இயேசு காவியம்

150.00

Category: Tag:

Description

உலகை வாழ்விக்க வந்த உலகப் பெருஞ்சுடர் நாயகன் இயேசு பெருமானின் ஒப்பற்ற தியாக வரலாற்றினை தமிழ்மொழியில் கவிதைக் காவியமாக ஆக்கித்தந்த கவியரசு கண்ணதாசனின் திருப்பணி எந்நாளும் வணங்குதலுக்குரியது. குறிப்பாக 21ம் நூற்றாண்டில் உலக மயமாதல், தனியார் மயமாதல், தாராள மயமாதல் எனும் கொள்கைக்குப் பிறகு திசைமாறிப் பயணிக்கும் மனித குலத்திற்கு கலங்கரை விளக்காக வழிகாட்டி நம்மை நற்செயலில் கரைசேர்த்து கருணை ஒளியாகத் திகழும் இறைமகன் இயேசுவின் திருவாழ்வை கவிதை வடிவில் நாம் வாசிக்கின்ற பொழுது கவியரசு கண்ணதாசனின் உயிர்ப்புமிக்க வரிகளின் உன்னதத்தை உணர முடிகிறது. தொழில்நுட்ப பெருக்கமும், வல்லாண்மை ஆதிக்கப்போட்டியாலும் மானுட வாழ்வு சிதைந்து, போரும் பூசலும் பெருகிவரும் இன்றைய சூழலில் எவ்வுயிரையும் தம்முயிராகக் கருதி அன்பை விதைத்து, அன்பை வளர்த்து, மானுட நேசிப்பின் புனிதத்தை புவியுலகிற்கு எடுத்துரைக்கும் இயேசுவின் அன்புப் பாதையை இளைய தலைமுறையினர் பின்பற்ற வேண்டும். அதற்கு இந்த நூல் பெரிதும் துணைபுரியும். உலகம் போற்றும் உயர் காவியத்தை முதன் முதலாக எளிய கவிதை வடிவில் வலிமையான சொல்லோவியமாய் இசைப்பா உருவில் வடித்து, வாசிப்போரையும் கவிஞராக மாற்றிவிடும் ஈர்ப்பு காவியத்தாயின் இளையமகன் கண்ணதாசனுக்கே உரிய தனிப்பெருஞ்சிறப்பு. சமய இலக்கியங்களுக்கு பெயர் போனது தமிழிலக்கியம். இதுபோன்ற மானுடம் போற்றும் உலகக் காவியமான இயேசு காவியத்தை தமிழில் எழுதி தமிழ் மொழிக்கும், தமிழினத்திற்கும், உலகத் தமிழர்க்கும் பெரும் புகழையும் நற்பேற்றினையும் கவியரசர் சேர்த்துள்ளார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இயேசு காவியம்”

Your email address will not be published. Required fields are marked *