திருப்பு முனைகள்

130.00

Category: Tag:

Description

திருப்பு முனை ஆசிரியர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் முன்மொழிகள், “நான் ‘திருப்பு முனைகள்’ என்ற இந்தப் புத்தகத்தை எழுதும் போது எதற்காக எழுதுகிறேன் என்ற ஒரு சிந்தனை எனக்குள் எழுந்தது. இந்தியர்களின் எண்ணங்களையும், கவலைகளையும், விருப்பங்களையும் என் கதை எதிரொலிப்பதாக சிலர் சொல்லக்கூடும். நானும் அவர்களைப் போலவே வாழ்க்கை ஏணியின் கீழ்மட்டப் படியிலிருந்து ஏறத்துவங்கினேன். படிப்படியாக உயர்ந்து பொறுப்பான பதவிகளைப் பெற்றேன். கடைசியாக இந்தியாவின் ஜனாதிபதி என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன். கடந்த பத்தாண்டுகளில் எனது வாழ்வில் நிறையச் சம்பவங்கள் நடந்துவிட்டன. அவற்றை எல்லாம் மீண்டும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. அவை நெஞ்சில் நிலைத்த அனுபவங்களாகவும் இருக்கலாம் என்றும் சிலர் சொல்லக்கூடும். எப்படியிருந்த போதிலும் நான் இந்த ‘திருப்பு முனைகள்’ எழுதுவதற்கான காரணம் சற்றே வேறுபட்டதாகும். ‘அக்னிச் சிறகுகள்’ ஏற்படுத்திய அமோக ஆதரவைக் கவனித்த நான், இந்தப் புத்தகமும் அவ்வாறே மேலும் சிலருக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்போதுதான் என் முயற்சி பலன் பெற்றதாக அர்த்தம். இந்தப் புத்தகத்திலிருந்து கிடைக்கும் ஏதாவது ஒரு விஷயம் ஒரு தனி மனிதரையோ அல்லது ஒற்றைக் குடுபம்பத்தையோ மேம்படுத்தியிருந்தாலும் போதும். அதுவே எனக்கு நிறைவளிப்பதாக அமைந்துவிடும். எனவே அன்பான வாசகரே, இந்தப் புத்தகம் உங்களுக்காக எழுதப்பட்டிருக்கிறது”

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருப்பு முனைகள்”

Your email address will not be published. Required fields are marked *