Description
ஆண்களுடைய தேவைகளும், எதிர்பார்ப்புகளும் அவர்கள் சொல்லாமலேயே நிறைவேறிடும். ஆனால் பெண்களுடைய எதிர்பார்ப்புகள், எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும், கேட்கப்படாத மெல்லிசையாகவே ஒலித்துக் கொண்டிருக்கும். அப்படி என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்ற வினாக்களுக்கு விடை சொல்லும் நூல்.ஒவ்வொரு சூழ்நிலையிலும் மனைவி என்பவள் என்ன எதிர்பார்க்கிறாள், கணவன் எப்படியெல்லாம் நடந்து கொண்டால் இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்குமென்று, பலரிடம் கருத்துகள் கேட்டறிந்து எழுதப்பட்ட நூல். காலம் முழுவதும் இனிறய வாழ்வைப் பகிர்ந்து கொள்ளும் ஓர் புனித உறவே கணவன் மனைவி உறவாகும். அப்படிப்பட்ட உறவினில் எந்த ஒரு விரிசலும் இல்லாமல், கண்ணாடியைப் போல் பாதுகாக்க வழிகாட்டுகிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.