Description
படகு படைத்து இயக்கியவர் மகனாய் ராமேஸ்வரம் தீவில் பிறந்து
இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த மாமனிதன்
ஆவுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் அப்துல்கலாம்…
எட்டாக்கனியாய் இருந்த உயர்நிலைக் கல்வி வரம்
ஆரம்பப் பள்ளி ஆசான் தந்த ஊக்கத்தால் வாய்த்தது
பாலகன் கலாமுக்கு…
எளிய, ஆனால் ஆன்மிக வளம் கொழிக்கும் குடும்பப் பின்னணி,
ஆசான்களின் வழிகாட்டுதல், தணியாத தேடல் தாகம்
அணையா தீபமாய் சுடர்விடும் தேச பக்தி…
இவையே கலாமின் விண்ணளாவிய சாதனைகளுக்கு உந்து சக்தி…!
இந்திய விண்வெளி மற்றும் தேசத்தின் பாதுகாப்பு வரலாற்றோடு இவரது
வாழ்க்கையும் ‘பிணைக்கப்பட்டுள்ளதை’ அக்னிச் சிறகுகளில் காண்கிறோம்.
இந்திய பொருளாதாரத்தைச் செழிக்க வைக்கும்
நடைமுறைத் திட்டங்களை இந்தியா 2020;
புத்தாயிரம் ஆண்டிற்கான தொலைநோக்கில் அறிகிறோம்.
இந்திய தேசக் குழந்தைகளின், இளைய சமுதாயத்தின்
இணைற்ற ஆற்றலில் நமது எதிர்காலம் –
2020ல் வளர்ச்சியடைந்த இந்தியா – பிணைக்கப்பட்டுள்ள
உண்மையை ஆராய்ந்து சொல்கிறார்
எழுச்சி தீபங்களில், இந்திய புனர் நிர்மானச் சிற்பி
டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம்.
ஒவ்வொருவரின் உள்ளத்திலும்
நம்பிக்கைச் சுடர் ஏற்றும்
படைப்பே ‘எழுச்சி தீபங்கள்’
Reviews
There are no reviews yet.