சிந்தனை மலடுகள்

60.00

Description

“அரசியல் ஓர் சாக்கடை” என்று ஓர் பள்ளிக்குழந்தை கூட மேற்கோள் காட்டி விளக்கும் நிலையில் இன்று நம் அரசியலும், அரசியல்வா(வியா)திகளும் உள்ளனர் என்பதில் நாம் சிறுமையடைகிறோம். அன்றைய நம் அரசியல் தலைவர்களும், அவருடன் வாழ்ந்தவர்களும் நாள் முழுவதும் உழைத்து, பல நாட்கள் பட்டினி, ஒரு நாள் உணவென்று அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரம் எதற்காக? தங்களால் முடியாவிட்டாலும் தங்கள் தலைமுறைகளேனும் வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக. ஆனால்… இன்றைய நிலைமை?
தாய்நாட்டையே தீக்கிரையாக்கத் தீவிரவாதிகள்; மதங்களை மத யானைகளாக்க மதவாதிகள்; தூய துறவறத்தில் நஞ்சைக் காக்கும் நாகப் பாம்புகள்; நுனி நாக்கிலே தேன் தடவி, முகத்திலே கருணை வைத்து, கைகளை வெண்மையாக்கி, பல விரல்களில் கருப்பு மை தடவி, பலர் முகங்களில் கரியைப் பூசும் அரசியல் வியாதிகள்; சண்டைக் கோழிகளாய் மண்டை உடைத்துக் கொள்ளும் மக்கள்; இவற்றிற்கான பொதுவான காரணங்களும், இத்தகைய சமூகக் கேடுகளின் பின்விளைவுகளும், இது போன்ற முரண்பாடுகளைக் களைவதற்கான வழிமுறைகளும் “சிந்தனை மலடுகளில்” நன்கு விளக்கப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மக்களால் ஆளப்படுவதே மக்களாட்சியே அன்றி மக்களை ஆள்வதற்காக அல்ல மக்களாட்சி என்பதைப் பாமரரும் புரிந்து கொள்வதற்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலைப்புரிக , பயன் பெறுக

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிந்தனை மலடுகள்”

Your email address will not be published. Required fields are marked *