இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை

65.00

Category: Tag:

Description

நிலத்தைப் பண்படுத்துவது, விதைப்பு, பராமரிப்பு, அறுவடை மற்றும் விற்பனை என்று இயற்கை வேளாண்மையில் அ முதல் ஃ வரை முழுமையாக விவசாயிகளுக்குக் கற்றுத்தரப்படுகிறது. ஏதாவது ஒரு இயற்கை வேளாண் பண்ணையில், சுமார் முப்பது விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட குருகுலவாசம் போல மூன்று நாட்களும் காலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாமல் பயிற்சி நடத்தப்படுகிறது. இயற்கை உரத் தயாரிப்பு, பூச்சி விரட்டிகள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள், தேனீ வளர்ப்பு, பூச்சி மேலாண்மை… என்று அனைத்துவித தொழில்நுட்பங்களும் பயிற்சிக்கு வரும் விவசாயிகளுக்கு அத்துப்படியாகின்றன. பயிற்சிக்குப் பிறகு, ஊர் திரும்பும் ஒவ்வொரு விவசாயியும் ஒரு வல்லுனராகவே வலம் வருவார்.     ஒவ்வொரு வாசகரும் தாமே பயிற்சியில் பங்கேற்ற அனுபவத்தைப் பெறும் அளவுக்கு இது அமைந்திருக்கிறது என்பதற்கு வாசகர்களின் கடிதங்களே சான்று. இது புத்தகமல்ல… களம் என்பதைப் படித்து முடித்ததும் நீங்களும் உணர்வீர்கள்

Reviews

There are no reviews yet.

Be the first to review “இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை”

Your email address will not be published. Required fields are marked *