குழந்தை வளர்ப்பு இரகசியங்கள்

55.00

Description

டாக்டர் அனுராதா கிருஷ்ணன் அவர்கள் வேளாண்மை படிப்புத் தளத்தில், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறையில் முனைவர் பட்டத்தைப் பெற்று, பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரைக்கால் இணைப்பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

மனோநிலை மற்றும் உயிர்ச்சக்தியை மேம்படுத்தும் சக்தி மருத்துவமான மலர் மருத்துவம் (Flower Medicine), உடல் பலத்தை மேம்படுத்தும் சத்துணவு மருத்துவம் (Nutritional Medicine), கழிவுத் தேக்கத்தை அகற்றும் அக்குபிரசர் (Accupressure) மருத்துவம், உயிர் உடல் இணக்கத்தை மேம்படுத்தும் இயற்கை மருத்துவம் (Naturopathy) மற்றும் உடல் நலம் கெடுவதில் இருந்து காக்க உணவு மற்றும் பழக்க திருத்தம் (Corrective Measures) ஆகியவற்றைக் கொண்டு, ஆயிரமாயிரம் மக்களை நோயிலிருந்து விடுவித்து, மீண்டும் நோய்வசம் சிக்காதிருக்கத் தேவையான இரகசியங்களையும் அளித்து, உன்னதமாய் பணியாற்றுகிறார்.
இன்றைய தனிக்குடும்ப வாழ்வியல் சூழலில் குழந்தை வளர்ப்புக்குத் தேவையான ஒத்தாசையும் வழிகாட்டுதலும் இல்லாமல் திண்டாடும் நிலையே அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இப்புத்தகம் ஒரு அற்புத வழிகாட்டியாக அமையும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “குழந்தை வளர்ப்பு இரகசியங்கள்”

Your email address will not be published. Required fields are marked *