ஊமையன் கோட்டை

70.00

Description

இந்தக் கதை கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாளிலிருந்து 15 மாதங்கள் கழித்து ஆரம்பமாகிறது. ஊமைத்துரையே இந்தக் கதையின் நாயகன். ‘ஊமையன் கோட்டை’ என்றவுடன் ஊமைத்துரை காலத்தில் அவர் தங்கியிருந்ததாக பேசப்படும் திருமயம் கோட்டைதான் நமது நினைவிற்கு வரும். ஆனால் கதைக்களம் கயத்தாறு, ஒட்டநத்தம் கிராமங்களை ஒட்டிய பகுதியின் 18ம் நூற்றாண்டுக்கே உரித்தான சரித்திர நிகழ்வுகளுடன் பயணிக்கிறது. ஊமைத்துரை மேற்பார்வையில் புதிதாக பாஞ்சாலங்குறிச்சியில் எழுப்பிய கோட்டையைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் ஒரு குழப்பமான ஆரம்ப காலகட்டத்தில் பெரிய மருது… சின்ன மருது… ஊமைத்துரை இடையே இருந்த தோழமையும்… மற்றும் அப்போதே பதவிக்காக ஆங்கிலேயர்களின் கவனிப்பில் விலைபோன மாந்தர்கள்… அதேசமயம் எதிர்த்துப் போராடிய இளைஞர்களது வீரம், மற்றும் வீரமங்கையரின் காதல் என பலவிதமான உணர்வுகளையும் கவிஞரின் வரிகளில் காண முடிகிறது. கவியரசு கண்ணதாசனின் ‘சிவகங்கைச் சீமை’ போல, ‘ஊமையன் கோட்டை’ ஒரு திரைக்காவியமாக உருவாக வேண்டும் என்ற கவிஞரின் விருப்பத்திற்கிணங்க திரைக்கதையாக எழுதப்பட்டும், பின்னர் சில காரணங்களினால் கைவிடப்பட்டது. பிறகு கவிஞரின் ‘தென்றல்’ இதழில் தொடர்கதையாக வெளிவந்து வாசகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற வீரத் தமிழர்களின் வாழ்வியல் கலந்த ஒரு வரலாற்றுக் காவியம்… இப்போது புத்தக வடிவில்…

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஊமையன் கோட்டை”

Your email address will not be published. Required fields are marked *