டமாகும். இந்தப் பருவத்தில் தான் குழந்தை ஒரு முழு மனிதனாக வளர்ச்சி அடைகிறது. வளர்ச்சி என்பது பல பரிமாணங்களில் ஏற்படுகிறது. உடல் வளர்ச்சி, உள்ள வளர்ச்சி, அறிவு வளர்ச்சி போன்ற வளர்ச்சிகள் பரிமளிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தான் பெற்றோர்களின் கடமையும், பொறுப்பும் மிகவும் அதிகமாகத் தேவைப்படும். ஆகவே, இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் உடல், உள்ள ரீதியான பிரச்னைகள் குறித்தும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.
பருவம் ஒரு பாரமா? எனப் பருவக்காலத்தைக் குறித்துப் பெற்றோர்கள் மிகவும் கவலைப்படுவது உண்டு. ஏனெனில் அந்த வயதில் தான் குழந்தைகளுக்கு ஒரு முறையான வழிகாட்டுதல்கள் இன்றித் தான் தோன்றித்தனமாய் இருக்கக்கூடிய வயதாம். அந்தக் காலத்தில் ஏற்படும் குழப்பங்கள், சிரமங்கள் போன்றவை பற்றியும் இப்புத்தகத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
குழந்தைகளின் பிரச்னைகள் குறித்து பெற்றோர்கள் மட்டும் தெரிந்து கொள்வது போதாது. குழந்தைகளின் கணிசமான நேரம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கழிவதால் ஆசிரியர்களும் அவர்களின் பிரச்னைகளைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்பது குறித்து இருசாரரும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் நிறைய இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.
குழந்தைகளைப் பற்றிய நூலிது, படித்து நல்ல இந்திய குடிமக்களை உருவாக்க வேண்டியது நமது கடமை.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பள்ளி முதல் கல்லூரி வரை”

Your email address will not be published. Required fields are marked *