Description
தமிழ் இலக்கிய வரலாறு இந்திய மொழிகள் ஒவ்வொன்றின் இலக்கிய வரலாற்றையும் வெளியிட வேண்டும் என்று சாகித்திய அகாதெமி மேற்கொண்டுள்ள திட்டத்தின்படி, ‘தமிழ் இலக்கிய வரலாறு’ முதல் பதிப்பு முன்பு வெளியாயிற்று. மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த காலஞ்சென்ற பேராசிரியர் டாக்டர் மு. வரதராசன் இதனை எழுதினார். மு.வ. அவர்களே திருத்தியும் மாற்றியும் தந்த பிரதியை இருபத்தி ஒன்று பதிப்புகளாக இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. இருபத்தி இரண்டாம் பதிப்பு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தமிழ் எழுத்துக்களால் ஒளி அச்சு செய்து புதிய பதிப்பாக தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம். பேச்சுவழக்கில் உள்ள இந்திய மொழிகளுள் தமிழ் மிகப்பழமையானது; மிகப்பழைய இலக்கியச் செல்வமும் உடையது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சி இம்மொழியில் உள்ளது. இத்தனை பக்கங்களில் அமையவேண்டும் என்ற வரையறை காரணமாக, எல்லா நூல்களுக்கும் நூலாசிரியர்களுக்கும் போதுமான விளக்கங்கள் தர இயலாவிட்டாலும், இலக்கிய வளர்ச்சியில் காணப்படும் மாறுதல்களும் புதுப்போக்குகளும் சிறப்பியல்புகளும் ஆங்காங்கே தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. தொடக்கத்தில் தமிழ் மொழியின் வரலாறு அறிமுகமாக அமைந்துள்ளது. இறுதியில் இக்காலத்து இலக்கியம் பல்வேறு துறைகளில் பெற்று வந்துள்ள வளர்ச்சியும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. பொதுவாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி அறிய விரும்புவோர்க்கு இந்நூல் பயன்படுவதாகும். சாகித்திய அகாதெமியின் திட்டப்படி இந்நூல் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. இதன் தெலுங்கு, கன்னடம், ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாகி உள்ளன. மற்ற மொழியார் தம்தம் மொழியின் வாயிலாகவே, தமிழ் இலக்கிய வரலாற்றைக் கற்று அறிவதற்கு இந்நூல் உதவுவதாகும். இதனால் ஏற்படும் மொழியுறவு, இலக்கிய ஆர்வம் கொண்ட உள்ளங்களைப் பிணைக்க வல்லதாகும். இத்தகைய உறவும் பிணைப்பும் நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் மிகத் தேவையானவை
Reviews
There are no reviews yet.