Description
மனிதன் வாழ விரும்பினால் ஏதாவதொரு சிந்தனையின் மூலமே துயரங்களைச் சமாளிக்க வேண்டும். துயரங்களைச் சமாளிப்பதற்கும், நம்பிக்கையோடு முன்னேறுவதற்கும் பல விஷயங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. என்னதான் ஆயிரம் படித்து நம்பிக்கை கொள்ள முயற்சித்தாலும், பல நேரங்களில் வரும் துன்பங்கள் நம்பிக்கையை இழக்கத்தான் வைக்கின்றன. பல நேரங்களில் தெய்வ நம்பிக்கை கூட வெறுத்துப்போய் விடுகிறது. என்ன செய்வது, பிறந்தாகிவிட்டது; வாழ்ந்தாக வேண்டுமே?அது குருட்டு நம்பிக்கையோ மூட நம்பிக்கையோ, யார் எந்தப் பெயர் சொன்னாலும் சரி, நம்பிக்கை ஒன்றுதான் அதற்கு வழி. இந்த நூலைப் படித்ததும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்கிறார் ஆசிரியர்.
Reviews
There are no reviews yet.