Description
அன்றாட வாழ்வில், உடையில், உணவில், இருக்கும் இடத்தில், எண்ணத்தில், பேச்சில், செயல், பழக்கவழக்கங்களில், குடும்ப சமுதாயத் தொடர்புகளில் உள்ள பொதுத் தன்மைகளை அவரவர்கள் மனமுவந்து போக்கிக் கொள்ள வேண்டும். அதுவே நாகரிகமாகும்.
“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்தச் சகத்தினை அழித்திடுவோம்” என்ற முழக்கத்தில் பங்கு கொள்வதை விட எளிய உடையும், எளிய உணவும் அவற்றை வீணாக்காத தன்மையும் வளருமானால் அதுவே சிறந்த நாகரிகமாகும்.
நம்முடைய பொருளைப் பேணிக் காப்பது போலவே அரசாங்கப் பொருள்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற பொதுமை உணர்வு பெருக வேண்டும். இவற்றிற்கெல்லாம் மூல வித்தாக இருக்கின்ற, நமக்குள்ளே மறைந்து கிடைக்கின்ற “தன்னலத்தை” அகழ்ந்து எடுத்து எறிய வேண்டும். எரித்து விடவும் வேண்டும்.
நாட்டின் இன்றைய நிலையில் தனிமனித திருத்தத்தை எதிர்பார்ப்பதைவிட, வற்புறுத்துவதை விட, தலைவர்களும் தலைமையில் இருப்பவர்களும் திருந்த வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தில் எது எது முன்னேற்றக் கூறுகள் என்பதை எண்ணிப்பார்த்து வரிசைப்படுத்தி மகிழ்ச்சி அடைய வேண்டும். அந்த மகிழ்ச்சி நிலைக்க தாங்கள் வந்த பாதையில் உள்ள முட்களை அகற்றி பயணத்தைத் தொடர வேண்டும். முன்னேற்றம் நமக்கு வெளியே இல்லை. நமக்கு உள்ளே இருக்கிறது. அதனைக் கண்டு உணர்ந்தால் அதுவே முன்னேற்றம், நாகரிகம் என்பதை ஆசிரியர் சுவைப்பட இந்நூலில் கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.